வாஸ்துவில் ஒவ்வொரு திசைகளின் பார்வைகளும் பாதிப்புகளும்.

தீர விசாரித்து அறிவதே மெய்”.

நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து நம் மனம் இன்பமோ அல்லது துன்பமோ பெறுகிறது. கால நிலைகளைப்போல நம் உணர்வுகளும் அவ்வப்போது மாறிமாறி வருகின்றன. பலவித வெளிச்சூழல்கள் நம் மனதில் பலவித உணர்வுகளைத் தூண்டுகின்றன. இந்த உணர்வுகளின் பாதிப்பு நம் எண்ணங்களிலும், நம் செயல்களிலும் பிரதிபலிக்கின்றன.
#கடல் #அலைகள் மாறி மாறி பொங்கினாலும் #ஆழ்கடல் அமைதியாக இருப்பதுபோல இந்த உணர்வுகளால் பாதிக்கப்படாத நிலையில் நம் அறிவை பாதுகாக்க வேண்டும். உடலில் எத்தனை குலுக்கல்கள், அதிர்வுகள் வந்தாலும் மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை பாதுகாப்பாக அசையாமல் இருப்பதுபோல உணர்வுகளின் பாதிப்பில் அறிவு தள்ளாடாமல் நாம் அதை பாதுகாக்க வேண்டும். அப்போது உணர்வுகளின் தாக்கம் நம் வெற்றியை பாதிக்காமல், நாம் வாழ்வின் வெற்றியை முன்னெடுத்து செல்ல முடியும்.
தேவையான வெளிச்சமற்ற ஒரு அரை இருட்டில் கயிறு பாம்பு போலவும், பாம்பு கயிறு போலவும் தோன்றலாம்.
கயிற்றைப் பாம்பாக நினைத்தது நமது வெளி அறிவு. மூதாட்டியின் விளக்கின் ஒளி என்ற ஞானம் நம் மன இருட்டை அகற்றியவுடன் உண்மை தெரிகிறது. எனவே, பாம்பும், மாலையும் கயிறும் ஒன்றுதான். அதைப் பாம்பாகவும், மாலையாகவும், கயிறாகவும் பார்ப்பது நமது பார்வையின் கோணங்களே!
இன்னும் கூர்ந்து கவனித்தால், அங்கு சிதறிக்கிடக்கும் தேங்காய் நார்களால் பின்னப்பட்டதே அந்தக் கயிறு என்றும் அறிவோம். அப்படியானால் தேங்காய் நாரும், கயிறும் ஒரே பொருளின் இரண்டு தோற்றங்கள்தானே! அதைத்தான் வேதமும், “தத்துவம் அஸி! என்று சொல்கின்றது.
தூக்க மயக்கம், மது மயக்கம், மாதர் மயக்கம் இதுபோன்ற வேளைகளில் நம் அறிவு மங்கிப்போகிறது. இந்த நேரங்களில் எந்த முடிவும் எடுக்காதிருப்பது உத்தமம்.
“கண்ணால்கா ண்பதும்பொய்
காதால்கே ட்பதும்பொய்
தீர விசாரித்து அறிவதே மெய்”.
உணர்வுகளின் ஆதிக்கம்
ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பார்வையும்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/2_17_15_Brian_OceanAcidSatellite_1050_801_s_c1_c_c.jp
chennai vasthu

அதன் ஆதிக்கமும்,அங்கு வசிக்கும் மற்றும் அந்த ஜாதக நபர்களையும் பாதிக்கும்.
அதுபோல மனிதர்களிடமும், உணர்வுகளின் ஆதிக்கம் மாறி மாறி வருகிறது. நாம் எப்போதும் ஒரே வித உணர்வில் வாழ்வதில்லை. ஒரு வேளை உற்சாகம் பொங்கி எழும். மறு வேளை சோர்வு தோன்றும். இதுபோல கோபம், எரிச்சல், பயம், விரக்தி, கவலை, ஆசாபாசம் என்று மனநிலை மாறி மாறி வரும்.
“குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்பது போல ஒரு வித மன நிலையில் எடுக்கும் முடிவுகள் மாறுபட்ட மனநிலைக்கு ஒத்து வருவதில்லை. நாம் களிப்பான மன நிலையிலோ, கடுகடுத்த மனநிலையிலோ யாருக்கும் எந்த வாக்கும் கொடுக்கக் கூடாது.
ஒரு இளம்பெண் தன் கணவனிடம் சண்டையிட்டு கொதிப்படைந்தாள், விரக்தியுற்றாள். ஆத்திரத்தின் உச்சத்தில் அவசர கோலத்தில் தன்னை தீக்கிரையாக்கினாள். பாதி வெந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மருத்துவர்கள் யாவரும் கை விட்டு விட்டனர். அந்த நிலையில் அவன் தன் கணவனின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள். எப்பாடு பட்டாவது என்னை காப்பாற்றுங்கள். உங்களோடும் நம் குழந்தைகளோடும் வாழ விரும்புகிறேன் என்று கதறினாள். ஆனால் அவள்ஆசை நிராசையானது.
விரக்தியின் உச்சத்தில் எடுக்கும் முடிவு வாழத் துடிக்கும் ஏக்கத்தில் எடுக்கும் முடிவுக்கு எதிராக உள்ளது.
ஆத்திரம் பொங்க, அறிவுமங்க அரிவாளைத் தூக்கி, தலைகளை கொய்து, சிறைகளில் வாடும் சில உணர்ச்சிமிக்க மனிதர்கள் இன்று நல்வாழ்வுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள்.
ஆக முடிவுகளை எடுக்க எண்ணும்போது இப்போது நாம் என்ன முடிவு எடுக்க நினைக்கிறோமோ அதை ஒரு குறிப்பேட்டில் எழுதவும். மீண்டும் ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் சென்றபின் என்ன முடிவு தோன்றுகிறதோ அதையும் குறிப்பேட்டில் குறிக்கவும். பின் ஒரு வாரம் சென்றபின் அந்த இரு முடிவுகளையும் தற்போதைய மனநிலையில் பரிசீலித்து முடிவான முடிவு எடுக்கவும்.
காதல்
#காதல் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் காதலர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள். காதல் என்ற மலர் சீக்கிரமே வாடி விடுகிறது. தேய்பிறை போல காதலும் சீக்கிரமே தேய்ந்து போகிறது. அந்த நிலவொளியில் காதலர்களின் மேல் உள்ள கரும்புள்ளிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. காதல் மயக்கம் மறையும்போது அந்த கரும் புள்ளிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
சுதியும் தாளமும் கலந்தால் இனிய  சங்கீதம். பாச உணர்வும், மோக உணர்வும் கலந்ததே காதல் என்னும் இனிய சங்கீதம். இதில் ஏதோ ஒன்று மறைந்தால் காதல் கரைந்துவிடும்.
கருத்துக்கள், #ரசனைகள், ஈடுபாடுகள் ஒத்து இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால்கூட தப்பில்லை. ஆனால் பொறுப்புணர்வு, சிரத்தை உணர்வு (#Sincerity) புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், உடமைத் தனம் இல்லாது (#Possessiveness) அன்பு செலுத்தும் குணம் இவைகள் இருந்தால் என்றும் நிம்மதி.
ஏற்றுக்கொள்ளுதலும் ஒப்புவித்தலும் நல்ல காதலின் இரு பரிமாணங்கள். ஏற்றுக் கொள்ளுதல் என்றால் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ளுதல். மலரில் முள் இருப்பதுபோல எல்லோரிடமும் நிறையும் குறையும் இருக்கும். அந்த குறையைக்கண்டு முகம் சுளிக்காமல், மனம் வெறுக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.எங்கே ஏற்றுகொள்ள கூடிய மனிதர்கள் இருப்பார்கள் என்றால் வாஸ்துபடி இருக்கும் வீட்டில் மட்டுமே நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment