
அன்றாட நிகழ்வுகளில் நாம் கடைபிடிக்கும் சில நடைமுறைகளையும், அவற்றினால் நாம் பெறும் பலன்களையும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில வாஸ்து அமைப்புகளைப் பார்ப்போம். வாடகை வீடாக இருப்பினும் அதில் சில சிறு அமைப்பினையாவது தெரிந்து கொண்டால், அதன்படி இருப்பின் பெரும் நன்மைகளை பெறமுடியும். வாடகை காரில் (Taxi) போனால் விபத்து வராதா? Taxi யில் போனால் Accident வராதா? சொந்த காரில் மட்டுமே விபத்து வரும் என்று இல்லை.
இந்த வகையில் வாடகை வீடாக இருப்பின், 75% நன்மை அல்லது பாதிப்பை வாடகைதாரரும், வீட்டு உரிமைதாரர் 25%மும் பெறுவார்கள். எனவே வாடகை வீடு தேடுபவர்களும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும் இக்குறிப்புகளை கடைபிடித்து நற்பலன்கள் பெறுவதோடு அவர் களுக்கு சொந்த வீடு அமைய வாஸ்து சார்ந்த பிரபஞ்ச சக்தியை வணங்குவோம்.
வடக்கு/கிழக்கு திசையில் குறைந்த பட்ச காலியிடம் இருக்குமானால் அதை உபயோகப்படுத்தி வருவது மிகவும் நன்மை தரும். பொது சுவராகவோ, கட்டிடத்திற்கு வெளியே வடக்கு/கிழக்கில் உபயோகமின்றி இருப்பது ஆண்/பெண் இரு வருக்கும் செயல்தோஷம் உண்டாகி பெரும் பிரச்னைக்கு ஆளாவார்கள்.
வீட்டின் பிரதான வாயில் வடக்கு-வடகிழக்கு, கிழக்கு-வடகிழக்கு, தெற்கு-தென்கிழக்கு, மேற்கு-வடமேற்கு ஆகிய உச்சஸ்தானங்களில் இருக்க வேண்டும். மாறுபட்டு இதற்கு எதிர்முனைக்கு எந்த அளவில் தள்ளியிருக்கிறதோ அந்த அளவிற்கு கெடுபலன்கள் வந்தடையும். தெற்கு மேற்கு வீடுகளுக்கு வடக்கு-கிழக்கில் பின்வாசல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மொத்த வீட்டின் வடகிழக்கு பகுதியில் மாடிப்படிகள், சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிவறைகள் இடம் பெறக்கூடாது. இந்த மூன்று பிரதான குறிப்புகளை வாடகைதாரர்கள் கவனத்தில் கொண்டாலேயே சிறப்பான பலன்களை அடைய முடியும். நம் வாஸ்து விஞ்ஞானம், மனையடி சாஸ்திரம் வெளிநாடுகளுக்கு சென்று இந்திய மண்ணின் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.
www.chennaivasthu.com