வாஸ்துவும் கள்ளதொடர்பு கொலைகளும்,ஜோதிடம் மற்றும் வாஸ்து,

illegal relationship
illegal relationship

இடத்தில் கள்ளதொடர்பு

வாஸ்துரீதியாக வடமேற்குதென்மேற்கு தவறுகளும் சேர்த்து ஒரு வீட்டில் வடக்கு கிழக்குமூடப்பட்ட நிலையில் ஒரு வீடு இருந்தால் அந்த இடத்தில் கள்ளதொடர்பு உருவாகி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.அதுவே கொலையாக எங்கு மாறும்என்று சொன்னால் ஆண் பெண் எண்ணிக்கையில் மாற்றம்ஏற்படும்போது இங்கே அதாவதுஅந்தவீட்டில்புதிய குழந்தைகள்பிறந்தாலோ,அல்லது அந்த வீட்டில்உள்ள வயதான ஆனோ பெண்ணோ மரணம் ஏற்படும்போது நடக்கும்.

ஜோதிட  சாஸ்திரம் கடலை போன்றது . இதில் நீந்தி கரையை காண்பது என்பது இயலாத ஒன்று. இதில் மூழ்கி முத்து எடுப்பதை போன்று ஜோதிட  ரீதியான சிந்தனையோடு ஒவ்வொரு பொருளையும் , ஒவ்வொரு செயலையும் , உற்று நோக்கி கவனிக்கும்பொழுது அனுபவ ரீதியாக புதுப்புது உண்மைகள் நமக்கு புலப்படும். தினமும் செய்தி தாள்களை புரட்டி பார்க்கும்பொழுது கள்ளகாதல் காரணமாக கணவன் மனைவியை கொல்லுவதும்  , மனைவி திட்டமிட்டு கணவனை கொல்லும் செய்திகளும் தினசரி பத்திரிக்கைகளில் வருவதை நாம் கண் கூடாக காண முடிகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் மறைமுகமாக இவள் கற்பு தவறுவாள் , இந்த ஜாதகனுக்கு அந்நிய பெண்களின் தொடர்பு இருக்கும் , இவள் தாம்பத்திய உறவில் திருப்தி அடைய மாட்டாள் .  

illegal relationship in vastu
illegal relationship in vastu


இவனுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும். என்று காமத்தோடு தொடர்புடைய நிகழ்வுகள் மறைமுகமாக ஜோதிட சாஸ்திரத்தில்  சொல்லப்பட்டுள்ளது. அனுபவ ரீதியாக இந்த முறையற்ற உறவு முறையில் கணவனின் கையால் மனைவியும் , மனைவியின் தூண்டுதலினால் கணவனின் உயிர் பறிபோவதற்கும் உண்டான கிரக நிலைகளை ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக அனுபவ ரீதியாக ஒரு சில ஜாதக அமைப்பை கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம்.


எந்த ஒரு ஆண் ஜாதகமானாலும்  சரி பெண் ஜாதகமானாலும் சரி  லக்னத்துக்கு எட்டாம் இடம் என்பது ஒருவரின் ஆயுளை குறிக்கும் இடமாகும். இந்த ஆயுளுக்கு ஆயுள் ஸ்தானம் எட்டாம் இடத்திலிருந்து எண்ணிவர எட்டுக்கு எட்டாம் இடமாகிய மூன்றாம் இடம் வரும். இந்த மூன்றாம் இடம் என்பது லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற மூன்றாம் இடமாகும். உன்னுடைய ஆயுளுக்கு ஆயுள் அதிகமாக இருக்கிறதா என்பதை மிக துல்லியமாக காட்டும் இடம்தான் இந்த மூன்றாம் இடம்.


அதேபோல் ஜாதகத்தில் விரய ஸ்தானம் என்ற ஸ்தானம் இருக்கிறது . பன்னிரெண்டாம் இடம் என்பது ஒவ்வொருவருக்கும் உண்டாகும் விரயங்களை குறிப்பிடும் இடமாகும். அப்படி பார்க்கையில் லக்னத்துக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கு விரய ஸ்தானமாக லக்னத்துக்கு ஏழாம் இடம் வரும். இந்த ஏழாம் இடம் என்பது மனைவியை குறிக்கும் இடமாகும். மற்றொரு ஆயுள் ஸ்தானமான மூன்றாம் இடத்துக்கு விரய ஸ்தானமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் வரும் . இந்த ஏழாம் இடமும் , இரண்டாம் இடமும் ஒருவருடைய ஆயுள்(மரணம் எப்படி ஏற்படும் ) எப்படி விரயமாகும் என்பதை உணர்த்தும் இடமாகும். ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை குறிக்க கூடிய லக்னத்துக்கு ஏழாம் இடத்து அதிபதியும் , மனைவிக்கு காரகம் வகிக்கும் சுக்ரனும் , ஆயுள் ஸ்தானத்துக்கு விரய ஸ்தானம் என்று சொல்ல கூடிய ஏழாம் , இரண்டாம்  வீட்டில் இருந்தாலோ , அல்லது இந்த வீட்டுக்கு அதிபதியான கிரகத்தோடு தொடர்பு பெற்று காணப்பட்டாலோ அந்த ஜாதகனின் ஆயுளின் முடிவிற்கு அவனுடைய மனைவியும் ஒரு முக்கிய காரணமாக அமைவாள்.


அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்துக்கு அதிபதியும்  பெண்ணின் ஜாதகத்தில் கணவனை குறிக்கும்  கிரகமாகிய செவ்வாயும் ஆயுள் ஸ்தானத்துக்கு விரய ஸ்தானமாகிய லக்னத்துக்கு 2 – ம் இடம் , லக்னத்துக்கு 7 – ம் இடத்தில் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அல்லது இந்த வீட்டு அதிபதிகளுடன் தொடர்பு பெற்று கானபட்டாலும் அந்த ஜாதகியின் ஆயுள் முடிவதற்கு காரணம் அவளது கணவனும் ஒரு காரணமாவான் . இந்த நிகழ்வுகள் அந்தந்த ஜாதகத்தில் லக்னாதிபதியும்  பலமில்லாமல் நீசம் , மறைவு ஸ்தானம் , கடும் பகை வீடு போன்ற நிலைகளில் இருந்தால் இந்த அபசகுனமான கெட்ட நிகழ்வுகள் நடக்கும். ஒரு வீட்டில்தவறான கள்ளதொடர்பு ஏற்படுகிறதுஎன்றாலே வீட்டின் வடப்பகுதியில் வடமேற்கில் இருக்கும்தவறும்,தென்மேற்குதவறுகளும்இந்தவிசயதிற்கு துணைபோகும்.

 

அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஒரு லக்னத்துக்கு நான்காம் இடம் என்பது அவளுடைய கற்பை குறிக்கும் இடமாகும். இந்த இடத்துக்கோ அல்லது வீட்டு அதிபதியான கிரகதுக்கோ சுப கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்து பாவ கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்து , லக்னத்துக்கு 2 – 7- ம் வீட்டுக்கும் , அல்லது இந்த வீட்டு அதிபதிகளுக்கு ஏழாம் அதிபதி , செவ்வாய் இவர்களின் தொடர்பு ஏதாவது ஒரு வகையில் அமையுமானால் அந்த பெண்ணின் கணவன் அவளுடைய கற்பின் மீது சந்தேகப்பட்டு அவளுடைய மரணத்திற்கு அவன் முக்கிய காரணமாக அமைவான்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)