தேடல் இருந்தால் போதும் வெற்றி நம் பக்கம்தான்.

ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவு தருவார். கூட்டில் அல்ல,

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/images-1-1.jpg
http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/images-1-1.jpg

ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவு தருவார். கூட்டில் அல்ல,வெளியில். தேடுவது பறவையின் வேலை.நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒருபுறம் பட்ட வலிகள்! மறுபுறம் வெற்றிக்கான முயற்சிகள். பேசுவதற்கு முன்பு குழந்தை தன் தாயின் பேச்சை கருவாக இருந்தபோது கேட்டு, 1 1/2 வயது வரை கேட்டுக் கொண்டு இருந்து பின்தான் பேச ஆரம்பிக்கும். வாழ்வில் ஏற்படுகின்ற சில சறுக்கல்கள் கூட அப்படித்தான்! வெற்றிக்கான ஓடுதளம் அது!
நாம் போட்டுக் கொண்டிருக்கின்ற சில முகமூடிகளை எடுத்துவிட்டால் போதும், நம் சுயம் வெளி வந்துவிடும். இயல்பாக இருக்கப் பழகி, நம் ரசனைகளை மேம்படுத்தி சக மனிதரிடம் புன்னகையை பரிமாறிக் கொண்டு, நம் முயற்சிகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து கொண்டிருந்தால் வெற்றி நம் கைகளில்தான்.

கற்பனைகளும் கனவுகளும் எப்பொழுதுமே தவறானவை அல்ல! அவை சரியாக இருக்கும் பட்சத்தில்! நம்மைச் சுற்றிலும் சிறந்த மனிதர்களும் வெற்றியாளர்களும் வாழ்வதாகவும் இருப்பதாகவும் ஒரு கற்பனை எண்ணத்தை வைத்துக் கொள்வோம். பின் என்ன? அந்த எண்ணமும் அவர்களின் ஆளுமையும் நமக்கான நட்பாக மாறிவிட வெற்றி என்கிற மணி மகுடம் நம்மிடம்தான்.
இமெயிலும்,ஆன்லைனும் , whatsapp மற்றும் முகநூலும், உலகை நம் விரல் நுனிக்குக் கொண்டு வந்துவிட்டது உண்மை.

உயில்களை முத்திரைத் தாள்களில் பத்திரப் படுத்திய காலம் போய், இறப்புக்குப் பிறகு இமெயில் தங்கள் ரகசியப் பதிவுக்கான இணைய தளம் வந்துவிட்டது. நொடிகள் குறைய குறைய நாம் செய்ய வேண்டிய, முடிக்க வேண்டிய செயல்களின் வேகத்தை நாம் அதிகரிக்க வேண்டும்.

சென்னை செல்லும் இரயிலில் எல்லாப் பெட்டியும் தானே சென்னை செல்லும் என நினைத்து, எப்பொழுதுமே அரக்க பரக்க ஓடி முன்பதிவு இல்லாமல் சென்று, அக்கம் பக்கத்திலிருப்பவரைத் திட்டித் தீர்த்து வேர்த்து விறுவிறுத்து, பாதி வலிமையுடன் சென்னையில் நீங்கள் இறங்குகிறீர்கள் என்றால், அந்தப் பயணம் உடன்பாடானது அல்ல. திடீர்ப் பயணம் என்றால் பரவாயில்லை, முன்பே தெரிந்த பயணத்திற்கு முன்னேற்பாட்டுடன் செல்வதுதான் விவேகம். வாழ்வும் இப்படியே!
எண்ணிய முடிதல் வேண்டும்! வெற்றியே என எண்ணல் வேண்டும்.

நாம் மிகச் சரியானவர்கள் என்பது நம் வரை சரி! ஆனால் மற்றவர்கள் நம்மை சரியில்லை என்று விமர்சனம் நமக்கு தேவை இல்லாத ஒன்று. நமக்காக நாம் வாழ்வோம்! சில நேரங்களில் நாம் எடுத்த காரியம் முடியாதது போல் ஒரு கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்தும். மிரட்சியை உண்டு பண்ணும்.

இதோ! கார்லைல் அவர்களின் வரிகளைப் பாருங்களேன்.

???????உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாதது போன்று தோன்றும்.  ,????????

வெற்றி நிச்சயம்! அது சர்வ நிச்சயம்!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு என்றும் வெற்றியே

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment