saturn gemstone/சனி – நீலம் நீலக்கல்

நீதிமான், நீதி அரசர்கள், நடுநிலையாளர்கள் இப்படிப்பட்ட மனிதர்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும், எந்தவிதமான அதிகாரத்திற்கு அடிபணிய மாட்டார்கள். இவர்கள் யார் என்று கேட்டால் தராசு என்கிற துலாம் ராசி என்று சொல்வதைவிட சனி சம்பந்தப்பட்ட மனிதர்கள் என்பேன். யாருக்கும் யாருக்காகவும் எதற்காகவும் பயப்பட மாட்டார்கள். ஒரு மனிதனுக்கு சனி என்ற கிரகம் 2,4,6, பத்து பாவங்களுடன் தொடர்பு கொள்கிறது என்று சொன்னால், அந்த மனிதர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்திப்பார்கள். ஆனால்  தொடக்கத்தில் கொஞ்சம் ஒரு தொய்வு இருக்கும். யாராவது ஒருவர் நகர்த்தி விட வேண்டும். ஒரு வாகனம் இருக்கிறது. ஒரு பத்து நாளைக்கு நாம வந்து அதை எடுக்கவில்லை என்று சொன்னால், அது  இயக்குவதற்கு கொஞ்சம் சிரமப்பட வேண்டும். அது போல தான் சனி கிரகமும். அது சூரியனின் தூரத்தில் இருப்பதால் இந்த நிலை. சனி என்பது நெருப்புப் பொறியை குளிர்காலத்தில் பற்ற வைப்பது போல ,அந்த நெருப்புப் பொறியை பற்ற வைத்தால், பற்றிக் கொண்டால் அதை அடைப்பதற்கு சனிபகவானே நினைத்தால் கூட முடியாது.  அந்த அளவுக்கு ஒரு பவர்ஃபுல்லான ஒரு கிரகம் எது என்று சொன்னால் சனி கிரகம் மட்டுமே. அப்படிப்பட்ட சனி கிரகம் குடும்ப உறவுகளில் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் குழந்தைப்பேறு போன்ற விஷயங்களில் ஏழாம் பாவத்தை தொடர்பு கொண்டால், அந்த கிரகத்தின் நீல நவரத்தின கற்களை ஒருவர் தாராளமாக உபயோகிக்கலாம். பணம் வேண்டுமென்கிற மக்களும் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி 2,4,6 பத்து பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது தாராளமாக நீலக் நவரத்தினம் அணியலாம். அதனைவிடுத்து சனி திசை நடப்பவர்களும், சனி புத்தி நடப்பவர்களும், சனியின் நட்சத்திரங்களான உத்திரட்டாதி பூசம் அனுஷம் போன்ற நட்சத்திரக்காரர்களும், மகர கும்ப ராசிக்காரர்களும் அணியலாமா? என்றால் என்னைப் பொறுத்த அளவில் யோசித்து செயல்பட வேண்டும் என்றுதான் சொல்லுவேன்.