​நம்மவே முடியாத பலன்களை நமக்கு அள்ளித்தரும் ரகசியம் தெரிய வேண்டுமா?    

வெற்றி எங்கு உள்ளது

இரு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து கொண்டு  இருந்தது. இரண்டு படைகளும் கடுமையாக சண்டை போட்டாலும், ஒரு நாட்டின் படை தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. இதனால் போர் இறுதிக் கட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது.எதிரி படையினரை விடவும் இவர்களிடம் படை வீரர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.இதனால் இந்தப்படையின் வீரர்களுக்கு இனி இந்தப் போரில்  நாம் வெற்றி பெறுவது என்பது கடினம் என்ற எண்ணம் கொண்டு விட்டதால் அனைவரும் பீதி கொண்டு காணப்பட்டனர்.ஆனல் இவர்களின் தளபதிக்கு மட்டும் எப்படியும் போரிலா வெற்றி பெற்று விடுவோம் என்கின்ற நம்பிக்கை சற்றும் குறையாமல் இருந்தது.

     ஆக நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று பலவகையில், யோசனை செய்தார்.இறுதியில் வீரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசத்தொடங்கினார்.
   என்னருமை பெருமைமிகு வீரர்களே இந்த போர் நமக்கு வாழ்வா! சாவா!சம்மந்தப்பட்ட சவால் ஆகும்.உண்மையில் எதிரிகளை நம்மால் வீழ்த்தி வெற்றி பெற முடியும்.அதற்கு தேவையான வலு மற்றும் ஆற்றல் நம்மிடம் உள்ளது. ஆனாலும் எதிரிகளை விட நமாமிடம் வீரர்களின் எண்ணிக்கை எதிரிகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறது.இதுவே நமது வெற்றியில் நமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இது நாம் வணங்கும் கடவுளுக்கும் தெரியும்.அந்தக் கடவுளும் நம்மை கட்டாயம் கைவிட மாட்டார்.
    அதனால் நாம் ஒன்று செய்வோம்.நாம் சண்டையை தொடரலாமா?அல்லது எதிரிகளிடம் சரணடைந்து நமது உயிரினை காப்பாற்றி கொள்ள வேண்டுமா? என்பதனை நாம் வணங்கும் இறைவனிடம் விட்டு விடுவோம்.அவரே இதற்கு ஒரு முடிவு சொல்லட்டும்.

   

     இதை சொன்னதும் அனைவருக்கும் ஒரு வேகம் வந்து விட்டது. மீண்டும் தளபதி பேசினார்,நாம் போரை தொடங்கும் விதமாக இறைவனிடம்  அனுமதி கேட்போம்.அந்தவகையில் என்னிடம் உள்ள நாணயத்தை சுண்டி விடுகின்றேன்.தலை விழுந்தால் நாம் சண்டையை தொடங்கலாம் இறைவன் அனுமதி கொடுத்து விட்டார் என்று எடுத்துக் கொண்டு,இல்லையேனில்,பூ விழுந்தால் சண்டையை நிறுத்தி விட்டு சரணடைந்து விடலாம்.
  உடனே தன் கையில் இருந்த நாணயத்தை தளபதி சுண்டி விட தலை விழுந்தது.உடனே ஆண்டவனே கூட இருக்கின்றார் என்ற   உற்சாகத்துடன் போரில் ஈடுபட்டு குறைந்த அளவு வீரர்கள் இருந்த போதிலும்,எதிரிகளை தோற்கடித்து வெற்றி மாலை சூடினார்கள்.

  அவநம்பிக்கை காரணமாக சோர்ந்து இருந்த வீரர்களை புது நம்பிக்கையோடு போர் புரிய தூண்டிய நாணயத்தை,போர் வெற்றிக்கு பிறகு வீரர்களிடம் தளபதி காண்பித்தபோது அதன் இருபக்கமும் இருந்தது தலை.

 இதிலிருந்து நாம் அறியப்படுவது யாதெனில் நம்பிக்கை வைத்தால் எதனையும் சாதிக்கலாம்.நம்பவே முடியாத பலன்களை நாம் அள்ளலாம்

the secret
the secret

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com