பொன் பொருள் பெருகி வறுமை நீங்க வேண்டுமா?

வட்டித்தொழில் செய்பவர்கள், வங்கிப்பணியில் உள்ளவர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டுமா?

பொன் பொருள் பெறுவதற்கும் , வறுமை நீங்குதற்கும்,

நம்பி என்ற திருப்பதிகம்.

சுந்தரர் பெருமான்

 சுந்தரர் திருமுதுகுன்றம் வந்து இறைவனின் திருமுன்பு இத்திருபதிகத்தை  பாடி பன்னீராயிரம் பொன் பெற்றார் .இந்த பொன்னையே மணிமுத்தா நதியில் போட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்த வரலாறு நடந்த பதிகம்.

chennaivasthu.com
chennaivasthu.com

மெய்யைமுற் றப்பொடிப்

திருச்சிற்றம்பலம் 

மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி

வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி 

 கையில்ஓர் வெண்மழு ஏந்தியோர் நம்பி

கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி

செய்ய நம்பிசிறு செஞ்சடை நம்பி  

 திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்  எய்த நம்பி

என்னை ஆளுடை நம்பி       எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

646 திங்கள் நம்பிமுடி மேல்அடி யார் பால் 7.63.2

           சிறந்த நம்பிபிறந் தஉயிர்க் கெல்லாம் 

 அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும் 

           அமரர் நம்பிகும ரன்முதல் தேவர் 

 தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி 

           தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும் 

 எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி 

           எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

647 வருந்த அன்றுமத யானை உரித்த 7.63.3

            வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம் 

 அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த 

           அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம் 

 புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி 

           பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி 

 இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி 

           எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

648 ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் 7.63.4

           உரிய நம்பிதெரி யம்மறை அங்கம் 

 கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக் 

           குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்தும் 

 சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி 

           செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும் 

 ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி 

          எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

649 குற்ற நம்பிகுறு கார்எயில் மூன்றைக் 7.63.5

           குலைத்த நம்பிசிலை யாவரை கையிற் 

 பற்று நம்பிபர மானந்த வெள்ளம் 

          பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால் 

 மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன் 

           மதியி லேன்படு வெந்துயர் எல்லாம் 

 எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி 

          எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

650 அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய் 7.63.6

           ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள் 

 தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி 

           சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம் 

 தரித்த நம்பிசம யங்களின் நம்பி 

           தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை 

 இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி 

           எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

651 பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் 7.63.7

           பிரமனும் என்றிவர் நாடியுங் காணா 

 உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே 

           உலகு நம்பிஉரை செய்யும தல்லால் 

 முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி 

           முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட 

 தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி 

             எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

652 சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி 7.63.8

             தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி 

 வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய 

             வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார் 

 அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி 

            அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற 

 இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி 

            எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

653 காண்டு நம்பிகழற் சேவடி என்றும் 7.63.9

           கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை 

 ஆண்டு நம்பியவர் முன்கதி சேர 

            அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத் 

 தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத் 

            திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி 

 ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி 

           எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

  

654 கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை 7.63.10

          கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம் 

 பெருக்கும் நம்பி பெரு கக்கருத்தா… 

       இத்துடன் பதிகம் நிறைவு 

  

               திருச்சிற்றம்பலம் 

இச்செய்யுளின் பிற்பகுதியை இறைவன் மறைத்து விட்டார் 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com