கணவன் மனைவி பிரிந்து வாழ்க்கை நடத்துகிறார்களா?

     

Conception problem
Conception problem

                                    திருமண தடைநீங்க வேண்டுமா

கல்யாணம் ஆகாதவனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று குறை,வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது நாம் அறிந்ததே; கோடீஸ்வர்களுக்கும் மனத்துயரம் உண்டு; பயம் உண்டு; உடல் உபாதைகளும் உண்டு; சாலையில் வசிக்கும் ஏழைகளுக்கும் இன்பம் உண்டு.ஆகதிருமணம் ஆகி கணவன் மனைவி கருத்து வேறுபட்டால் பிரிந்து இருந்தால்  நானசம்பந்த பெருமானின் இந்த பதிகம்பாடும்போது சேர்ந்து விடுவார்கள்.

ஒவ்வொரு கணவனுக்குள்ளும், ஒவ்வொரு மனைவிக்குள்ளும் இனிய பக்கம் ஒன்று உண்டு. ‘ஏன் நாம் உணர தவறி விட்டோம்…’ என்று சண்டை போடும் ஜோடிகள், தங்களுக்குள் கேள்வி கேட்கட்டும்; அருமையான விடை கிடைக்கும்.
விட்டுக் கொடுப்பதையும், சுய கவுரவத்தையும் முடிச்சுப் போட்டுக் கொள்கின்றனர் பலர். அவசியமில்லை; விட்டுக் கொடுப்பவர்களே இறுதிச் சிரிப்பு சிரிக்க முடியும்.
கணவன் – மனைவி இருவரும் நல்ல மூடில் இருக்கும் போது, ‘ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றவர் அமைதியாக வேண்டும்…’ என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பேசிக் கொள்ளுங்கள். வாழ்க்கைநன்றாக இருக்கும்.

 

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. 01

போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே. 02

தொண்டணை செய்தொழில் துயர் அறுத்து உய்யலாம்
வண்டணைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை  இருந்ததே. 03

அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை  இருந்ததே. 04

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே. 05

மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே. 06

குறைவளை அதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை  இருந்ததே. 07

அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை  இருந்ததே. 08

நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர்
அடியொடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை  இருந்ததே. 09

தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை  இருந்ததே. 10

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
 (சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
 +91 9965021122.

E-mail:
 jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com