Vastu defects

வாஸ்து குறைபாடுகள்

வாஸ்து குறைபாடுகள் எந்த மாதிரியான விளைவுகளை ஒரு இல்லத்தில் கொடுக்கும்?

வாஸ்து குறைபாடு காரணமாக தனது குழந்தைகள் மற்றும் வாரிசுகளை திட்டுவதும், அடிப்பதும், சாதாரண விசயங்களுக்கு கணவன் மனைவி சண்டை ஏற்படுவது போன்றவை வாஸ்து குறைபாட்டால் தான் ஏற்படும். ஆகவே அங்கு அன்பு என்கிற விசயம் அடிபட்டு போகும்.

சமைத்த உணவை நிம்மதியாக உண்ணக்கூடிய சூல்நிலையை ஒரு இல்லம் கொடுக்க வில்லை என்றாலே அங்கு வாஸ்து என்பது இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல ஒரு இல்லத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கிறது என்று சொன்னாரே வாஸ்து பிரச்சினை இருப்பது என்று அர்த்தம். சமையல் நடந்து கொண்டிருக்கும் போதே வீட்டில் சண்டை, சச்சரவுகள் தொடக்கமாகி .இதனால் குடும்ப தலைவர் கோபித்துக் வெளியே சென்று விடுவார். மனைவியும் சமைத்த உணவை சண்டை காரணமாக சாப்பிடப் பிடிக்காமல் கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஒன்பது கிரக கட்டத்தின் ஆளுமை மனிதர்களின் வாழ்வில் நடந்தாலும், சொந்த வீட்டின் கட்டிட கட்டங்கள் சார்ந்த வாஸ்து சாஸ்திரமும் மனிதனை இயக்கும் வேலையை செய்யும். அதனால்தான் அதனை கிரகப்பிரவேசம் (கிரஹப்பிரவேசம்) என்று அழைக்கின்றோம் .எனவே வீடு நன்றாக வாஸ்துப்படி அமைத்தால்தான் நல்ல வாழ்க்கை வாழ முடியும். இருக்கும். இல்லையென்றால் அங்குள்ள மனிதர்கள் வாழ்வில் பிரவேசம் என்பது போய் வேசம் போடும் வாழ்க்கை அமைந்து விடும்.

Vastu defects
Vastu defects

 

 

 

 

 

 

காற்று, அக்னி உள்ளிட்ட பஞ்சபூதங்களையும் முறைப்படுத்தி வீட்டை அமைத்துக் கொள்வதையே வாஸ்துப்படி வீட்டை அமைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர்.

எடுத்துக்காட்டாக வடகிழக்கு பகுதி ஒரு இல்லத்தில் உயிர்மூச்சு. அப்பகுதியில் ஜன்னல் என்பது இல்லாமல் வீடு இருக்கக்கூடாது. அக்னி மூலை என்பது தென்கிழக்கு, அங்கு சமையலறை அமைப்பது மட்டுமே நல்லபலனை தரும்.

அடுத்தபடியாக தென்மேற்குப் பகுதி நைருதி மூலை எனப்படும். அதனை மூடிமறைத்து, பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதாவது தென் மேற்கு பருவக்காற்று உடல்நிலைக்கு உகந்ததல்ல. அதனால்தான் தென் மேற்கு மூலையை மூடிவைக்க வேண்டும் என்று சாஸ்திரத்தின் வழியாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வீட்டில் தென்மேற்கு பகுதி பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டிய இடம் என்பதால் அங்கு பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. அங்கு பணம், நகை,பீரோ உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்க சொன்னார்கள்.

ஆகவே, வாஸ்து இல்லாத இடத்தில் ஜீவகாருண்ய உயிர்நிலை இருக்காது. வாஸ்து இல்லாவிட்டால் அங்கு நல்ல ஜீவராசிகள் வாழ முடியாது.

அதைப்போல ஆயாதி கணித குழி கணக்கு இல்லாது ஒரு கட்டிடம் கட்டும் பொழுது தவறான பலன்களை கொடுக்கும். இதனைத்தான் நம் முன்னோர்கள் ஆத்தில் போட்டாலும் அளந்து போடுங்கள் என்று சொன்னார்கள். அக்கால வழக்கப்படி ஆத்தில் என்பது வீடு மட்டுமே. அக ஒரு இல்லம் அமைப்பதற்காக பொருள்களைக் கொண்டு இருப்பீர்கள் என்று சொன்னாள் அதனை ஒரு அளவு என்ற முறைப்படுத்தி கட்டிடம் கட்ட வேண்டும். அதுவே ஆயாதி வாஸ்து.

 

Vastu defects

vastu defects and cures,
vastu defects in south east,
vastu defects and remedies,
vastu defects in north east,
vastu defects in south west,
vastu defects and astrology,
vastu defects for south facing house,
vastu defects and effects,
vastu defects and health problems,
north east vastu defects and remedies,
south facing house vastu defects and remedies,
vastu defects in north west corner cut,
removal of vastu doshas (defects),