திருப்பாவை பாசுரம் 14,திருவெம்பாவை – 14

திருப்பாவை பாசுரம் 14 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய். #Margazhi #Month_Pooja songs #Tirupavai, #Tiruvempavai பாடல் விளக்கம்: உன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையனிந்த … Read more

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் – 12

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் – 12 #Margazhi,#Thiruppaavai ஆண்டாள் திருப்பாவை -12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய். Margazhi Month Pooja songs Tirupavai, … Read more

திருவெம்பாவை ,திருப்பாவை பதிகம் 10

    திருவெம்பாவை பாடல் 10 பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. … Read more

திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 9

திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 9

  திருப்பாவை 9 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ … Read more

திருப்பாவை , திருவெம்பாவை பாடல் 8

திருப்பாவை , திருவெம்பாவை பாடல் 8   கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடுமேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,ஆவாவென்று ஆராய்ந்து அருள் – ஏலோர் எம்பாவாய். விளக்கம்: பொழுது புலர்ந்து விட்டது என்பதை இப்படி விளக்குகிறார்கள். விடிந்து விட்டது… நீராட எழுந்திரு என்று எழுப்பும் பெண்கள், கறுமையாக இருந்த … Read more

திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள்:7

திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள்:7

ஆண்டாள் திருப்பாவை பாசுரம்:7 கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய் பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், … Read more

ஆண்டாள் திருப்பாவை பாசுரம்: 4

ஆண்டாள் திருப்பாவை பாசுரம்: 4

          ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் … Read more

மார்கழியில் பாசுரங்கள்

திருப்பாவை திருவெம்பாவை

திருப்பாவை பாசுரம்: 3   ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.   பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் … Read more

திருப்பாவை பாசுரம் 1, திருவெம்பாவை பதிகம் 1

ஆண்டாள் திருப்பாவை

திருவெம்பாவை-பாடல் 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னேஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்   பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் … Read more

வேண்டாம் எதிர்பார்ப்புகள்

வேண்டாம் எதிர்பார்ப்புகள் நம் ஏமாற்றங்களுக்குக் காரணம் நம் எதிர்பார்ப்புகள். நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாதபோது அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய், குடும்பப் பிரச்சினைகளாய், பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை. எந்த நிலையிலும் நமக்கு எதிர்பார்ப்புகள் உண்டு. நினைத்தது நடந்தால் சந்தோஷப்படும் நாம், பொய்த்தால் எதிராளியைக் குறை கூறுகிறோம்.மோசமான கணவன், மோசமான மனைவின்னு சொல்றதைவிட மோசமான உறவுனு சொல்றது தான் பல நேரத்துல பொருந்தும். தனித்தனியாகப் பார்த்தால் நல்ல மனிதர்களாக இருக்கிற இரண்டு பேர், திருமணம் … Read more