பண பற்றா குறை நீங்க, பண கஷ்டம் நீங்க,பணம்பெருக பாடவேண்டிய பதிகங்கள்.

பலன் தரும் ஆலயங்கள்

ஆலயம் :திருவீழிமிழலை

       

                               இறைவன்:வீழியநாதர்

                  இறைவி.   :சுந்தர குஜாம்பிகை

                   தீர்த்தம்.     :விஷ்ணு தீர்த்தம்

                   தலவிருட்சம் :வீழிச்செடிகள்

                   பதிகம்பாடியோர்:அப்பர்,சுந்தரர்,ஞானசம்பந்தர்.
எங்கும் இல்லாத சிறப்பாக மூலவருக்கு பின்னே பார்வதி பரமேசுவரர்களின் திருவுருவங்கள் உள்ளன. மகாவிஷ்ணு பூசித்த தலம் ஆகும்.அப்படி பூசை செய்யும் போது 1000 மலரில் ஒரு மலர் குறைய தன் கண்ணையே எடுத்துப் பூசை செய்து பெருமாள் சக்கரம் பெற்ற தலம். எங்கும் இல்லாத சிறப்பாக இங்கே இருக்கும் உற்சவ திருமேனியானை மாப்பிள்ளை சாமி என்று கூறுகின்றனர். இங்கு வந்து வணங்க திருமணம் கட்டாயமாக நடக்கும். இங்கு உள்ள தங்க விமானம், சிற்ப கலையில் வெள்வால் நெற்றி சிறப்பு.சிற்ப வேலை செய்பவர்கள் வேலை பேசும் போது திருவீழிமிழலை வெளவால் நெற்றி நீங்கலாக என்றுதான் பேசுவதாக வரலாறு. தில்லை மூவாயிரவர் போல இங்கு வீழிநூற்றந்தணர் சிறப்பு.

   

சம்மந்த பெருமானும்,அப்பர் பெருமானும், திருவீழிமிழலையில் இருந்தபோது  மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும், அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்பர் பெருமானுடன்  ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். ஓரிரு மாதத்தில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
அப்பேர்ப்பட்ட அற்புதமான பதிகம் கீழே உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது இந்த பதிகத்தினை மனதில் ஒருநிலைப்படுத்தி தினந்தோரும் இல்லத்திலோ ஆலயங்களிலோ படித்து பயன் பெறுங்கள்.

tiruvilimilalai temple
tiruvilimilalai temple

திருச்சிற்றம்பலம்        

        

    வாசி தீரவே, காசு நல்குவீர்    

    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.    1

  

    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்    

    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.   2 

        

    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்    

    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.    3

        

    நீறு பூசினீர், ஏற தேறினீர்    

    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.  4  

        

    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்    

    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5

        

    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்    

    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.    6

        

    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்    

    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.    7

        

    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்    

    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.   .8

        

    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்    

    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.   .9

        

    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்    

    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.   .10

        

    காழி மாநகர், வாழி சம்பந்தன்    

    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.    .11

                     திருச்சிற்றம்பலம்.    

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

http://www.chennaivathu.com

http://www.chennaivastu.com