அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வாஸ்து அமைப்பில் மாடிப்படிகள்.

Vastu_tips_staircase,positioms of staircase,
Vastu_tips_staircase,positioms of staircase,

vastu for staircase

ஒரு மனிதனின் உயர்வு என்பது படிப்படியாக சரிவு இல்லாமல் இருக்க வேண்டும். அவனுடைய வாழ்வில்  அதுமட்டுமே நிலையான வாழ்வை கொடுக்கும்.  ஒருவீட்டின் மாடிப்படிகள் சரியாக இருந்தால் மட்டுமே  சிறப்பாக வாழ முடியும்.   அந்தவகையில் மாடிப்படிகளின் அமைப்பில் பலர் தவறு செய்து விடுகின்றனர். எப்படி தவறு செய்கிறார்கள் என்றால் எண்ணிக்கை என்கிற விசயத்தில் தவறு நடந்து விடுகிறது. படியை அமைக்கும் போது எந்த எண்ணிக்கையையும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.உங்களின் முதல் காலடி வலது பாதமாக இருக்கட்டும்.அதேபோல மாடியின் தரைத்தளத்தில் கால் வைப்பது உங்களின் வலது பாதமாக இருக்கட்டும் அவ்வளவுதான்.

இதில் சிலர் என்ன சொல்வார்கள் லாபம் நஷ்டம் எண்ணிக்கை வேண்டும் என்பார்கள்.  ஆக நமது பயணம் என்பது ஒரே பயணமாக என்றும் வெற்றியை தரக்கூடிய பயணமாகவே இருக்க வேண்டும்.நாம் போகும் வழியில் எதாவது ஒரு சிறிய தடைக்கற்கள் வரும் அதனை சமாளிக்க தெரிந்த வாழ்க்கையாக,அதனை புரிய வைக்கும் வீடாக ஒரு வீடு இருக்க வேண்டும்.    அப்படியெல்லாம் எந்த வாஸ்து சாஸ்திரத்திலும் கிடையாது. சிலர் என்ன சொல்வார்கள் என்றால் ஒற்றைப்படையில் வரவேண்டும் என்பார்கள். இயற்கையாகவே நீங்கள்  வலது  பாதத்தில் தொடங்கி   முடிவில் வலது பாதத்தில் முடியும் படி வைத்தாலே ஒற்றைபடைஎண்ணிக்கை வந்து விடும். இன்றைய காலகட்டத்தில் வாஸ்து அமைப்புக்காக வீடு கட்டும்  போது மடக்கு படிகளே சரியான வாஸ்து அமைப்பில் கொண்டுவரமுடியும்.

1990 காலகட்டத்தில் கட்டிய கட்டடங்களில் ஒரே நேர் அமைப்பில் படி அமைத்து இருப்பார்கள் இது வாஸ்து ரீதியாக தவறாக இருந்தாலும் பெரிய நீளமான வீடுகளுக்கு தவறு கிடையாது.இந்த மாதிரி படிஇருக்கும்இடங்களுக்கு செல்லும் போது ஒரே வழி அந்த படியை எடுத்துதான் ஆக வேண்டும் என்று சொல்லுவேன்.

இடத்தில் ஒருபுதிய வீடு கட்டும் மக்களுக்கு பெரிய குழப்பம் என்னவெனில் இடையில் மடக்கி போடுகின்ற அதாவது 7 அடிமட்டத்தில் வருகின்ற நின்று சென்று திரும்பி செல்கின்ற லேண்டிங்  இடத்தை கணக்கில் எடுக்க வேண்டுமா?அல்லது தேவை கிடையாதா?என்று கேட்பார்கள். அதற்கு எனது பதில்  கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும் ஒரு படியைப்போலத்தான்,என்ன பெரிய படியாக பாவித்து கொள்ள வேண்டும். அதாவது 3அடிக்கு 6அடி அகலம் உள்ளதாக, ஆக இந்த இடத்தில் நீங்கள் கேட்பது சரியான விசயம் தான் ஆனாலும் படி அமைப்பில் ஒரு வீட்டையே தலைகீழாக  புரட்டி போடுகின்ற விசயம் ஒன்று உண்டு அதனை தெரிந்து கொள்வது சிறப்பு.

வீடுகளுக்கு வைக்கும் படிகள் எப்பொழுதும் மூன்று எண்ணிக்கை மட்டுமே வர வேண்டும். சில வீடுகளில் லாப நஷ்ட கணக்குகளை பார்த்து கொண்டு தரைத்தளத்தை உயர்த்தினால் செலவு என்று பயந்து கொண்டு, படிகளை 5 படிகளாகவோ,அல்லது 7படிகளாக அமைந்த இல்லங்களை எனது வாஸ்து பயணத்தில் பார்த்து உள்ளேன்.இதுமாதிரி தரையைஉயர்த்தி அமைக்காமல்,படிகளை அமைத்தார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை தரம் ஒரு வீடு கட்டும்  எந்த நிலையில் இருந்தார்களோ,அதே நிலையில் இருப்பார்கள். ஆக படி என்பது சாதரணமான விசயம் கிடையாது.ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு ஏணிப்படியாக இருப்பது ஆகும்.எனது வாஸ்து பயணங்களில் தவறான படியை எடுக்க சொன்ன இடங்கள் தான் அதிகம் ஆகும்.அதனை அப்புறப்படுத்தி மிகச்சரியான வாஸ்து அமைப்பில் வைத்து கொடுத்தபிறகு மிகப் அற்புதமான வாழ்க்கை வாழக்கூடிய மக்கள் என்னை வாழ்த்திக்கொண்டு இருபதாலேயே எனது பயணம் ஒரு தடையில்லாத நாடோடி பயணமாக உள்ளது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

தவறானபடி அமைப்பும் ஒருவீட்டில் ஆண் மற்றும் பெண் விதவைகளை உருவாக்க துணை புரியும்.

Vastu_tips_staircase,positioms of staircase,
Vastu_tips_staircase,positioms of staircase,