வாஸ்து பூஜை
கொங்கு நாட்டு பகுதிகளில் வீடு கட்ட வாஸ்து பூஜை போடும் போது மக்கள் தற்சமயம் குழப்பம் அடைந்து விடுகின்றனர்.அதாவது எங்கு போடுவது என்று இநாத இடத்தில் பூஜை என்பதனை தென்மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து போடலாம். அதாவது கிழக்கில் போடும் போது மேற்கு பார்த்த அமைப்பில் பூஜை போட வேண்டும்.
பூஜை சாமான்களான தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு, மலர்கள், விபூதி,சந்தனம்,குங்குமம், ஊதுபத்தி, கற்பூரம், இவைகள் கட்டாயம் வாங்க வேண்டும். மஞ்சளில் வினாயக பெருமானை ஆகாவனம் செய்து, தலைவாழை இலை வைத்து,பாச்சாங்குச்சி அல்லது பாலக்கோல் நடவேண்டும். இந்த பாலக்கோல் ஆனது மூன்று கிளைகள் இருப்பது போல் இருக்க வேண்டும்.

இந்த பாலக்கோலில் ஒரு வெள்ளைத்துணியை மஞ்சள் கொண்டு நிறத்தை மாற்றி அதில் நவதானியங்கள் மற்றும், ஐம்பொன் காசு வைத்து ,நவரத்தினங்கள் வைத்து கட்டிவிடவேண்டும்.ஆதனை கட்டும் முடி மூன்றாக இருக்க வேண்டும். முடிச்சு என்பது முப்பெருந்தேவியர் நினைவாக போடவேண்டும்.
இந்த பாலக்கோல் குழியாகப் பட்டது அரை அடி அகல விட்டத்தில் இருக்க வேண்டும். ஆழம் ஒருஅடிக்கு இருக்க வேண்டும். இந்த குழி பறிக்கும் போது எந்த வித எலும்புகளும்,கறித்துண்டுகளும் வரக்கூடாது.
இந்த பூஜைக்கு ஐந்து சுமங்கலி பெண்களோ அல்லது ஏழு மற்றும் ஒன்பது எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இந்த பூஜைக்கு பயன்படுத்தும் பால் நாட்டுமாட்டின் பாலக இருத்தல் சிறப்பு.இதற்கு பயன்படுத்தும் தீர்த்தம் முக்கூட்டு ஆற்றின்,கடலின்,குளத்தின் நீராக கூடவே ஆகாயகங்கை நீரும் இருத்தல் சிறப்பு.இந்த நிகழ்வுக்கு வந்த அனைவரும் பாலும்,நீரும் விட்டு தீபதாரணை காட்டி தோண்டி வைத்துள்ள மண்ணை மட்டுமே போட்டு மூட வேண்டும். அந்த மண் அந்த குழியைவிட உயரத்தில் மேவி வருதல் சிறப்பு.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,
whatsapp no :
+91 9965021122.
E-mail:
jagan6666@gmail.com
www.chennaivathu.com
www.chennaivastu.com


