வாஸ்து அமைப்பில் கதவுகளில் இறைவடிவங்களை செதுக்கலாமா?

vastu for doors

வாஸ்து அமைப்பில் கதவு

ஒருவரின் கதவின் அமைப்பையும் அதன் கனத்தையும் வைத்தே அவர்களின் செல்வநிலையை எடைபோடமுடியும்.அப்படிப்பட்ட வாயில்கள் வாஸ்து அமைப்பின் படி உச்சபகுதியில் அமைய வேண்டும். அப்படி உச்ச பகுதியில் அமைந்தால் வாழ்க்கையில் அனைத்து விசயங்களையும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலை ஏற்படும். இதே நமது பழந்தமிழர் மனையடி ஆயாதி கணிதத்தில்  மாறுபாடு உள்ளது. ஆதாவது மொத்த பகுதியை 9  பகுதிகளாக பிரித்து அதில் சூரியன் சந்திரன் செவ்வாய் நீக்கி, புதன்  குரு பாகத்தில் வைக்க வேண்டும். அதில் சனி ராகு கேது பாதத்தில் இருந்தால்,கடன் நோய் போன்ற பிரச்சினைகளின் இருந்து மீளமுடியாது என்று நமது பழந்தமிழர் மனையடி சாஸ்திரம் கூறுகிறது.இதனை மட்டும் நான் பழைய தமிழர் சாஸ்திரத்தில் இருந்து வேறுபடுகின்றேன்.

இதற்கு எனது விளக்கம் என்னவெனில்,சிந்துவெளி நாகரிகத்தில் கதவுகளின் அமைவிடம் முகப்பு சுவரின் மையத்தில் இடம் பெறுவது இல்லை. அதிகமாக அங்குள்ள கட்டிடங்கள் சுவரின் மையத்தில் இல்லாது,முதன்மை சுவரில் ஓரத்தில் மட்டுமே இருந்துள்ளன.

இது எங்கே நமது தமிழர்கள் உட்படுத்தி இருப்பார்கள் எனும் போது  கோயில் சார்ந்த அமைப்புகள் வீட்டிற்கு கொண்டுவந்து விட்டனர்.இந்த அமைப்போடு வந்ததே கதவுகளின் முன்புறம் இறை உருவங்கள் வரைவது ஆகும்.

இன்றைய நவீன வாஸ்துவில் தவறான விசயமாக பார்க்கப்படுவது இறை உருவங்களை எங்கும் வரைவதோ அல்லது கட்டிட அமைப்பில் மரங்களில் செதுக்குவது என்பது மிகப்பெரிய தவறு ஆகும். அப்படி நீங்கள் செதுக்கி எதாவது படங்கள் வேண்டும் என்றால்,பன்னீர் புஷ்பங்களையோ,முண்டக மலர்களையோ,கலச கும்பங்களையோ,சுவஸ்திக் சின்னங்களையோ,வரைந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் மகாலட்சுமி தாயார் உருவங்களை, வினாயக பெருமான் உருவங்களை, கீழ்நோக்கி வரும் கொடி உருவங்களை, கஜலட்சுமி உருவங்களை என்றும் கதவுகளில் செதுக்கி வாழ்க்கை வளமாக வாழ்வதை சிதைத்து கொள்ளாதீர்கள்.

    main door vastumain door vastu

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)