business-architecture-building-construction-and-people-concept-architect-woman-measuring-1024x576

வாஸ்து அமைப்பில் எவை எங்கெங்கு இருக்க வேண்டும்?

business-architecture-building-construction-and-people-concept-architect-woman-measuring-1024x576
business-architecture-building-construction-and-people-concept-architect-woman-measuring-

வாஸ்து அமைப்பில் எவை எங்கெங்கு இருக்க வேண்டும்?

எவை எங்கு வரவேண்டும் என்பதனை முடிவு செய்யும் முன்பு நமது வீட்டின் இடத்தினை நான்கு பகுதிகளாக பிரித்து கொள்ள வேண்டும். அதாவது வடகிழக்கு ஈசான பகுதி மற்றும், தென்கிழக்கில் அக்னி மற்றும்,தென்மேற்கு நையுதி,வடமேற்கில் வாயு பகுதி இபாபடி நான்கு பாகங்களாக பிரித்து கொள்ள வேண்டும்.

அந்தவகையில் ஈசான பகுதியான வடகிழக்கில் வரவேற்பு அறைகளை அமைக்கலாம். மற்றும் படிக்கும் அறைகளையும் அமைக்கலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் வடக்கு மற்றும் கிழக்கு ஈசான்ய பகுதியில் மூடாத அமைப்பில் குழந்தைகளின் படுக்கையறைகளை அமைக்கலாம். அப்படிப்பட்ட படுக்கையறை தரையோடு தரையாக இருக்கும் அமைப்பாக இருக்க வேண்டும். அதேபோல வடகிழக்கில் உணவு உண்ணும் அறையாகவும் அமைத்து கொள்வது நல்லது. அதுவும் தரையோடு தரையாக அமர்ந்து உணவு உண்ணும் அமைப்பில் இருப்பது சிறப்பு.

தென்கிழக்கில் சமயல் அறை மட்டும் அமைப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் தெற்கு வாசல் உள்ள வீடுகளுக்கு இரண்டாவது படுக்கை அறை மற்றும் வராண்டா அமைப்பு மட்டும் ஏற்படுத்துவது நல்லது.

தென் மேற்கு பகுதியில் குடும்ப தலைவரின் படுக்கை அறை மட்டும் இருப்பது மற்றும், பணம் வைக்கும் அறை மற்றும் பொருள்கள் வைக்கும் அறைகளை மட்டும் அமைத்து கொள்ளலாம்.

வாயு பகுதியில் இரண்டாவது படுக்கையறைகள் மற்றும் கழிவறைகளை அமைத்து கொள்ளலாம். மற்றும் விருந்தினர் அறைகள் சமயல் அறைகளை அமைத்து கொள்வது நலம்.

படிக்கட்டுக்களை மேற்கு மத்தி மற்றும் தெற்கு மத்தியில் வரவேண்டும். வெளிப்புற படிக்கட்டுக்கள் வடகிழக்கு மட்டும் வராது அமைக்க வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

error: Content is protected !!