ஶ்ரீ என்று சொல்லக்கூடிய இறைசக்தியின் அடையாளம் என்ன?

 ‘பாராசூட் எதற்காக தயாரிக்கப் பட்டது? 

வசந்த ருது என்று சொல்லக்கூடிய இந்த மாதத்தில் இரண்டு மலர்கள் சிறப்பாக மலரும்.இந்த இரண்டு மலர்களுமே உலகின் இயக்கமாக இருக்கக்கூடிய இரு பெரும் சக்தி தெய்வங்களின் அடையாளமாக கூட சொல்லலாம்.அந்தவகையில் ஶ்ரீ என்று சொல்லக்கூடிய இறைசக்தியின் அடையாளமாக மல்லிகை விளங்குகிறது.

இருந்த இடத்தில் மலர்ந்தபடியே “இருட்டிலும் தன்னை அடையாளப்படுத்தும்” வெண்மை நிறத்தாலும், நறுமணத்தாலும் எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு ஈர்த்துவிடுகிறது மல்லிகை.

ஒரு நாள் வாழ்க்கைக்கே தன் நிறத்தாலும், மணத்தாலும் பிறர் மனதில் பதிவை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது மல்லிகைப் பூ.

சராசரியாய் அறுபது முதல் எழுபது ஆண்டுகள் வாழ்நாட்களைக் கொண்ட நாம் இந்த மண்ணில் நம் திறத்தாலும் செயலாலும் ஒரு நிலைத்த பதிவை ஏற்படுத்த வேண்டுமல்லவா?

இந்த உறுதிப்பாடு நமக்குள் வந்துவிட்டாலே போதும். சராசரியாய் போகும் நம் வாழ்க்கைப் பாதையை திசைமாற்றி இலட்சியப் பாதையில் நடக்கத் தொடங்கி விடுவோம்.

நம் இலட்சியம் எது என்று எப்போது அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ உடனடியாய் அதை உருவகப்படுத்த வேண்டும்.

செயல்பாட்டில் இறங்குவதற்கு முன், நாம் வெற்றியை பெற்றது போலவும், வெற்றிக்குப் பின் நம் மீதான சமூகத்தின் பார்வை மிக உயர்ந்து நாம் தனித்து தெரிவது போலவும், நம் சாதனையால் பல்வேறு நற்பயன்களை நாமும் நம்மைச் சார்ந்தோரும் அனுபவிப்பது போலவும் வரிசைப்படுத்தி கற்பனைக்கு கொண்டு வரவேண்டும்.

ஒன்றை கருத்தில் கொண்டு செயலில் இறங்குவதற்கு முன்பே இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்? எனும் கேள்வி ஒரு மூலையில் எழும். அப்படி கற்பனை செய்துதான் பாருங்களேன். எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகின்றதென்பதை உணர்வீர்கள்.

யாரொருவர் தன் வாழ்வின் உயரங்களை அடைவதற்கு முன்பே தன் மனத் திரையில் படம் போட்டுப் பார்க்கிறாரோ அவர்மட்டுமே அவற்றை அடைவதற்கான வழிவகைகளைக் பெறமுடியும்.

யாராயிருந்தாலும் தம் ஆற்றல் இவ்வளவுதான் என்று ஒரு முடிவிற்கு வந்து விடுகிறார்களென்றால் அவர்கள் தங்களைப் பற்றி தவறாக எடைபோட்டு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆம். ஒவ்வொருவருமே அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை விடவும் பலமடங்கு ஆற்றல் பெற்றவர்கள்தான் என்பது விஞ்ஞானப்பூர்வமான உண்மை.

பிறகேன் அவ்வளவு ஆற்றலையும் பொருளீட்டும், புகழீட்டும் செயல்களாக, தனக்கும் பிறருக்கும் பயன்படும் சாதனைகளாக, புதிய புதிய கண்டுபிடிப்புகளாக மாற்றாமல் விதிக்கப்பட்டதாய் நினைத்து கடிகார முட்களைப்போல் ஒரு எல்லைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்?

நீங்கள் நினைத்தது சரிதான். ஏதோ ஒரு தயக்கம்.

இனம் புரியாத பயம் அல்லது இனம் புரிந்த பயம்.

வென்றவர்களைப் பற்றிய ஏக்கம் இருந்தாலும் தோற்றவர்களைப் பற்றி காதுகளில் விழும் விமர்சனம்.

தனக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாதென்று அடித்தளமற்ற எச்சரிக்கை உணர்வு.

‘பொருளாதாரமில்லை’என்று முயற்சிக்காத முன் முடிவு.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் கோளாறு ஏற்படும்போது அதிலிருந்து பாதுகாப்பாகக் குதித்துத் தப்பிக்க பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில்தான்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/30let_04.jp
chennai vastu

’ எனும் பொருள் வடிவமைக்கப்பட்டது. உருவாக்கப் பட்டது ஒரு நோக்கத்திற்காக என்றாலும் அவசர காலங்களில் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விமானத்திலிருந்து தரைப்பகுதிக்கு கொண்டு சேர்க்கவும் விண்ணிலிருந்து திரும்பும் விண்வெளிக்கலங்கள் பாதுகாப்பாக தரையிறங்கவும் பாராசூட் பயன்படுத்தப் படுகின்றது.

நம் ஆற்றல்களுக்கு அளவுகோல்களை நிர்ணயிப்பதை விட்டுவிட்டு நாம் கற்பனை செய்து பார்த்த நம் சாதனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கும்போதுதான் சிகரத்தை அடைவதற்காக  காலெடுத்து வைக்கிறோம்.

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment