https://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/எருக்கன்-thamil.co_.uk_.jpg

எருக்கினை தலவிருஷ்சமாக இருக்கும் ஆலயத்தின் சிறப்பு என்ன?

chennaivasthu
chennaivasthu

எருக்கினை தலவிருஷ்சமாக இருக்கும் ஆலயத்தின் சிறப்பு என்ன?

 

சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு.அந்த வகையில் நவகிரகங்களில் சூரியனுக்கு உரிய விருட்சமாக எருக்கு உள்ளது.அப்படிப்பட்ட எருக்கு ஸ்தல விருட்சமாக ஆடுதுறை சிவசூரிய ஆலயம்,திருஎருத்தக்கம் புலியூர்,திருகானாட்டு முள்ளுர்ஆகிய சிவபெருமான் ஆலயங்கள் உள்ளன.
மருத்துவ மகத்துவம் கொண்ட தாவரங்கள் இறைவன் குடியிருக்கும் ஆலயத்தின் விருட்சமாக கொலுவிருக்கும்போது அதன் சாந்நித்யம் பன்மடங்கு உயர்ந்து இருக்கும் என்கின்றனர் முன்னோர்.

தலவிருட்சங்களில் மிகப்பெரிய சூட்சுமம் உள்ளது .அதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.இன்றைக்கும் கூட தொழு நோய் இருந்தால் எருக்கன் இலையில் தயிர் அன்னம் ஒரு 78 நாட்கள் அருந்தினால் தொழுநோய் குணமாகும் என்று நமது சித்தமருத்துவம் கூறுகின்றது.ஆக ஒவ்வொரு தல விருட்சங்களையும் ஒரு காரணகாரியமாக தான் நமது முன்னோர்கள் வைத்து உள்ளனர்

‘தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு… என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி… அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது, எருக்கு.

இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் ‘ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.