வாஸ்து அமைப்பில் பணக்காரர் ஆவது எப்படி?

நமது வீடு எந்த அமைப்பில் உள்ளதோ அது சார்ந்த ஆலயம்

பணம் மற்றும் உடல் சார்ந்த நிகழ்வுகளில் என்றும் மகிழ்ச்சி சார்ந்த வெற்றி வேண்டும் என்று நினைத்தால் வெற்றி என்றும் கிடைக்காது.நமது செயல்களில் சில சூட்சும விசயங்களை கடைபிடிக்கும் போது மட்டும் நமக்கு வெற்றி என்பது கைகூடி வரும்.அந்த வகையில் வாஸ்து அமைப்பில் வீடு சரியாக இருக்கின்ற போது பணமும் உடல் சார்ந்த நிகழ்வு களில் என்றும் சந்தோஷம் நிலைத்து இருக்கும்.

அந்த வகையில் பணம் சார்ந்த விசயத்தில் நமக்கு மகிழ்ச்சி வேண்டும், பணத்தட்டுப்பாடு, பணப்பற்றாக் குறை, என்றும் நமக்கு இருக்க கூடாது என்றால்,நமது தொழிற்சாலையில் மற்றும் நாம் குடியிருக்கும் வீடுகள் மற்றும் நாம் வாங்கி காலியிடங்களாக போட்டு வைத்து இருக்கும் இடங்கள்,தவறான வாஸ்து அமைப்பில் இருக்க கூடாது. அது மிக சரியான வாஸ்து அமைப்பில் இருக்கும் போது நமது தகுதிக்கு தக்க அளவில் பணத்தட்டுப்பாடு என்பதே இருக்காது.இது நூறு சதவீத உண்மை.

வாஸ்து என்பதனை கடந்தும் இறைவழிபாட்டின் மூலமாகவும் நமது வீடு எந்த அமைப்பில் உள்ளதோ அது சார்ந்த ஆலயம் சென்று வழிபாடு செய்யும் போது மிக சிறப்பான நிலை பண விசயத்தில் நடக்கும்.
இந்த இடத்தில் சூட்சுமான ஒரு விசயத்தை உங்களுக்கு கூற கடமை பட்டு உள்ளேன்.சீரலைவாய் முருக பெருமான் ஆலயத்தில் உற்சவர் சண்முக பெருமானை பார்த்த பின்பே மூலவரை பார்க்க வேண்டும். அங்கு இருக்கும் சண்முகபெருமானின் நான்காவது திருமுகமே நமக்கு பொன் பொருள் யோக மிக்க வாழ்வினை கொடுக்க கூடிய அமைப்பில் இருக்கிறார். அதே நான்காவது திருமுகத்தின் அம்சமாக பழனி மலை மீதும் வீற்றிருக்கிறார்.

இதையே அருணகிரி பெருமான் தன் திருப்புகழ் மூலமாக சரண கமல ஆலயத்தை அரை நிமிடம் மட்டும்நினைப்பவருக்கு, நீள் சவுக்கியம் சகலயோக மிக்க பெருவாழ்வு தகைமை சிவஞானம் முத்திப் ப்ரகதியும் நீ கொடுத்து உதவி புரிய வேண்டும் என்று சொல்கிறார்.

யார் ஒருவர் அருணகிரி பெருமானின் இந்த பதிகத்தினை மனமொன்றி வள்ளியம்மையும், தேவயானை அம்மையுடனும், முருகர் தன் மார்பில் வேலுடன் அல்லது கொடிமரம் உள்ள ஆலயத்தை தன் வாழ்நாளில் விசாக நட்சத்திரம் வரும் நாளன்று காலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பதிகம் பாடி வணங்குபவர்களுக்கு நம்மை உலகம் புகழால் பேசக்கூடிய நிலை உருவாகும்.
உலகத்தரத்தில் கல்வி செல்வம் நமது குழந்தைகளுக்கு கிடைக்கும். நாம் பேச க்கூடிய பேச்சு ஒரு உன்னதமான தன்மையுடன் விளங்கும். நாம் ஒருவரிடம் பேசும் போது கூட இன்னும் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசி இருந்தால் நன்றாக இருக்கும் என்று மற்றவர்களை என்ன வைக்கும். அப்படிப்பட்ட அதிசயமான வாழ்வை நமக்கு முருகபெருமான் வழங்குவார்.

அருண தளபாத பத்மம் அது நிதமும் துதிக்க !!
அரிய தமிழ் தான் அளத்த மயில் வீரா
அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை மீது உதித்த அழகா திரு ஏரகத்தின் முருகோனே

என்று சொல்கிறார்.
அப்படிப்பட்ட யோக மிக்க பெரு வாழ்வு வேண்டும் என்றால் 48 நாட்களுக்கு ஒருமுறை திரு ஏரகமோ,பழனி மலையோ சீரலைவாயோ சென்று முருக பெருமான் தரிசனம் தொடர்ந்து செய்து வரும் போது மிகப்
பிரம்மாண்டமான வாழ்வு வாழமுடியும்.

பணம் பெறுக வேண்டும். நாம் கொடுத்த பணம் திரும்பி வர வேண்டும். நமக்கு பணத்தேவை இருந்தால் கேட்டவுடன் கிடைக்கவேண்டும். அப்படி கிடைத்த பணம் நல்ல நிலையில் செலவு செய்து அது நமக்கு மேலும் பணத்தினை பெருக்கி வருமானம் தரவேண்டும் என்றால் வீட்டின் வடமேற்கு வாஸ்து ரீதியாக எந்த தவறும் இருக்கக்கூடாது.

ஒருசில முக்கிய வடமேற்கு தவறு கள் நமது வாழ்க்கையையே தொலைத்து விடக்கூடிய அமைப்பாக இருக்கும்.
அதாவது வடமேற்கு மூடப்பட்ட அமைப்பு
வடமேற்கு தவறான படிஅமைப்பு.
வடமேற்கு பள்ளம்
வடமேற்கு தவறான தெருக்கள், சாலைகள்
வடமேற்கு கழிவு நீர் தொட்டி தவறான அமைப்பில் வாஸ்து நிபுணர் துணை இல்லாமல் அமைத்தல் .
வடமேற்கு இடத்தில் தவறான அமைப்பில் கழிவறை கட்டுதல்.
இப்படி 50க்கும் மேற்பட்ட விசயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
ஆக இப்படி ப்பட்ட எந்த தவறும் நமது இல்லத்தில் இல்லாது இருந்தால் நாம் என்றும் செல்வந்தர் தான்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in all over tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment