கல்லூரி கல்வி நிலையங்களுக்கு வாஸ்து வேண்டுமா?

மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது கல்விச் செல்வமே. கல்வி அறிவு இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் பகுத்தறிவு பெற்ற மனிதனாக விளங்க முடியும். அப்படிப்பட்ட கல்வியை கொடுக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
கல்லூரி மற்றும் கல்வி நிலையங்களானாலும் கட்டிடம் என்பது சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த வகையில் பள்ளி மற்றும், கல்லூரி , பல்கலைகழகங்கள் பாலிடெக்னிக் கல்லூரி,மாண்டிசேரி பள்ளி எதுவானாலும் கட்டிட அமைப்பு என்பது சதுரம், செவ்வகம் மட்டுமே. அதுவும் சதுரத்தில் வெட்டுப்பட்ட அமைப்பாக மற்றும் இழுத்த படைப்பாக அல்லது இணைந்த அமைப்பாக எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது.
ஒரு சில கல்வி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கும், ஒரு சில கல்வி நிறுவனங்கள் தோல்வியில் முடிவதற்கும்,வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டு. ஒரு பள்ளி என்றால் அப் பள்ளியில் அல்லது கல்லூரியில் அல்லது யுனிவர்சிட்டியில் காலியிடம் என்பது, விளையாடும் இடம் என்பது மொத்த இடத்தில் வடகிழக்குப் பகுதிகளில் இருக்க வேண்டும்.
இதனை எப்படி சொல்ல வேண்டும் என்று சொன்னால், திருவாரூர் கோயில் ஐந்து வேலி, கோயில் குளம் ஐந்து வேலி , அக்கோயிலுக்கு மலர் கொடுக்கும் செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்று ஒதுக்கி இருக்கிறார்களே அது போல, பள்ளியின் கட்டிடங்கள் ஒரு பங்கும், பள்ளியின் விளையாடும் இடம் ஒரு பங்கும், பள்ளியில் ஹாஸ்டல் என்று சொல்லக்கூடிய மாணவ மாணவிகள் தங்கும் விடுதி பகுதி ஒரு பங்கும் இருந்தால், அது மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். வாஸ்து அமைப்பில் தென்மேற்கில் கல்வி நிலையங்களும், வடமேற்கில் தங்கும் விடுதிகளும், ஹாஸ்டல் என்று சொல்லக்கூடிய தங்கும் விடுதிகளும், வடகிழக்கு பகுதியில் விளையாடும் இடங்களும், இதனை மூன்றாக பிரித்து அமைக்கும்பொழுது அற்புத வெற்றியை கொடுக்கும் கல்வி நிறுவனங்களாக மாறிவிடும்.
Tuition Center, Coaching Center மற்றும் வாழ்வியல் தொழில் பயிற்சி கல்லூரி மற்றும் Tutorial College மற்றும் மழழையர் பள்ளிகள் போன்ற சிறு சிறு கல்வி நிலையங்களும் வாஸ்து சாஸ்திரத்தில் இருந்தால் ஒருகாலத்தில் அதுவும் பெரிய கல்வி நிறுவனங்களாக மாறிவிடும்.
கல்வி நிறுவனங்களில் படிக்கும் குழந்தைகள் எப்பொழுதும் வடக்கு, கிழக்கு திசையை பார்த்த அமைப்பாக அமர்ந்து படித்தால் படிப்பு நன்றாக வரும். படிக்கும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பச்சை நிற கரும் பச்சை உபயோக படுத்தவும்.எழுதும் சாக்பீஸ் என்பது மஞ்சள் நிறமாக இருப்பது சிறப்பு.அதேபோல வாரத்தில் ஒருநாள் மஞ்சள் நிற காகிதத்தில் சிவப்பு நிற பேனாவால் எழுத வைக்க வேண்டும்.இதனால்கல்வி அறிவு விருத்தியாகும்.மேலும் இதனை தொடர்ந்து பழகும்போது ஞாபக சக்தி கூடும்.