இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாது இருப்பதற்கு வாஸ்து காரணமா?

இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாது இருப்பதற்கு வாஸ்து காரணமா?

மனித வாழ்வில் இல்லற வாழ்வு என்பது கணவன்-மனைவி வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் அன்பாகவும்,ஆதரவாகவும் வாழ்வதாகும். அதனை புரிதல் என்றுகூடக் கூறலாம். பழைய தலைமுறை வாழ்க்கைக்கும், இன்றைய தலைமுறை வாழ்க்கைக்கும் பலவிதமான இடைவெளிகள் இருக்கின்றன. அக்காலத்தில் சொன்ன திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற வார்த்தை எக்காலத்துக்கும் படுத்தினாலும் இன்று ஒரு சில உணவுப் பழக்கங்கள், வேலைவாய்ப்பு அதாவது வேலை சார்ந்த பலு, தூக்கமின்மை, போன்ற காரணங்களால் இல்லற வாழ்வில் ஒரு இணக்கமான சூழ்நிலை ஆண்களுக்கும், பெண்களுக்கும்,இல்லாத சூல்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதனை இக்கால இளைய தலைமுறையில் ஒருசிலர் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் மன சங்கடங்கள் ஏற்பட்டு இல்லற வாழ்க்கையில் தோல்விகள் ஏற்படுகின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையில் தூக்கமின்மை, வேலைப்பளு இதுபோன்ற சூழ்நிலைகள் ஓரிடத்தில் ஏற்படும் என்று சொன்னால், அந்த இல்லத்தின் தென்மேற்கு, தென்கிழக்கு சார்ந்த பாதிப்புகள் வாஸ்து ரீதியாக இருக்கும்.இதுபோன்ற ஒரு சூழ்நிலைகள் ஏற்பட்டு ஆண்கள் அல்லது பெண்கள் யாராவது ஒருவருக்கு இந்த விரக்தி மனநிலை ஏற்பட்டு இல்லறத்தில் இணக்கமான சூழ்நிலை இல்லாமல் போய் விடுகிறது.

கணவன் மனைவி சார்ந்த வாழ்க்கை பாடம் என்பதனை ஒரு கதை கொண்டு விளக்கம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இரண்டு சிறுவர்கள் 10அடி நீளம் கொண்ட ஒரு நூலின் இரு முனைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கொள்கின்றனர். இந்த நூலைப் பிடித்து அவர்கள் பக்கம் இழுத்து அதற்கு இருவரும் முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் தனது பக்கத்தில் அறுந்து போகாது பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் . மற்றொருவர் தன்னுடைய பகுதி அறுந்து விடாமல் தான் இருக்கும் பக்கமாக வேகமாக நகர்ந்து நூல் இறுக்கமாக இல்லாமல் இருக்கும்படி செய்து கொள்ள வேண்டும். நூல் அறுந்து போகாமல் பாதுகாக்கும் சிறுவன் மிகத்திறமையாக நகர்ந்து நகர்ந்து ஈடு கொடுத்து விட்டு விடுவான். அது போல் தான் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருக்கொருவர் தாழ்ந்து போய், இணைந்து வாழும் வாழ்க்கை தான் குடும்ப வாழ்க்கை. கணவன் மனைவிக்கு இடையே இணக்கமான வாழ்க்கையை யார் புரிந்து கொள்கிறார்கள் என்பதை விட, ஒரு வீட்டில் தென்கிழக்கு, தென்மேற்கு சரியாக இருந்தால் யார் ஒருவரும்,அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தான் என்ற அகந்தை வராது, தனது கணவன். தனது மனைவி. என்ற எண்ணத்தோடு வாழ்வார்கள். இதற்கு ஆயாதி குழிக்கணக்கு
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வசியப்பொருத்தம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி வசியத்தின் புள்ளிகள் ஒரு சரியான அமைப்பில் வந்தால் மட்டுமே அந்த இல்லத்தில் இருக்கக்கூடிய கணவனும்,மனைவியும் வசியமாக இருந்து வாழ்வார்கள் என்பது திண்ணம்.

ஆகவே வசிய பொருத்தம் இருக்கும் அமைப்பில் ஆயாதி குழிக்கணக்கு அளவுகளை அமைப்பது சாலச் சிறந்தது . அந்த வகையில் நான்கு ஜாதிகளில் பெயரில் வைத்தார்கள். பிரம்ம வம்சம், சத்ரிய வம்சம்,வைசிய வம்சம் சூத்திர வம்சம் என்று நான்கு வகையாகப் பிரித்து நான்குக்கும் நான்கு விதமான பலன்களை கொடுத்தார்கள். இதைத்தான் வசியப்பொருத்தம் என்று வைத்தார்கள்.ஒரு இல்லத்தில் வசிய பொருத்தம் கூடி வந்தால் கணவன் மனைவி அன்னோன்ய வாழ்க்கை வாழ்வார்கள்.

error: Content is protected !!