பல்லாயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில்தான் தொடங்குகிறது

பல்லாயிரம்  பயணம்.

தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ ஒரு மனிதர்கள்
சிலருக்குத்தான் சாத்தியமாய் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. தலைமுறையாய் ஒரு துறையில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் நிறுவனங்களை நடத்த முடியும். மேலும் கிளைகளை விரிவாக்கம் செய்யமுடியும் என்ற நிலைமாறி, இன்றைய காலத்தில் தகுதியும், தன்னம்பிக்கையும், தைரியமும், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

மாநில அளவிலும் தேசிய அளவிலும் பன்னாட்டளவிலும் என நிறுவனங்கள் விரிவடைந்து செல்வதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தன்னால் செய்யக்கூடியதைக்கூட செய்வதற்கு துணிச்சல் வராமல் வானளாவி உயர்ந்து நிற்கும் நிறுவனங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, “நான்கூட இப்படிப்பட்ட நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். ஏனோ முடியவில்லை” என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. “

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Step-and-Journey2.jpg
chennai vastu

” என்பதை நினைவில் வையுங்கள். முதல் அடியை எடுத்து வைக்கவே பயமும் தயக்கமும் இருந்தால் கனவு அப்படியே கனவாகவே இருக்கும். வாழ்நாளும் முடிந்துவிடும். எனவே எதுவாயிருப்பினும் தயக்கத்தை கைவிட்டு துணிச்சலோடு ஒரு முடிவை எடுக்கும்போதுதான் நம் நோக்கங்களை செயல்படுத்த வழிகள் பிறக்கும்.

உங்களின் கனவு நிறுவனத்தை தொடங்குவதற்கு காலதாமதப்படுத்தும் காரணங்கள் வெளியில் இல்லை. உங்களிடம்தான் இருக்கிறது என்பதை உணருங்கள்.

மந்தமான வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு விரைவில் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மாறுங்கள். நீங்கள் கனவு காணும் நிறுவனம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் இல்லாமல் போகட்டும். நிறுவனங்கள் ஏன் தொடங்கப் படுகின்றன? ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கான படிநிலைகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம்.

நிறுவனங்கள் ஏன் தொடங்கப்படுகின்றன?

1. வழக்கமாக ஓரிடத்தில் சென்று ஒரேமாதிரி பணியைக் குறைந்த வருவாய்க்கு செய்து கொண்டிருப்பதில் இருந்து ஒரு மாற்றம் தேவை.

2. வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம்.

3. வருவாயைப் பெருக்குவதன் மூலம் வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொள்ளலாம் எனும் உந்துதல்.

4.தொழில் ரீதியான அனுபவமும், நிதியைத் திரட்டி ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தக் கூடிய ஆற்றலும், சாதகமான புறச் சூழல்களும் அமைந்திருக்கும்போது தாமே ஏன் ஒரு நிறுவனத்தை தொடங்கக் கூடாது? எனும் சிந்தனை.

5.சமூக பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும் தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

6. சமூக, பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும், தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

7.எல்லாவிதமான திறன்களையும் வைத்திருக்கும்போது, தான் ஓரிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் பல பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குபவராக தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அவா.

8. காலப்போக்கிற்கு ஏற்ப மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய நிறுவனங்களைத் தொடங்குதல்.

9. ஓரிடத்தில் படித்த நண்பர்கள், ஒரே இடத்தில் தொழில் பழகியவர்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து தாம் விரும்புகின்ற துறை சார்ந்த நிறுவனத்தை தொடங்குவது.

10.ஏற்கனவே நடத்தப்பட்டுவரும் நிறுவனத்தின் துணைப்பொருட்கள் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தாமே அவற்றை இன்னொரு நிறுவனத்தின் மூலம் தயாரித்தால் என்ன என்கின்ற முடிவு.

இப்படி பல்வேறு அம்சங்களும்,காரணங்களும் நிறுவனங்கள் தொடங்குவதற்கு உந்துகோளாக அமைகின்றன.ஆக நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று ஆராய்ந்து .அந்த நிலைக்கு நாம் வரவில்லை என்றால்.அந்த நிலைக்கு வந்த பிறகு புதிய நிறுவனம் தொடங்கும் பணியை செய்கின்றிர்கள் என்றால் அது எந்த துறையாக இருந்தாலும் நீங்கள் வெற்றியாளர்களே.
#Business #success #industries

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment