
கணிதமும் வாஸ்துவும்
டிஸ்கால்குலியா என்பது ஒரு கற்றுக்கொள்ள கூடிய கல்வி குறைபாடு என்று சொல்லலாம். இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எண்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளை நினைவில் வைத்துக்கொள்ள இயலாது, ஆகவே அந்த குழந்தை கணிதம் சம்பந்தப்பட்ட படிப்பில் மெதுவாகவும் துல்லியமின்றியும் இருப்பார்கள் இதனை நாம் என்ன நினைத்து கொள்வோம் என்றால் நமது குழந்தைக்கு கணக்கு பாடம் வரவில்லை என்று நினைத்து விடுவோம்.இதனால் அவனுக்கு கணிதப்பாடம் வரவில்லை அதனால் இனி அவனை டியூசன் விட்டு கணித பாடத்தை டெவலப் செய்யலாம் என்று நினைப்போம் அது முழுக்க முழுக்க தவறு ஆகும்.இந்த இடத்தில் ஜோதிட ரீதியாக புத பகவான் சிறப்பாக இருந்தால் மட்டுமே ஒருவர் கணிதத்தில் சிறப்பு பெற முடியும் என்று ஜோதிட உலகம் சொல்கின்றது.
இதற்கான அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே மாதிரி இருக்காது. மாறுபாடக இருக்கும். சில குழந்தைகளுக்குக் கணிதத்தில் வரும் வார்த்தைகளால் அமைந்த கணக்குகளை போட இயலாமல் இருப்பார்கள்.சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட கணித தீர்வைப் பெறுவதற்கு வரிசைப் படிநிலைகளைப் புரிந்துக்கொள்ள இயலாமல் இருப்பார்கள். சில குழந்தைகள் கணிதத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட கோட்பாடுகளைப் புரிந்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆக ஒவ்வொரு குழந்தையும்வெவ்வேறு வேகத்தில் கணிதத்தை கற்றுக் கொள்கிறது. கணிதக் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்வதற்கு ஒரு சராசரியான குழந்தைக்கு நேரமும் தொடர்ச்சியான பயிற்சியும் வேண்டும்.
ஆனால் ஒரு குழந்தைக்குப் போதுமான நேரமும் கொடுத்து,கூடுதல் அக்கறை செலுத்தியும், இரு மாணவர்களுக்கு கொடுக்கும் அக்கறை செலுத்தியும், வழிகாட்டுதலும், பயிற்சியும் தரப்பட்டப் பிறகும் கூட அந்தக் குழந்தை கணக்கைப் புரிந்துக் கொள்ளாமல் சிரமப்பட்டால், கணிதக் கோட்பாடுகளை அது புரிந்துக்கொள்வதில் குறிப்பிடத் தக்க இடைவெளியும் தாமதமும் ஏற்பட்டால் அந்தக் குழந்தைக்கு டிஸ்கால்குலியா பிரச்னை கட்டாயமாக இருக்கலாம்.இதற்கு கட்டாயமாக வாஸ்துவில் வழி உண்டு. ஒரு வீட்டில் வடக்கு பகுதியில் மிகச்சரியான வாஸ்து அமைப்பை ஏற்படுத்தும் போது தீர்வு உண்டு. இந்த இடத்தில் வாஸ்து சரி செய்த பிறகு சரியாகும் என்று சொன்னால் நடக்காது. ஆனால் அதற்கு பிறகு நல்ல மருத்துவம் கிடைத்து மாற்றம் கொடுக்கும். அப்படி உள்ள வாஸ்து குறைகளை கலையாத போது நமது குழந்தைகளுக்கு அவ்வளவு தான் கணக்கு புரியும் என்று இருந்து விடுவோம்.
*பொருள்களை அளத்தல்
*மனக்கணக்குப் போடுதல்
*தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருத்தல்
கிரிக்கெட் போன்றஎண்களைக் கொண்டிருக்கும் விளையாட்டுகள் மூலமாக இதன் உலகியல் கணிதத்தில் தேர்ச்சி பெற விளையாட விடலாம். மற்றும் விலைகளைக் கணக்கிடுதல், செலவுகளைக் கூட்டுதல்.
சாதாரண வரவு செலவு கணக்குகளை நிர்வகித்தல்அல்லது வீட்டில் செய்யும் செலவுகளை எழுதச்சொல்லுதல் மூலமாக வாழ்வின் கணிதத்தில் தேர்ச்சி பேற வைக்க முடியும்.
பொருள்களை அளத்தல்,
நேரம், வெளி, தூரம் ஆகிய கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்,மனக்கணக்குப் போடுதல்,
வேகத்தையும் தொலைவையும் மதிப்பிட வேண்டியிருக்கும் செயல்பாடுகளில் பங்கேற்றல், உதாரணமாக விளையாடுதல், வண்டி வாகன போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பது, இப்படி பல பயிற்சிகள் மூலமாக அதனை டெவலப் செய்து கொள்ளலாம்.
டிஸ்கால்குலியாவிற்கான சரியான காரணத்தை எந்த மனநல மருத்து ஆய்வுகளால் மற்றும் எந்த நிபுணர்களாலும் இன்னும் கண்டறியவில்லை, அதே சமயம் மரபணுக்கள் மற்றும் மரபு வழி ஆகியவை டிஸ்கால்குலியாவை உண்டாக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

எந்த ஒரு கற்றல் குறைபாடும் குழந்தையின் சுய மதிப்பையும் நம்பிக்கையையும் அவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கச்செய்யும்.இதனால் குழந்தைக்கு நிறைய அழுத்தமும் பதற்றமும் ஏற்படலாம். ஓர் உளவியல் சார்ந்த வாஸ்து நிபுணர் அல்லது ஓர் ஆலோசகர் குழந்தையின் நிலைமையைப் புரிந்துகொண்டு அதனைச் சரி செய்யும் விதமாக ஒருவீட்டில் வாஸ்துவில் உள்ள குறைகளை சரி செய்து கொடுப்பார்கள்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:
jagan6666@gmail.com
Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)