பணத்தை இழந்து விட்ட வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கின்றிகளா?இழப்பு இல்லாத வாழ்க்கை வேண்டுமா?

thirumturuganpoondi temple
thirumturuganpoondi temple

வாழ்வில் எதனையும் இலக்காத வாழ்வா உங்கள் வாழ்வு

மிகப்பெரிய பணக்கார வாழ்வு வாழ்ந்து தற்சமயம் கால சூழ்நிலையில் பொருளாதார நிலையில் தாழ்ந்து இருக்கின்றீர்கள் என்றால் மனது ஒன்றி இந்த இறைவனை வணங்கும் போதும்,இந்த தலத்தின் பதிகத்தை பிடும் போதும்,மேலும் இங்குள்ள சண்முக தீர்த்தத்தில் நீராடும் போதும் மீண்டும் இழந்த பொருள்களை பெறுவார்கள். திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றின் வடக்கு பகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன் பூண்டி ஆகும்.  கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது.இதனை கொடிக்கம்பமாக பாவித்து கொள்ள வேண்டும். அதாவது ஆலயத்தில் கொடிமரம் இல்லையென்றால் கூட அதனை ஆகமத்திற்கு எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
 நம்பி ஆருரர்  தன் தோழரான  சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த  போது  திருமுருகன்பூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் பெருமான் திருமுருகன்பூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி வேண்டிக் கொண்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே” என்று கேள்வி கேட்டு பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். 
ஆக உங்கள் வாழ்க்கையில் பொருள், பணம், சொத்துக்கள் சார்ந்த காரியங்களில்  இழப்பு இருந்தாலோ,அல்லது அப்படிப்பட்ட இழப்புகள்  இனிமேல் உங்கள் வாழ்வில் ஏற்படாமல் இருக்க,இங்கு உள்ள இறைவனை வணங்கியும்,இத்தலத்து பதிகத்தினை பாடியும் பலன் பெறலாம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருமுருகன்பூண்டி

தேவாரத் திருப்பதிகம்.
   சுவாமிபெயர் – முருகநாதர் 

    தேவியார் – ஆவுடைநாயகி
திருச்சிற்றம்பலம்
  கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்

 விரவ லாமை சொல்லித்

திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்

 டாற லைக்கு மிடம்

முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்

 பூண்டி மாநகர் வாய்

இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்

 விரவ லாமை சொல்லிக்

கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்

 கூறை கொள்ளு மிடம்

 முல்லைத் தாது மணங்கமழ் முருகன்

 பூண்டி மாநகர் வாய்

எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்

 பாவ மொன் றறியார்

உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்

 கூறை கொள்ளு மிடம்

முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்

 பூண்டி மாநகர் வாய்

இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்

 கட்டி வெட்டன ராய்ச்

சூறைப் பங்கிய ராகி நாடொறுங்

 கூறை கொள்ளு மிடம்

மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்

 பூண்டி மாநகர் வாய்

ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே
தயங்கு தோலை உடுத்த சங்கரா

 சாம வேத மோதி

மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்

 மார்க்க மொன்றறி யீர்

முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்

 பூண்டி மாநகர் வாய்

இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே
விட்டி சைப்பன கொக்க ரைகொடு

 கொட்டி தத்த ளகங்

கொட்டிப் பாடுமித் துந்து மியொடு

 குடமுழா நீர் மகிழ்வீர்

மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்

 பூண்டி மாநகர் வாய்

இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே 
 வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்

 கோவணந் தற்ற யலே

ஓதம் மேவிய ஒற்றி யூரையும்

 முத்தி நீர் மகிழ்வீர்

மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்

 பூண்டி மாநகர் வாய்

ஏது காரணம் எது காவல்கொண்

 டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்

 தோள்வ ரிநெடுங் கண்

மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்

 பாகம் வைத்து கந்தீர்

முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்

 பூண்டி மாநகர் வாய்

இடவ மேறியும் போவ தாகில்நீர்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்

 பற்ற லைக லனா

வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்

 பாகம் வைத்து கந்தீர்

மோந்தை யோடு முழக்கறா முருகன்

 பூண்டி மாநகர் வாய்

ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்

 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே
முந்தி வானவர் தாந்தொழு முருகன்

 பூண்டி மாநகர் வாய்ப்

பந்த ணைவிரற் பாவை தன்னையோர்

 பாகம் வைத்த வனைச்

சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்

 உரைத்தன பத்துங் கொண்

டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்

 ஒன்றுந் தாமி லரே.
        திருச்சிற்றம்பலம்

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com