வாஸ்து அமைப்பில் தவறான  கிணறு மூடுவது பற்றிய விளக்கம்.

water boring in house
water boring in house

தவறான கிணறுகளும் வாஸ்துவும்,

மனித உயிரின் உயிர்நாடியாக இருப்பது தண்ணீர் மட்டுமே அப்படிப்பட்ட தண்ணீர் உள்ள  கிணற்றினை மூடுவது என்பது மிகவும் கடினமான முடிவாகும். வேறுவழியின்றி வாஸ்து அமைப்பில் தவறாக இருக்கும் போது மூடப்படுவதைத் தவிர வேறு வழிகள் கிடையாது.
            வாஸ்து காரணங்களுக்காக மூடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும் என்று ஒரு சிலர் சொன்னாலும், ஒரு வீட்டிற்கு தவறான அமைப்பில் கிணறு இருக்கும் போது அதனை அப்படியை மூடுவதாக இருப்பின் வாஸ்து அமைப்பில்  மற்றொரு கிணற்றை தோண்டியபின் பழைய கிணற்றை மூடுவதுதான் சாலச்சிறந்தது.
             புதிய கிணற்றுக்கு பூஜை செய்து மண் எடுத்தபிறகு அந்த மண்ணை கொண்டு பழைய கிணற்றை முறைப்படி பூஜை செய்து மூடுவது மிகுந்த நல்லது. அப்படி மூடும் போதூ அந்த கிணற்றின் சொந்தக்காரர் வெளியே எங்கும் செல்ல க்கூடாது.
ஆழ்துளை கிணற்றை மூடுவதற்கு இந்த சம்பரதாயங்கள் பார்க்க வேண்டியது இல்லை. மேலும் பழையகால  கிணற்றுடன் ஆழ்துழாய் கிணற்றை  ஒப்பிடவேண்டாம்! இடப் பற்றாக்குறை காரணமாக பெரு நகரங்களில்  பூர்வீக பழைய கிணற்றை மூடிவிட்டு ஆழ்துழாய் கிணற்றை அமைத்து வீட்டின் அமைப்பை பெரிது படுத்துகின்றனர்.இதுவும் வாஸ்து அமைப்பில் தவறு ஆகும்.   கோடை காலங்களில் நமது முன்னோர்கள் வெட்டிய கிணற்றின் பல நீர்ஊற்று வழிகளில் சிலவற்றில் அடைப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலும் தண்ணீர் வரத்து கோடை காலத்திலும் குறைவதில்லை என்பதுதான் உண்மை.ஆழ்துளை கிணற்றைவிட பழையகால கிணற்றின் பயன்பாடுகாலம் மிகவும் அதிகம். நீர்வற்றுவது என்கிற காரணத்திற்காக மூடுவது தவறு .வாஸ்துவில் தவறாக இருந்தால் மூடித்தான் ஆக வேண்டும்.  வாஸ்துவில் சரியாக இருக்கும் கிணறை  மழைக்காலங்களில் ” பெரிய மழைநீர் சேகரிப்பு”  தொட்டியாக உபயோகிப்பது நல்லது.
 
     

vastu shastra for water boring
vastu shastra for water boring

       பழங்காலத்தில் இருந்தே  வீட்டின் கிணறு என்பது   கங்கைக்கு இணையாக  கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கிணற்றை மூடும் பொழுது சரியான வழிபாட்டு முறைகளை கடைபிடித்து மூட வேண்டும்.

கிணற்றை முடும்முன் அந்த கிணற்றில் இருந்து ஒன்பது குடம் தண்ணீர் எடுத்து ஜலமுனிகளை புதிதாக எடுத்த கிணறிற்கு கடத்திய பிறகு 

ஊரில் உள்ள வினாயகருக்கு வழிபாடு நடத்திய பின்னர்

 ஐம்பொன் காசுகள் மற்றும் மஞ்சள்தூள்,  வெற்றிலை, பாக்கு,  அருகன்புல், துளசி, வில்வம், தர்பைபுல்,கோமயம் ஆகிய வற்றை கிணற்றில் போட்ட பிறகு

கிணறு மற்றும் சூரியனுக்கு தீபாராதனை காட்டிய பின்னர் ஒருபிடி மண்ணை கிணற்றில் போட்டு மூடும் பணியை  துவக்கவும். பிறகு அந்த இடத்தில் இருந்து கிணற்றின் சொந்தக்காரர் விலகி சென்று விட வேண்டும்.

அன்றைய தினம்  தொடங்கி ஏழு நாட்களுக்குள்  பசு மற்றும் கன்று தானம் பிராமணர்களுக்கு கொடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)