மாடிப்படி வாஸ்து

படிக்கட்டுகள் சார்ந்த ஒருசில விளக்கங்கள்.

மாடிப்படி வாஸ்து
மாடிப்படி வாஸ்து

 

 

 

 

 

   ஒரு கட்டடத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம். இதனால் தான் பல பெரிய தவறான விளைவுகள் நமக்கு ஏற்படுகின்றது என்பதில் எவருக்கும் விழிப்புணர்வு இல்லை.
பொதுவாக படிக்கட்டு அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மனையில் வடகிழக்கு உள்மூலை மற்றும் வெளிமூலையில் படிக்கட்டுகள் எக்காரணம் மனையில் வரக்கூடாது.

 

 

 ஒரு கட்டடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியின் உள்மூலையில் மாடிப்படி வரக்கூடாது. ஒரு கட்டடத்தின் கிழக்கு, வடக்கு உட்சுவர் சார்ந்து மாடிப்படி வரக்கூடாது.ஒரு கட்டடத்தின் வெளி‌ப்புறத்தில் போடப்படும் மாடிப்படி சுவர் வைத்து அமைக்ககூடாது. ஒரு கட்டடத்தின் வெளி‌ப்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகள் நிற்கும் தூண்கள் வைத்து அமைக்ககூடாது. ஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிக்கட்டின் கீழ் எந்த விதமான சுவர்கள் வைத்து அறைகள் அமைக்கக்கூடாது.
மேலும் ஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிகட்டினை மதில் சுவருடன் ஒட்டியவாறு போடக்கூடாது. அப்படி தெற்கு மற்றும் மேற்கு காம்பவுண்ட் சுவர் தவிர்க்க முடியாது இடப்பற்றாக்குறை காரணமாக அமைக்க முடியாது போகும்போது காம்பவுண்ட் சுவருக்கும் படியின் பீம் அமைப்பும்,எங்குமே இணைந்து இருக்க கூடாது.

 

error: Content is protected !!