உலகம் உங்களை நம்ப நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சனிக்கிழமை வரும்போது உங்களுக்கு ஒன்று கொண்டு வருகிறேன் 

என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்! என்று யாராவது சொன்னால், அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரது வார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைப் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான்.

ஒருமனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை அனைத்தையும் மீட்கலாம். ஆனால், நம்பகத்தன்மையை இழந்துவிட்டால்
பின்னர் எதுவுமே இருக்காது. நீங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நம்பகமானவராய் நிலைபெறவென்று சில வழிமுறைகள் உண்டு:

சொன்ன சொல்லைக் காப்பது:

நாம் சொன்ன சொல்லைக் காக்க முடியாமல் நம்மையும் மீறிய காரணங்கள் ஏற்படலாம். அவற்றையும் மீறி, சொன்ன சொல்லைக் காப்பதே சிறந்தது.

சின்ன சொல்லையும் காப்பது:

ஒருவர் பெரியதோர் உதவிகேட்டு உங்களிடம் வருகிறார். சனிக்கிழமை சாயங்காலம் எட்டுமணிக்கு நேரில் வந்து செய்து கொடுப்பதாய் சொல்கிறீர்கள். உங்கள் வீட்டு சீ.டி.-யில் அபூர்வமான பாடல் ஒலிக்கிறது. வந்தவர்கள் ஆவலுடன் வினவும்போது, “இதென்ன பிரமாதம்! சனிக்கிழமை வரும்போது உங்களுக்கு ஒன்று கொண்டு வருகிறேன் ” என்கிறீர்கள். சனிக்கிழமை பெரிய உதவியை செய்து தரப்போகும் போது இந்தச் சின்ன விஷயத்தையும் மறவாமல் செய்து கொடுப்பீர்களென்றால் உங்கள் மதிப்பும் நம்பகத்தன்மையும் பல மடங்குகள் உயர்ந்துவிடும்.
வார்த்தை தரும்போது கவனமாய் இருங்கள்:

ஒன்றை தருவதாகவோ ஓர் இடத்திற்கு வருவதாகவோ வார்த்தை தரும்போது, நாள் – நேரம் – இடம் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். அதற்கு முன்னால், அந்த விஷயத்தை உங்களால் செய்து தரமுடியுமா என்று ஒருமுறைக்கு இரண்டுமுறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். அதன்பின்னால், உங்களால் முடியும் என்பதையோ முடியாது என்பதையோ தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.

வார்த்தை தவறினால்:

உங்களையும் மீறி எப்போதாவது சொன்ன சொல் தவற நேர்ந்தால், முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல் தந்து வருத்தமும் தெரிவியுங்கள். அது உங்கள் தொழில் சார்ந்ததாக இருந்தாலும் சரி, நீங்கள் செய்து தரும் உதவியாக இருந்தாலும் சரி. நாம் தந்த வார்த்தையை மீற நமக்கே உரிமையில்லை என்பதை மனதில் உணர்ந்து, கூடியவிரைவில் அதனை செய்து தர முயலுங்கள்.

நம்பகத்தன்மைகள் கொடுக்கும் நன்மைகள்:

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/images-3.jpg
chennaivasthu

உயர்ந்த இடங்களில் இருப்பவர்கள் உங்கள் மேலுள்ள நம்பிக்கையால் உதவுவார்கள்.

உங்கள் பெயரை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள்

உங்கள் வட்டம் விரிவடையும்.

உங்களால் ஒருசில நேரங்களில் சரியான நேரத்தில் செய்து தரமுடியாதபோதும் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் மேல் உங்களுக்கே நம்பிக்கை அதிகரிக்கும்!

           நன்றி வணக்கம்

நான் தற்சமயம் வாஸ்து வேலையாக தமிழகம் எங்கும் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன் என்றால் இதற்கு காரணம் நான் சொன்ன சொல்லை காப்பதும்,சரியான நேரத்திற்கு எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வதும், எங்கும் திறந்த மனதுடன் உண்மையை மட்டும் பேசுவதும்,எல்லோருக்கும் என்னால் எனது மனதிற்கு விரோதம் இல்லாமல் நம்பிக்கையோடும் இருப்பதுமே எனது வெற்றிக்கும் காரணம் என்பதனை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment