காம்பவுண்ட் சுவரின் உயரங்கள் எப்படி இருக்க வேண்டும்?

 compound wall 

ஒரு வீட்டில் பணத்தினால் பிரச்சினை இருக்கும் அல்லது உடல்நிலையில்  பிரச்சனை இருக்கும்.இநத இரண்டும் இல்லாது காரணமே இன்றி மனம் பலவித குழப்பங்கள் இருக்கும். இதனை சிலர் என்ன சொல்வார்கள் என்றால் பேய் பிடித்து விட்டது அல்லது செய்வினை பில்லிசூன்யம் வைத்து விட்டார்கள் என்று இருப்பார்கள்.இதுவெல்லாம் இதற்கு காரணம் கிடையாது.கீழே சொல்லக்கூடிய விசயங்களே அதற்கு காரணம்.

 வாஸ்து படி வீட்டின் சுற்று சுவர் உயரங்கள் வடக்கு கிழக்கு விட தெற்கு மேற்கு உயரமாக,கனமாக  இருக்க வேண்டும் என்பது பொதுவான சுற்றுச்சுவருக்கான விதி ஆகும்.இந்த விதி தனியாக ஒரு பெரிய இடத்தினில் ஒரு வீடு இருக்கின்றது என்றால் சரி.

இந்த விதியை நகரில் பத்துவீடுகள் வரிசையாக இருக்கின்றது என்றால் கொஞ்சம் சிரமம். அதாவது தெற்கு மேற்கு புறங்களில் 3/4 அடி சுவரையும்,வடக்கு கிழக்கு பகுதிகளில் 1/2அடி சுவரினையும் வைத்துக்கொள்வதில் எந்தவித  பிரச்சனையும்  கிடையாது.அதற்காக ஒவ்வொரு வீடும் ஒரு அடி உயர்ந்த அமைப்பில்    கட்டும் போது தொடர்ந்து10 வீடுகள் இருக்கின்றது என்றால் பத்து அடிகள் உயர்த்தி கட்டகூடிய   சூல்நிலை இருந்தால் கடைசி வீடு 10 அடி  உயர்ந்த அமைப்பாக போய்விடும் இது நடைமுறைக்கு சரிபட்டு வராது. அதனால் நமது வீட்டிற்கு மட்டும் பார்த்தால் போதும்.

இதைவிட மிகமுக்கியமான விசயம் ஒரு மனிதர்கள் ஒரு வீடாடில் வாழும் போது நமக்கு என்று ஒரு காம்பவுண்ட் சுவர் வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் ஒரு சுற்றுசுவரை அமைத்துக்ள்ளுங்கள்

சிலவீடுகளில் ஏற்கனவே சுற்றுசுவர்கள் இருந்தாலும் ஒருகாலகட்டத்தில் கட்டட அமைப்பின் காரணமாகவோ,அல்லது ஏதாவது காரணத்தினால் சுற்றுச்சுவர்கள் வெடித்து விடும் இதனால் இதன் எதிர் மறை காந்த ஆற்றல் மோதக்கூடிய தன்மை ஏற்பட்டுவிடும்.

ஒரு புதிய வீட்டில்  நான்கைந்து வருடங்கள் அதில் வாழும் மக்கள் நன்றாக இருப்பார்கள். பிறகு சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். அப்பொழுது அவர்கள் சந்திக்கும் பிரச்சனை எதனால் வந்தது என்று நான் எனது வாஸ்து அறிவினையும், அனுபவத்தையும் கொண்டு ஆராயும்போது இது காம்பவுண்ட் வெடித்த காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்தி உடனடியாக அதனை சரி செய்ய சொன்ன இடங்கள்  உண்டு .

இப்படி வெடிக்ககூடாது எனும் போது கட்டிட அமைப்பில் நான்கு புறமும் ஒரு அளவில் சுவர் கட்டிக் கொள்ளுங்கள். தெற்கு மேற்கு சுவர்களை மட்டும் கனமான அமைப்பில் மாற்றி அமைக்கும் போது ஒரு நல்ல விசயம் வாஸ்து அமைப்பில் நடக்கும். வெடிக்காத அமைப்பில்  காம்பவுண்ட் சுவர் இருக்கும் போது  ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ முடியும். இதனை வாஸ்து சொல்ல போகும் இடங்களில் கடைசியாக சுற்றுச்சுவர் அமைக்கும் போது சொல்லி வருகின்றேன்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com