குழந்தை பிறப்பில் தடை உள்ளதா? குழந்தை பேறு கிடைக்க வேண்டுமா?

children berth issues problem
children berth issues problem

திருவெண்காடு வந்தால்… திருப்பம் நிச்சயம்..!

திருமணத்திற்கு பின்பு சில பெண்களுக்கு பத்தாவது மாதத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தள்ளி குழந்தை யோகம் அமைகிறது. இன்னும் சிலருக்கு 15  வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாத
நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. இதற்கு வாஸ்துவில் தீர்வு இருந்தாலும், இந்த பாடலை படிக்கும் போது திருவெண்காட்டுபெருமான் கட்டாயம் குழந்தைபேறு கொடுப்பார்.

கண் காட்டும்  நுதலானும் கனல்காட்டும் கையானும்

பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்

பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 01

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு

ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்

வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே. 02

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதியிரவி

எண்ணில்வரு மியமானன் இகபரமும் எண்திசையும்

பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்

விண்ணவர்கோன் வழிபடவெண் காடு இடமா விரும்பினனே. 03

விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்

மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்

கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே. 04

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்தன்

மேல்அடர் வெங்காலன் உயிர் விண்டபினை நமன்தூதர்

ஆலமிடற்றான் அடியார் என்றடர அஞ்சுவரே. 05

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்

ஒண்மதிய நுதல் உமை ஓர் கூறுகந்தான் உறைகோயில்

பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 06

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்

அக்கரைமேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய

மிக்கு அதனுக்கருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்

முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே. 07

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த

உன்மத்தன் உரம்நெரித்து அன்று அருள்செய்தான் உறைகோயில்

கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க

விண்மொய்த்த பொழில் வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 08

கள்ளார் செங்கமலத்தான் கடல்கிடந்தான் என இவர்கள்

ஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வரியான்

வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்று

உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 09

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்றும்

பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்

வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண் காட்டான் என்று

ஓதியவர் யாதுமொரு தீதிலரென்று உணருமினே. 10

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்

விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்

பண்பொலி செந்தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்

மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே. 11

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com