South west road vastu

வாஸ்து சாஸ்திர அமைப்பில் ஒரு கட்டிடம் மொத்தமாக  வாஸ்து இருக்காது. ஆனால் மிக நன்றாக வாழ்க்கை வாழ்வார்கள். அப்போது யாராவது ஒருவரோ,அவர்களுக்கு தெரிந்த நண்பர்களோ, வாஸ்து சார்ந்த தவறுகள் உங்கள் கட்டிடத்தில் இருக்கிறது  நேர்குத்து அல்லது , தென்மேற்கு குத்து இடத்திற்கு வருகிறது, தற்போது நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் ஆனால் எதற்கும் ஒரு வாஸ்து ஆலோசனை வாஸ்து ஆலோசகரிடம் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் அங்கள் அதை சட்டை செய்ய மாட்டார்கள்.

அப்படிப்பட்ட இடங்கள் ஒரு காலகட்டத்தில் ஒரு சில நேரங்களில் உங்களுக்கு தெரியாமல் செய்யக்கூடிய தவறுகள் உங்களை வேண்டுமென்றே இழுத்து விடக்கூடிய தவறுகளை அந்த தவறான தெருக்குத்து செய்யும். ஆக அதிலிருந்து  தப்பித்துக் கொள்வதற்கு வழி இல்லாமல் போய்விடும்.  எனது அனுபவத்தில் தென்மேற்கு தெருக்குத்துக்கள் எல்லாமே ஒரு பெரிய அளவில் கொடுத்துவிட்டு பிடுங்கிக் கொள்ளும். அது வாழ்க்கையாக இருக்கலாம். அல்லது பணமாக இருக்கலாம். ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தில் ராகு என்பது கொடுப்பது போல் கொடுத்து எடுத்துக்கொள்ளும்.  திருப்பூர் என்கிற ஊர் ராகு சம்பந்தப்பட்டது. அங்கு செய்யக்கூடிய ஏற்றுமதி தொழில்கள் எல்லாமே மிக பிரமாண்டமான அளவில் இருக்கும்.ஒரு காலகட்டத்தில் நான்கு மடங்கு கொடுத்து விட்டு ஐந்து மடங்காக பிடுங்கி விடும். ஆக  முதலீடுகளை சரியாக மாற்றி வைத்துக் கொண்டவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். இல்லை என்றால் அவர்களும் ஐந்து பத்து  வருடங்கள் நன்றாக இருந்து அதற்கு பிறகு  கஷ்டத்தை சந்திக்க கூடிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.ஆக தென் மேற்கு தெருகுத்து ராகு சம்பந்தப்பட்ட விசயம் இதில் நன்றாக இருக்கும் போதே சரி செய்து கொண்டால் தப்பித்து கொள்ள முடியும். யார் கேட்பார்கள்????? விதி வலியது.?????