விநாயகர் சிலைகள் ஏன் ஆற்றில் கரைக்கப்படுகின்றன?

vinayagar chaturthi
vinayagar chaturthi

அறிவியல் உண்மைகள்.

 நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களிலும் ஒரு அறிவியல் உண்மை மறைந்து இருக்கும். பொது நலன் கருதியே ஒவ்வொரு காரியமும் செய்துள்ளனர்.வினாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது என்பதும் ஆற்றில் தண்ணீர் தங்கி செல்ல வேண்டும் நிலத்தடி நீர் ஆதாரம் பேறுக வேண்டும் என்பதும் காரணமே.

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல் மற்றும் களிமண்களையும் அடித்து கொண்டு சென்று விடும்.அதனால் ஆவணி மாத சதுர்த்தி திதி அன்று களிமண் கொண்டு சிலைகள் செய்து ஆற்றில் கரைத்துள்ளனர்.செய்த களிமண் வினாயகரை ஐந்து நாட்கள் கழித்து பின்னர் கரைப்பதற்கு காரணம் வினாயகர் சிலைகள் ஈரமாக இருந்தால் ஒரே இடத்தில் ஆற்றில் போடும் இடத்திலேயே கரைந்து விடும் கொஞ்ச தூரம் மிதந்து செல்ல வேண்டும் எல்லா இடத்திலும் களிமண் பரவி நிலத்தடி நீர் மட்டம் பெறுக வேண்டும் என்பதற்காக செய்தார்கள். அதனால் நதிகளில் மட்டுமே கரைத்து வந்தனர் ஆனால் இன்று எதற்காக என்று தெரியாமல் கடலில் கரைத்து வருகின்றனர். தற்காலத்தில் செயற்கை சாயம் வண்ணங்கள் கொண்டு ரசாயணம் கொண்டு உருவாக்கபடும் வினாயகர் சிலைகளை ஆற்றில்,  குளத்தில்,கடலில்,கரைப்பதால் அதன் நீர் மாசு படுகிறது.எந்த செயற்கை பொருள்களும் சேர்க்காமல் சட்டி பானைகள் செய்யும் களிமண்ணால் 30வருடங்களுக்கு முன்பு கிராம ஆலயங்களில் யசகடம் என்று சொல்லக்கூடிய குதிரை சிலைகளை வெறும் களிமண்கொண்டு செய்வார்கள். அதுபோல செய்யும் போது இறைவழிபாடும் இயற்கையானதாக இருக்கும்.

  சாயம், ரசாயண வண்ணங்கள்,கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் தான் மாசுபடுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காரியம் இன்று அந்த மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பதே தெரியாமல் செய்வது என்பது வருத்தத்திற்குரியது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

E-mail: jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com