மனையடி அளவுகள்,வீட்டு அறைகளின் நீள அகலங்களுகான விளக்கம்.

வாஸ்து மனையடி சாஸ்திரம்

அறைகளின் நீள அகலங்கள் குறித்து வாஸ்து உலகில்  பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால் அறையின் நீள அகலத்தினால் எந்தவித பாதிப்பும் கிடையாது என்று சிலரும்,  பாதிப்பு உண்டு என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் அகலத்திலும்,அதன் நீளத்திலும், ஏன் உயரத்திலும் கூட மனையடி சாஸ்திர அளவுகளாக இருக்க வேண்டும் என்று பொதுவாக சொல்கின்றார்கள்.எனக்கு தெரிந்து  மனையடியை வீட்டின் கணக்கிற்கு  எடுக்க வேண்டாம் என்று சொல்கின்ற வாஸ்து நிபுணர்கள் கூட உயரம் 11 அடி இருந்தால் சிறப்பு என்று Room கூறுகின்றனர்.

Room Size And Vastu Shastram
Room Size And Vastu Shastram

இது நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த குடும்ப தலைவனின் காலடி அளவு என்று சொன்னாலும்,இது காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று சொன்னாலும் எல்லாம் ஒரு நம்பிக்கை அடைப்படையில்   மக்கள் இதனை    பின்பற்றி கொண்டு  இருப்பதில் தவறு கிடையாது என்பது எனது கருத்து.இந்த இடத்தில் நான் குறிப்பிடுவது என்னவென்றால் உங்களுக்கு அடிக்கணக்கில் நம்பிக்கை இருந்தால் அடிக்கணக்கினை எடுத்து கொண்டு உங்கள் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு உபயோகித்து கொள்ளுங்கள்.வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள் என்றுதான் நான் வாஸ்து பார்க்க செல்லும் இடங்களில்  சொல்லுகின்ற விசயம் ஆகும். ஆனாலும் எங்கள் கொங்கு மண்டலத்தில் அடி கணக்கு யாரும் பார்க்காமல் இருப்பது இல்லை .இதனால் இந்த இடத்தில் ஊரோடு ஒத்து வாழ் என்பது போல நானும் அந்த வழியை பின்பற்றி செல்கின்றேன்.
ஆக இந்த அடி கணக்குகள்  எல்லாமே காலம் காலமாக பல நூறு  ஆண்டுகளாக  வாழ்ந்த நமது மூத்த குடிமக்கள் தங்களது வாழ்வில் அனுபவ பூர்வமாக பார்த்து எழுதி வைத்த விசயங்கள் ஆகும். அதனையும் உதாசின படுத்தாமல் நம்பிக்கை அடிப்படையில்  நாம் அதனை பின் பற்றுவது தவறு கிடையாது.ஆக எதிர்மறையான விஷயங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு  செல்ல வேண்டாம் என்பதற்காக    நன்மையாக    இருக்கும் அதன் வாசகங்கள் உள்ள  அளவுகளை மட்டும் உங்களின் பார்வைக்காக  வழங்கி    உள்ளேன்.

மனையடி சாஸ்திர அளவுகள்.

ஆறு அடிகளுக்குள் இருக்கும் அளவுகளுக்கு சாஸ்திர கணக்கு கிடையாது.அதனால் ஆறு அடிகளுக்குள் அளவு பார்க்க வேண்டாம்.

8.மிகுந்த பாக்கியம் உண்டாகும்.நல்ல உறவுகள் அமையும்.நல்ல வாழ்வு அமையும்.

10.ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.பசி என்கின்ற பிணி இருக்காது.

11.புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.சிவபெருமான் அருள் உண்டு. பாக்கியம் சேரும்.

16. மிகுந்த செல்வம் உண்டு.ஆபரணம் மூலம் லாபம் உண்டு. விவசாயம் விருத்தி உண்டு. அதிக வேலையாட்கள் அமைவார்கள்.

17 .அரசன் போல் வாழ்வு.கொன்றை மாலை அணிந்த சிவபெருமான் அருள் உண்டு.எதிரி தலை வணங்குவார்கள்.

20. இராஜ யோகம் ,இன்பம். புகழ் சேரும்.அசுவம் என்கின்ற யோகம் கிடைக்கும். வியாபாரம் பெருகும் குதிரை கட்டி வாழ்வார்கள்.

21. வளர்ச்சி,பிரம்மதேவர் அருளால் கல்வி சிறக்கும். பால் பாக்கியம் ,பசுவிருத்தி உண்டாகும்.

27 .மிகுந்த  யோகம் மற்றும் செல்வம் உண்டு.விளையாத பயிர்கள் நன்கு விளையும்.

28.எதிரிகள் அடங்குவார்கள்,மிகுந்த சந்தோசமான வாழ்வு வாழ்வார்கள்,

29. பால் பாக்கியம் ,செல்வம். சேரும்.

30. இலட்சுமி கடாட்சம். உலகம் புகழும் படி

வாழ்வார்கள்

31. நன்மை நிச்சயம் உண்டு. சிவ பெருமான் அருள் கிடைக்கும்.

32. மகாவிஷ்ணு  அருள் உண்டு . வாழ்வில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். சொல்வன்மை ஏற்பட்டு சிறப்பாக புகழுடன் புவியில் வாழ்வார்கள்.

33.    உலகின் பல பகுதியில் இருந்தும் செல்வம் வரும்.  மிகுந்த நன்மையுண்டு.

35. இலட்சுமி கடாட்சம். அஷ்ட லஷ்மி அருள் கிடைக்கும்.

36.அரசர் போல் வாழக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.

37. லாபம் உண்டு, இன்பம் உண்டு. பொருள் சேர்க்கை உண்டு.

39. சுகம், இன்பம். பெருகி நல்ல ஆரோக்கியமான வாழ்வும் ஐஸ்வர்யம் பெற்று வாழ்வார்கள்.குபேர சம்பத்துக்களை பெற்று தனவானாக வாழ்வார்கள்.

41. பெரும் செல்வம் பெருகும், ஊருக்கே செல்வந்தனாக இருப்பார்கள். மிகுந்த இன்பம் உண்டு.

42. இலட்சுமி குடியிருப்பாள்.காமதேனு  இருக்கும் வீட்டில் வசிப்பார்கள்.

45. சகல பாக்கியம் உண்டு. மிகுந்த  நன்மைகளாக பெற்று நடை வாழ்வார்கள்.அதிக குழந்தைகள் இருக்கும்.அதில் ஒரு குழந்தை மிகுந்த குறும்புடன் ஊர் மக்கள் பயப்படக் கூடிய பெரிய சக்தி வாய்ந்த மனிதனாக வாழும்.

52. தான்யம் பெருகும். பண்ணைத் தொழில் சிறக்கும்.பெருநிலக்கிழாராக இருப்பார்கள்.

56 .புத்திரகளால் பலன்.வம்சம் பெருகும்.முன்னோர் ஆசிகள் என்றும் உண்டு.

60 . பொருள் விருத்தி. தொழில் வியாபாரம் மிகுந்த அளவில் சிறந்து பேரும் தனவந்தனாக,பெரிய பண்டாரம் வைத்துள்ள கருவூலம் உள்ளவனாக விளங்குவார்கள்

.

64.  சகல சம்பத்தும் உண்டு.மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழக்கூடிய பாக்கியத்தை பரிதி கடவுள் வழங்குவார்.

66 . புத்திர பாக்கியம்.உலகம் பகலகூடிய அமைப்பில் பிள்ளைகள் பிறப்பார்கள்.அதிக பிள்ளைகளால் ஊரை ஆள கூடிய பாக்கியம் கிடைக்கும்.

68 . பொருள் லாபம். இறைவன் அருளால் எல்லா சம்பத்துக்களை பெற்று நலமாக வாழ்க்கை நடத்துவார்கள்.

71.  பெரும் யோகம் பெற்று குடும்ப பெயர் பத்து ஊர்களில் கொடிகட்டி பறக்கும்.

72.  பாக்கியம். செல்வசெழிப்பில் திகழ்வார்கள்.

73. குதிரை கட்டி வாழ்வார்கள்.

74.  அரசால் அபிவிருத்தி ஏற்பட்டு மிக செல்வ நிலையில் இருப்பார்கள். அரசு துறை சார்ந்த ஒபாபந்த வேலைக்கு சிறப்பு.

77 . யானை கட்டி வாழ்வான்.ஒரு நாட்டிற்கு தலைவன் ஆக கூடிய யோகம் கொடுக்கும்.

79. கன்று காளை விருத்தி. பண்ணைத்தொழில் சிறப்பு. 80. மகாலட்சுமி வாசம் செய்வார்கள்.

84. செளக்கியம்.பொன் பொருள் சேரும்.

85 . செல்வச் சீமானாக வாழக்கூடிய பாக்கிய நிலையை கொடுக்கும்.

88. செளக்கியத்துடன் கூடிய சந்தோசமான வாழ்க்கை வாழ்வார்கள்.

89 . பலவீடுகள் கட்டி மிகப் பணக்காரர் ஆக வாழ்வார்கள்.

90 . தனயோகம் பெற்று என்றும் பணக்கார் ஆக வாழ்க்கை இருக்கும்.

91.  குடும்ப தலைவருக்கு அனைவரும் விஸ்வாசமாக இருப்பார்கள். வாரிசுகள் நல்ல தனத்தை தரக்கூடிய கல்வி அறிவு பெற்றிருப்பார்கள்.

92. அஷ்ட ஐஸ்வரியங்கள் தேடி வரும்.

93. பல தேசங்கள் சென்று வாழ்வார்கள்.பலதேச தொழில் அமையும் கடல் கடந்து வியாபாரம் நடக்கும்.

95 . தனவந்தனாக,தனவணிகனாக,இருப்பார்கள். என்றும் வெளியூர் பயணமாகவே இருந்து கொண்டு பணம் சேர்ப்பார்கள்.

96.பிற தேசப்பயணம் மேற்கொள்வார்கள்.

97.  கப்பல் வியாபாரம் செய்வான்.கடல் வணிகம் மூலம்  நாட்டில் பெரும் செல்வந்தராக அரசனுக்கு உதவி செய்பவராக இருப்பார்கள்.

98 . கல்வி மூலம் கண் திறந்து பல பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

99.  இராஜ்யம் ஆள்வார்கள்.அரசனாக  அமைச்சராகவும் இருக்கும்படி பாக்கியம் கிடைக்கும்.

100. சிவபெருமான் அருள் பெற்று ஒரு பெரிய நகரத்தின் பெரிய மனிதனாக இருப்பார்கள். ஷேமத்துடன் சுகத்துடன் வாழ்வார்கள்.

100 . அடிகளுக்கு மேல் எந்த கணக்குகளும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுக்கு எப்படி தேவையோ அப்படி வைத்து கொள்ளவும்.

மேற்குறிப்பிட்டுள்ள அடி அளவுகள் அனைத்தும் நூறு ஆண்டுகளுக்கு  முன்பு வந்த பழங்கால அரிய நூலான வீராசாமி முதலியார்அவர்களால் இயற்றிய புத்தகமான சில்ப சிந்தாமணியில் பனுவல்களாக இருந்ததை இன்றைய மொழிக்காக வார்த்தையாக பதம் பிரித்து கொடுத்துள்ளேன்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

E-mail: jagan6666@gmail.com

www.chennaivathu.com