வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?

VASTU SHANTI
VASTU SHANTI

vastu-shanti

ஏற்கனவே அங்கு பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்.சூட்சுமமாக வேறு தேவதா சக்திகளும் அங்கு வாழ்ந்து வரும்.அப்படி வரும் போது அநத இடத்தினை நான் எடுத்துக் கொள்கின்றேன்.எனக்கு வழிவிட்டு ஒதுங்குங்கள்.என்று அறிவுறுத்துகின்ற செயலே வாஸ்து சாந்திபூஜை ஆகும். இதுவரை இங்கு வசித்தீர்கள் இந்த இடத்தில் நான் வசிக்கின்றேன் எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கின்ற செயலே ஆகும்.இந்த பூஜையை இரவு 11மணிக்கு மேல் செய்ய வேண்டும். வாஸ்து சாந்தி பூஜை எற்பதனை திருஷ்டி கழிக்கும் பூஜை என்றுகூட வைத்து கொள்ளலாம். கட்டாயமாக ஒரு ஒற்றை பிராமணர் கொண்டு செய்ய வேண்டும்.

வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனை எழுப்பி பூஜை செய்து அவருக்கு விருப்பமான பூசணிக்காயை பலியிடுவது நல்லது என்று புராணங்கள் சொன்னாலும்,
ஓரிடத்தில் வாஸ்து சாந்தி பூஜை என்பது,  சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள துர்தேவதைகளை பூஜித்து ப்ரீதி அனுப்பிய  பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, இல்லத்தை காத்திடும்படி வேண்டுவதற்கு வாஸ்து சாந்தி பூஜை என்று பெயர். இதனை ஹோம திரவியங்கள் கொண்டு சிறிய பூஜையாக செய்வதில் தவறு கிடையாது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com