வாஸ்து – விடை தெரியா மர்மங்கள்

வாஸ்து பிதாமகன்கள் ஆலோசனை

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள்
     ஆந்திர மாநில மற்றும் தமிழக எல்லையோரமாக  தமிழகத்தில் இருக்கும் ஒரு இடத்தில் வாஸ்து பார்க்க சென்றதன் பதிவு. ஆந்திர நாட்டில் பிறந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மற்றும் கேரளா மட்டும் அல்லாமல் இந்தியா முழுமைக்கும் வாஸ்து பயணத்தை மேற்கொண்ட நாடு வாஸ்து பிதாமகன்களான பிரம்மானந்தம் ரெட்டி மற்றும், திருப்பதி ரெட்டி அவர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் ஆலோசனை கொடுத்து கட்டிய வீடு அதன் வீட்டு உரிமையாளருக்கு   பலவிதமான பிரச்சினைகளை அதிகம் கொடுத்ததால் “என் மேல் நம்பிக்கை வைத்து என்னை வாஸ்து பார்க்க“ அழைக்கின்றார்.
 
அவருக்காக வாஸ்து பிதாமகன்கள் ஆலோசனைப்படி கட்டிய வீட்டை வாஸ்து ஆலோசனை விசயமாக சென்று ஆராய்ச்சி செய்தேன்.  மிகப்பெரிய வீடு, நல்ல கலைநயத்தோடு வடிவமைப்பு,   வாஸ்து விதிகள் துல்லியமாக பின்பற்றப்பட்டு கட்டப்பட்ட   வீடு. ஆனாலும்   அந்த வீட்டின் உரிமையாளர் மனைவிடம் சண்டை செய்து கொண்டு வெளியே எங்கோ யாரிடமும் சொல்லாது  சென்றுவிட்டார். ஆகவே இதற்கு  காரணம் வீட்டில் எதாவது வாஸ்து குறைகள் இருக்குமா? என்பதனை தெரிந்து கொண்டு சரிசெய்யலாம் என்பதற்காக என்னை அழைத்துள்ளார் என்பதனை அந்த வீட்டில் இருக்கும் அமைப்பை வைத்து  எனது வாஸ்து அனுபவ அறிவு மூலமாக தெரிந்து கொண்டேன்.
 
 
 
  வீட்டை பார்த்த பின் நான் அந்த உரிமையாளரிடம் சொன்னேன் வீட்டில் எந்தவித குறைபாடும் இல்லை. அருமையான வீடு இது. தயவுசெய்து வீட்டின் குறிப்பிட்ட மூலையில் அடுக்கி வைத்த அரிசி மற்றும் நெல் மூட்டைகளை  எடுத்து மாற்றி வேறொரு பக்கம் வைக்கவும் என்று கூறினேன். மேலும் நான் ஒரு குறிப்பிட்ட அறையை  எந்த நேரமும் அடைக்காது திறந்து வைக்க சொன்னபோது, தன் கணவர் தன்னிடம் சொல்லாமல் எங்கோ  பிரிந்து செல்லும் போது குறிப்பிட்ட அந்த அறையை (பூஜை) பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டார் என்ற விஷயத்தை தெரிவித்தார்.
அறையின் கதவை உடைத்தாவது நிரந்தர திரந்து வைக்க நான் சொன்னேன் . அதாவதுஇந்த அறையை திறந்தே ஆக வேண்டும் என்று.
 
வேறு என்ன செய்ய வேண்டும் இந்த வீட்டில் எனக் கேட்டார். நான் திரும்பவும் சொன்னேன்
 
அவர்கள் மிகப்பெரிய விவசாய பெருங்குடி குடும்பமாக இருந்தாலும்  மூட்டை எங்கே அடுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கியம் என்பதனை விளக்கி விட்டு வந்தேன்.
 
என்று சொல்லி விட்டு விடைபெறும் போது அந்த வீட்டின் பெண்மணி இவ்வளவு பெரிய வீட்டிற்கு நீங்கள் இரண்டு சின்ன விஷயங்களை தானே  சொல்லி இருக்கின்றிர்கள். அதனால் நீங்கள் உங்கள்  கட்டணத்தை அதற்கு ஏற்றார் போல் குறைத்து கொள்ள கூடாதா? என்று கேட்டார். நான் அவருக்கு மாற்று கருத்து தெரிவித்து விட்டு
 
இல்லை அம்மா நான் உங்களுக்கு சுட்டி காட்டிய இந்த விஷயம் உங்கள் கணவரின் உயிர் காக்கின்ற விஷயம். என் நேரத்திற்காக ஏற்கனவே நான் உங்களிடம் பேசிவிட்டு தான் உங்கள் இடத்திற்கு பயணப்பட்டு வந்துள்ளேன். ஆக கொடுக்க வேண்டிய தொகையை பேரம் பேசி என் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.ஆக பணம் என்பது நமது நேரத்திற்கும், நமது உடலை வருத்தி பயணப்பட்டு செல்வதற்கும்,சென்ற இடத்தில் வீட்டை நூறு முறைகள் சுற்றி வருவதற்கு சமமாக வீட்டை சுற்றி அழைவதற்கு மட்டுமே காசு ஆகும். சாஸ்திரத்திற்கு என்றும் காசு வேண்டாம்.
 
 அந்த வீட்டின் பெண்மணிஇது என்ன வாஸ்து! நெல் மூட்டைகளை எடுங்க ; அறையை திறந்து வைங்க என்று நினைத்தால் நான் பொறுப்பாக முடியாது.
VASTU CONSULTATION
error: Content is protected !!