பெண் என்பவள் பூமி தாயை போன்றவள்

https://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/pm-30327-large.jpg
https://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/pm-30327-large.jpg

.அப்படிப்பட்ட ஒரு பெண்மையை  கை நீட்டி அடிப்பவன் எவனும் மனிதன் கிடையாது. எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ அந்த நாடும் ஊரும் வீடும் சிறப்பு பெறும்.அப்படி எங்காவது அந்த பெண்மைக்கு இழுக்கு வந்தால் தட்டி கேட்பது ஒவ்வொரு மனிதனின் கடமை அந்த வகையில் எனது இந்த கட்டுரை.

திருப்பூர் சாமளாபுரத்தில் நடந்த காவல்துறை ஈடுபட்டஅராஜக செயலில்  ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெறித்தனமாக தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதேபோல பண்ணாரி மாரியம்மன் கொண்டம் திருவிழா நிகழ்வில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப்பயன்படுத்தி உடனடி தரிசனம் மேற்கொள்கின்றனர். உடனடி கொண்டம் இறங்குதல் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.ஆக கடவுள் என்பவர் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும்,பணம் படைத்தவர்களுக்குமே முன்னுறுமை படைத்தவரா?அரசியல் அதிகாரம் மற்றும் உங்களுடைய பணக்கார தனத்தை ஆலயத்தில் காட்டி தவறு செய்ய வேண்டாம்.அப்படி செய்து  மேலும் பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் .அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்.

சாமாண்ய மக்கள் இரவு முதல் அடுத்தநாள் வரை கால்கடுக்கவும் வெயிலிலும் நின்று கொண்டும் சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த இடங்களில் எதாவது வழி கிடைக்காதா என்று செல்கின்ற பெண்களை காவல் துறை நடத்திய அராஜகம் சொல்ல முடியாத மிகப்பெரிய தவறு.

ஆக இப்படி தமிழ் நாட்டில் வெளியில் தெரியாமல் எத்தனையோ அராஜகங்கள் நடக்கலாம்.ஒரே ஒரு இரும்பு பெண்மணி ஆட்சியில் இருந்து இருந்தால் இது நடக்குமா? அல்லது ஒரு திறமையான நிர்வாகம் உள்ள அரசு இருந்தால் இது போன்ற தாக்குதல் நடக்குமா ?

அப்பாவி பொதுமக்கள் மீது அடக்குமுறை நிகழுமா?

இந்த தாக்குதல் நடக்க யார் இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது.?

பொதுமக்களில் ஒருவனாக இருந்து சொல்கின்றேன் திருப்பூர் சாமளாபுர சம்பவத்தில் ஈடுபட்ட அந்த காவல் துறை அதிகாரி நிரந்தர பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.இனியொரு சம்பவம் இனிமேல் நிகழ கூடாது என்பது எனது விருப்பம்.

மேலும் விபரங்களுக்கு,
#vastu_consultant_in_tamilnadu,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
இதைப்படிக்கும் உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனதுநெஞ்சார்ந்த நன்றிகள்.

ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!