
வாஸ்துவும் திசை சூட்சுமங்களும் :
திசை சூட்சுமங்களும், திசை காரக அமைப்புகளும் பற்றி இப்பொழுது சொல்லக்கூடிய விசயங்களாகும். இது தனிப்பட்ட வாஸ்து ஆராய்ச்சி கட்டுரை. ஒவ்வொரு திசைகளும் ஒவ்வொரு விசயங்களை பேசும். ஒவ்வொரு திசையும் நமது வீட்டில் உள்ள நபர்களை இயக்கும். இயங்கவிடும். இயங்க விடாமலும் தடுக்கும். மிகச் சரியான அமைப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பை நாம் ஏற்படுத்தி கொடுக்க முடியும் திசைகளின் வழியாக.
தென்மேற்கு சார்ந்த விசயங்கள் :
தனது முன்னோர்கள் குடும்பத்தின் மூத்த குடிமக்கள் பழங்கால பொருட்கள் மூலம் தொடர்பு, தனது விருப்ப வாழ்வு, தனது வாழ்க்கை முறையை அடிக்கடி மாற்றம் செய்து கொள்வது, அல்லது மாற்றம் இல்லாமல் வாழ்வது, தானாக விரும்பி தொழில் தொடங்கி தொடராமல் இருப்பது, தானாக விரும்பி கல்வி கற்காமல் இருப்பது, மூச்சு பயிற்சி சார்ந்த யோகா வாழ்வு, தனக்குத் தெரிந்த விசயங்களை பொருளாதார நோக்கம் இன்றியும், நோக்கத்தோடும் மற்றவர்களுக்கு கற்றுத்தருவது, நாளுக்கு நாள் விலை மதிப்பு அதிகரிக்கக்கூடிய சொத்துக்களை வைத்திருப்பது, தனது வீட்டையே வணிக அமைப்பாக மாற்றுவது, வீடு கட்டி வாடகைக்கு விடுதல், கட்டிடங்கள் மூலம் வருமானம், முறைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுபாடற்ற வாழ்வு வாழுதல், ஒரே துறையில் நீண்ட காலம் இருத்தல், அனைவரிடமும் உணர்வுப்பூர்வமாக பழகாமல், அறிவுப்பூர்வமாக பழகுதல், உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தான விசயங்களில் ஈடுபடாமல் இருத்தல். தனக்கு தீய பெயர் வரும் என்று காரணமாக கெட்ட செயல் செய்யாமல் இருப்பது, மாற்றி யோசித்து தன் தொழிலுக்கு பயன்படுத்தி தனது வழி, வேதனை, எதிர்மறை சம்பவங்களை பொறுத்துக்கொண்டு வெற்றி பெற வைக்கும் மனநிலை, மரபுவழி சிந்தனைகளில் இருந்து விடுபட்டு புரட்சிகரமான சிந்தனைகளில் பொருளாதாரம் உயர்த்த பாடுபடுதல், தனது மாமியார், மாமனார் பற்றி சொல்லக்கூடிய திசை, தனது தொழில் விஸ்தரிப்பு, பலகிளைகள் அமைப்பு, தொழிலில் தனக்கென ஒரு அடையாள முத்திரை (Trade Mark), தொழில் தேவைக்கு அதிகமான உற்பத்தி, உற்பத்திக்கு மேல் அதிக பொருள் வைத்திருத்தல், தொழில் மூலம் மற்ற போட்டியாளர்களை அந்த நிறுவனர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், சிறு வயதிலிருந்தே சேமிப்பு, இரவு நேரத்தில் பணிபுரியாமல், நன்றாக தூங்குதல், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவை உண்டு என்று நம்புதல் (அப்படிப்பட்ட விசயங்களே எங்கும் கிடையாது, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை வைப்பதற்கு ஆட்கள் கிடையாது, ஆனால் எடுப்பதற்கு ஆள் உண்டு, இது ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை என்பது மிகப்பெரிய உண்மை). இதை நம்புவது தென்மேற்கு சார்ந்த விசயமாகும்.