கணவன் – மனைவி பிரிவுக்கு வாஸ்து காரணமா?

நிறைய மக்கள் கணவன் ஒரு பக்கமும், மனைவி ஒரு பக்கமும், வேலை செய்யக்கூடிய நிலை இருக்கும். ஆனால் அவர்களுக்குள் நாம் சேர்ந்துஇருக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கும் .இந்த இடத்தில் நாம் சேர்ந்து வாழ வேண்டும் நினைத்தால் கூட நாம் வசிக்க கூடிய வீடு சேரவிடாது வேலையை செய்யும்.

இப்பொழுது ஒரு வேலையில் கணவர் பழனியில் இருக்கிறார். மனைவியானவர் திண்டுக்கல் நகரில் தனது சொந்த வீட்டில் இருப்பார்கள். ஆக பழனிக்கும், திண்டுக்கலுக்கும் அதிகபட்சம் ஒரு அறுபது கிலோமீட்டர் இருக்கும். கணவர் ஆனவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனது இல்லத்திலிருந்து சென்றால்கூட ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். மனைவி திண்டுக்கல் நகரிலும், கணவன் பழனியில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக இருப்பார். அவர்கள் இருவரும் நினைத்தால் கூட பழனிக்கும் திண்டுக்கல் நகருக்கும் இடையே ஒட்டன்சத்திரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவிட முடியும். ஆனால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

இந்த இடத்தில் எனக்கு தொலைபேசியில் அழைப்பார்கள். நானும் என் மனைவியும் பிரிந்து இருக்கிறோம் சேர்வதற்கு வழி இருக்கா சார், சேர்ந்து வாழ வேண்டும் என்பார்கள்.

அதற்கு என்னுடைய நேரடியான பதில் ஒரு இல்லத்தில் கணவன் மனைவி பிரிந்து இருக்கிறார்கள் என்று சொன்னாலே, ஒரு இடத்தின் அதாவது இல்லத்தில் தென்மேற்கு மற்றும் வடமேற்கு கூர்ந்து கவனித்து அது சார்ந்த வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யும் போது நிச்சயமாக சேர்ந்து விடுவார்கள்.

எனது பயணத்தில் ஒரு நாள் தினமும் 500 கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடிய தன்மை கூட எனக்கு இருக்கிறது.மீண்டும் இல்லத்தில் இணைந்து விடுவேன். ஆக இந்த இடத்தில் ஒரு ஐம்பது கிலோமீட்டர் பயணப்படுவதற்கு பயப்படும் போது, நிச்சயமாக அவருடைய வீடு தான் அந்த வேலையை செய்கிறது என்று சொல்ல வேண்டும்.மீண்டும் நல்ல பதிவுடன் சந்திப்போம்.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp: 9965021122

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

error: Content is protected !!