
நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் கவனிக்க வேண்டிய புதிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம். நம்மில் நிறைய மக்களுக்கு வாஸ்து என்பதனை சொந்த வீட்டுக்கு மட்டும் உபயோக படுத்தி கொள்ள முடியும். ஆனால் வாடகை வீட்டில் நாம் வசிக்கும் பொழுது அதனை கொண்டு வருவது என்பது கடினமான பணி. ஆகவே அது சார்ந்த ஒரு சில கருத்துக்களை உங்களின் பார்வைக்கு வளங்குகின்றேன்.
அதிகளவில் வாடகை வீடுகள் என்பது நூற்றுக்கு வீடுகள் 75% வாஸ்து விதிகளுக்கு பொருந்தாத அமைப்பாக இருக்கும் மீதி 25% மட்டுமே வாஸ்துவின் அமைப்பில் வாழக்கூடிய சூழ்நிலையை அளிக்கும் வாடகை வீடுகளாக இருக்கும். வாடகை வீடு கட்டி கொடுக்கின்ற வீட்டு உரிமையாளர்கள் பெரிய அளவில் வாஸ்து பார்ப்பது கிடையாது. அப்படி அமைகின்றபோது அந்த வாடகை பணம் வழியாக ஒரு சில எதிர்மறையான விளைவுகளை தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் ஒரு சில வலி, வேதனை சார்ந்த சம்பவங்களை சந்திப்பார்கள். இதனை ஒரு வாடகை வீட்டு உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொரு வாடகை வீடுகளும் வாஸ்து இருக்கின்ற அமைப்பில் வர வேண்டும்.
ஆகவே எந்த வீட்டு உரிமையாளர்களையும் நாம் குறை கூற முடியாது. ஏனென்று சொன்னால் இன்றைய பொருளாதார நிலை, மற்றும் அவர்களின் கர்மா அவர்களின் நேரம் ஒரு இல்லத்தை கட்டி வாடகை சார்ந்த பணத்தை வாங்க கூடிய சூழ்நிலைக்கு அவர்களாகவே சென்றுவிடுகின்றனர். இந்த இடத்தில் வாடகை வீட்டுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு மனிதர்களும் ஓரளவு வாஸ்து விதிகள் பொருந்தக்கூடிய வாடகை வீட்டை தேர்ந்தெடுத்து போவது சிறந்தது. அல்லது வாடகை வீடு தேடுவதற்கு ஒரு வாஸ்து நிபுணர் துணை வைத்துக்கொண்டு ஒரு வீடு தேடும்பொழுது ஒரு நல்ல வீடு கிடைத்து அந்த வீடு அவர்கள் வாழ்க்கையில் வாடகை வீடு கடைசி வீடாக அமைந்து,அவர்கள் வாழ்வில் அடுத்த நிலையில் சொந்த வீட்டிற்கு செல்ல கூடிய அமைப்பாக மாறி விடும்.
இந்த இடத்தில் வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடாக இருந்தாலும் சரி நாம் அதில் வசிக்கும் பொழுது ஒரு வாகனத்தில் பயணம் செய்வதைப் போலத்தான் சொந்த வாகனமாக இருந்தாலும் வாடகை வாகனமாக இருந்தாலும் ஒரு கேடான விபத்தை சந்திக்கும்போது அந்த வாகனத்தில் உள்ளே இருப்பவர்கள் கட்டாயம் பாதிப்படைவார்கள் அதுபோல வாடகை வீடுகள் குடியிருக்கும் மனிதர்கள் மேல் தாக்கத்தை உண்டு பண்ணும்.
ஒரு வாடகைக்கு செல்லக்கூடிய வீடு என்பது எந்த வீடாக இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு திறப்புக்கள் இருக்க வேண்டும்.
அந்த இடத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் அதிக இடங்கள் இருக்க வேண்டும் தெற்கிலும் மேற்கிலும் குறைந்த இடங்கள் இருக்க வேண்டும்.
ஒரு வாடகைக்கு செல்லக்கூடிய கட்டிடம் என்பது சதுரம் அல்லது செவ்வகம் அமைப்பாக இருப்பது நல்லது
இதற்கு அடுத்த கட்டமாக வடக்கில் இடம் இல்லாமல் இருந்தாலும், கிழக்கில் இடம் இல்லாமல் இருந்தாலும், ஒரு வீட்டில் முதல் குழந்தை அல்லது இரண்டாவது குழந்தை அந்த இல்லத்தில் இல்லாத அமைப்பாக இருக்கும்போது மேற்கூறிய இடங்களை வாடகைக்கு எடுக்கலாம். இதனை ஒரு வாஸ்து நிபுணர் துணைகொண்டு எடுக்கும்பொழுது அதி அற்புதமான பலன்களைப் பெற முடியும்.
மீண்டும் வாஸ்து சார்ந்த நல்ல கருத்துக்களோடு சந்திப்போம் நன்றி வணக்கம்