வாஸ்துபடி படுக்கை அறை அமைப்பு

படுக்கை அறை அமைப்பு                                                                                                                                                                                                           படுக்கை அறை அமைப்பு என்றால் மனிதன் தன் மனதை மாற்றம் செய்யம் இடங்கள் ஆகும். அதனால் மிக சரியான அமைப்பில் இருக்க வேண்டும். குடும்ப தலைவரின் படுக்கை அறை என்றால் தென்மேற்கு சார்ந்ததாக இருக்க வேண்டும். இரண்டாம் கட்ட வாரிசுகள் ஆண் என்றால் மேல் மாடியோ அல்லது தெற்கு மத்தியோ, அல்லது மேற்கு மத்தியோ, பெண் சார்ந்த வாரிசுகளாக இருக்கின்ற பட்சத்தில் மேற்கும், வடமேற்கும் சார்ந்த பகுதியோ, தெற்கும், தென்கிழக்கும் சார்ந்த பகுதியாகவோ இருக்கலாம்.

ஆக எப்படி இருந்தாலும் முழுக்க முழுக்க வடமேற்கு தென்கிழக்கு சாராமல் இருக்க வேண்டும். எப்படியும் அந்த மூலைக்கு வராமல் அமைத்துக் கொள்ள முடியும் எனது வாஸ்து விதிகளின் அமைப்பின்படி வடமேற்கு கழிவறை அமைப்பு வந்து விடும். தென்கிழக்கு சமையலறை வந்துவிடும். என்னை பொறுத்தவரை தென்மேற்கு படுக்கை அறைக்கு இணைப்பு கழிவறை, குளியலறை அமைப்பு என்பது தவிர்க்கப்பட வேண்டும். தவிர்த்தால் நல்லது. ஆனால் நடைமுறை வாழ்வில் நான் போகும் இடங்களுக்கு கூட அமைத்துக் கொடுப்பது என்பது கொஞ்சம் சிரமப்பட வேண்டியுள்ளது.

Leave a Comment