vastu main doors

ஒரு இல்லத்திற்கு கதவு என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு கதவு வைக்கிறோம் என்று சொன்னால், பாசிட்டிவான இடங்களில் வைக்க வேண்டும். எதிர்மறை இடங்களில் வைக்கக்கூடாது. பழைய அமைப்பில் மத்திய பாகத்தில் புதன் வாசல் என்று  வைப்பார்கள். அது கூட கொஞ்சம் வாஸ்து சேர்த்து அதனையும் எடுத்துக் கொண்டு இன்றைய நவீன கால வாஸ்துவையும் இனைத்துக்கொண்டு செய்தால் சிறப்பாக இருக்கும். அந்தவகையில் ஒரு வாசல் என்பது கிழக்கு சுவராக இருக்கின்ற பட்சத்தில் வடக்கு ஒட்டியும், வடக்கு சுவராக இருக்கின்ற பட்சத்தில் கிழக்கு ஒட்டியும், மேற்கு சுவர் இருக்கின்ற பட்சத்தில் வடக்கு ஒட்டியும், தெற்கு சுவராக இருக்கின்ற பட்சத்தில் கிழக்கு ஒட்டியும் இருக்க வேண்டும். இதனை தவிர மற்ற பகுதியில் வருவது மிக மிகத் தவறு. இந்த விதி வீட்டுக்குள் இருக்கக்கூடிய அறைக்கும் பொருந்தும். ஏன் சிறிய அறையாக இருக்கும் கழிவறைக்கும் கூட பொருந்தும். பெரிய அறையாக இருக்கக்கூடிய வரவேற்பு அறைக்கும் பொருந்தும். படுக்கை அறைக்கும் பொருந்தும். சமையல் அறைக்கும் பொருந்தும். உணவருந்தும் அறைக்கும் பொருந்தும். அனைத்து அறைகளுக்கும் இந்த விதி பொருந்தும்.வீட்டில் சுற்றுசுவர் கதவுக்கும் பொருந்தும்.