vastu for it office

வாஸ்து அமைப்பில் கணிப்பொறி சார்ந்த தொழில் விளக்கங்கள்.

 

vastu for it office
vastu for it office

வாஸ்து அமைப்பில் கணிப்பொறி சார்ந்த தொழில் விளக்கங்கள்.

தொழில்கள் என்பது மக்கள் மூலமாக பலவிதமான முறைகளை கொண்டு செய்யப்படுகின்றன. அப்படி தொழில்களை செய்கின்ற மக்கள் அனைவரும் அத்தொழிலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கிறது என்று சொல்லி விட முடியாது. அதற்கு காரணம் அவர்கள் செய்யும் தொழிலில் இருக்கும் ஈடுபாடு மற்றும், அவர்களுடைய முதலீடு தான் காரணம் என்று சொன்னாலும், அவர்கள் தொழில் செய்யும் இடத்தின் வாஸ்து அமைப்பு மட்டுமே அடுத்த கட்டத்திற்குக் அவர்களை அழைத்து செல்லும்.
எந்த தொழிலாக இருந்தாலும் அதனை செய்யக்கூடிய அனைவருக்கும் லாபம் என்பது ஒரே விதமாக கிடைப்பது இல்லை.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் என்னுடைய வாஸ்து சாஸ்திர பயணத்தின் ஆராய்ச்சியில் ஒரு மனிதன் தான் தேர்ந்தெடுக்கும் தொழிலில் மிக பெரிய வெற்றியை நீண்ட நெடுங்காலமாக அடைகிறார் என்றால் அவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வாஸ்துவில் உள்ள சில இயற்கை விதிமுறைகளை அவன் கடைபிடித்து கொண்டிருக்கும் நபர் என்பதே காரணம் ஆகும்.

{(software ) கணிப்பொறி துறைக்கு வாஸ்து எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை பார்ப்போம்.
சாப்ட்வேர் என்கின்ற மென் பொருள் துறையில் எந்த மாதிரியான தொழிலாக இருந்தாலும் அதாவது சிறிய கம்ப்யூட்டர் விற்பனை மையம் மற்றும், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் முதலாக தொடங்கி பெரிய கம்ப்யூட்டர் கடை மற்றும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெரிய ஐ.டி நிறுவனங்கள் வரை அனைவருக்கும் வாஸ்து விதிகள் பொருந்தும்.சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும்,
வடக்கு கிழக்கு பகுதியில் நல்ல இடைவெளி இருக்க வேண்டும்.
சாலை அமைப்புகள் தவறான தெருகுத்துக்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

I T நிறுவன கட்டிடங்கள் சதுரம் அல்லது செவ்வகமாக மட்டுமே கட்ட வேண்டும். தென்மேற்கு உயரம் வடகிழக்கு பள்ளம் போன்ற அமைப்புகள் இருப்பது சிறப்பு.இல்லை என்றாலும் சமமான இடமாக இருக்க வேண்டும்.
வடகிழக்கு முழுவதும் திறந்த வெளியாக இருந்து தென்மேற்கு மூடப்பட்ட இடமாக இருந்தால் மிகமிக நன்று. மிகமிக முக்கியமான பணியாக கட்டிடத்தின் உள் அமைப்பில் நிறுவன ஊழியர்கள் அமரக்கூடிய இடங்களும், நாற்காலி மற்றும் மேஜைகள் வாஸ்து அமைப்பை உட்புகுத்தி ஊழியர்களை உட்கார வைக்க வேண்டும். ஆக எனது வாஸ்து அறிவின் படி,கணிப்பொறி சார்ந்த தொழில் செய்பவர்கள் எப்போதுமே வெற்றி அவர்களிடம் தான் இருக்கும் என்பது எனது அனுபவத்தில் கண்டரிந்த விசயம் ஆகும்.