வாஸ்து அமைப்பில் எந்த மரங்களை வீட்டின் உள்பக்கம் வைக்க கூடாது?

vastu for trees
vastu for trees

வாஸ்து அமைப்பில் மரங்கள்

வீட்டின் காம்பவுண்ட் சுற்றுச்சுவரின் உள் பகுதியில் மரங்கள் செடிகொடிகளை வைப்பதற்கு வாஸ்து ரீதியாக வரைமுறைகள் உள்ளது.அநத வரைமுறைகளை மீறிய அமைப்பில் வைப்பது தவறு. 

முள் இருக்கின்ற மரங்களை வீட்டின் எல்லைக்குள் வைப்பது கூடாது. முருங்கை, இலவம்பஞ்சு,அத்திமரம்,வில்வமரம்,நாவல்,புளியமரம்,அலரி,எட்டி,எருக்கன்,பனை,நெல்லி,வாகை,மருதமரம்,இலுப்பை,மாதுளை,போன்ற மரங்களை வீட்டின் எல்லைக்குள் வளர்க்க்கூடாது.இந்த மரங்களை காடுகள்,தோட்டங்களில் வளர்க்கலாம். 

தார் சாலைக்கு தாழ்வாக உள்ள மனை வேண்டாம். வீட்டின் வடகிழக்கு பகுதியின் மீது மரங்கள், செடிகொடிகள், நிழல் விழக்கூடாது.

வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள் என்று சொன்னால், அரசு, ஆல், புளி, நாவல், நெல்லி, எருக்கு, பனைமரங்கள், மூங்கில் மரங்கள், கற்றாளை, காட்டு மரங்கள், அசோக மரம், புங்கை, எலுமிச்சை, வில்வம், முள் உள்ள மரங்கள் மற்றும் செடிகள் ஆகியன வேண்டாம்.

வீட்டு பூச்செடிகளுக்கு நல்ல தண்ணீர் பாய்ச்ச வேண்டாம். கழிவுநீர் தண்ணீர் பயன்படுத்த வேண்டாம்.

பச்சை வாஸ்து மூங்கில் என்று கடைகளில் விற்பதை வாங்கி உபயோகிப்பது மிகவும் தவறு.

தலைவாசல் கதவு தேக்கு மரத்தில் அமைப்பது தேக்கம் என்று பொருள்படும். அதனால் தலைவாசலுக்கு தேக்கு மரம் தவிர்க்கப்பட வேண்டும். மற்ற அறைகளுக்கு அமைத்துக் கொள்ளலாம். கண்டிப்பாக தலைவாயில் மரம் நமது இந்திய மரமாக பலம் வாய்ந்த மரமாகவும், நமது செல்வ நிலையை உயர்த்தக் கூடிய மரமாகவும், எடை குறைந்த மரமாகவும் அமைய வேண்டும். நமது தலைவாயில் மரத்திற்கும், நமது முன்னோர்கள் பணம் வைக்கும் பெட்டி செய்த மரமும் ஒரே இனத்தைச் சேர்ந்ததுதான். இந்த இடத்தில் சரியான மரம் எது என்பதற்காக வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியம்.

ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த இல்லத்தில் ஜீவ காருண்யம் இருக்காது என்பது உண்மை. அதை வைத்து அந்த இல்லம் சரியான வாஸ்து அமைப்பில் இல்லை என்று உணரலாம்.

படுக்கை அறையில் கண்ணாடி உபயோகப்படுத்த வேண்டாம். அதற்கு ஒரு அறிவியல் காரணம் உண்டு.

எக்காரணம் கொண்டும் ஒரு வீட்டின் ஒரு முனையை ஒடித்து கட்டிடம் கட்ட வேண்டாம். ஏன் என்று சொன்னால் ஒவ்வொரு முனையும் நமது வீட்டின் உள்ளவர்களுடன் தொடர்புள்ளது.

வீடு கட்டும் பொறியாளர்களுக்கும், கட்டிட வரைபட அமைப்பாளர்களுக்கும் (நுபெiநெநச ரூ யுசஉhவைநஉவரசந) வாஸ்து தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் குடியிருக்கும் நபர்களுக்கு வாஸ்து மிகவும் முக்கியம்.

நமது வடக்கு கிழக்கும் நமது வாய் மற்றும் மூக்கிற்கு இணையானது. இது எப்பொழுதும் போதுமான அளவு திறந்திருக்க வேண்டும். எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும். அது போல வடக்கும் கிழக்கும் சகல செல்வங்களும் வரும் வழியாகும். அங்கு அடைப்புக்கள் இருந்தால் உடைத்து எரியுங்கள்.

தெற்கும் மேற்கும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க உதவும் வழிகள் போன்றது. தேவையில்லாமல் அதிக திறப்புக்கள் இருக்கக் கூடாது. தேவையில்லாமல் திறந்து வைக்கக் கூடாது. தெற்கும் மேற்கும் வேண்டாத விசயங்கள் வரும்வழி, திறந்திருந்தால் உடனடியாக மூடி வையுங்கள். அதிகமாக திறந்தால் அது ஆபத்து.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com