Vastu Solution Materials,பரிகாரம் இல்லாத வாஸ்து

Products of vastu

வாஸ்து பரிகார பொருள்கள்

vastu for electric board
vastu for electric board

 

 

 

 

 

 

இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியின் அனைத்து இடங்களிலும், கட்டிடங்கள் கிராம புறங்களிலும் மற்றும் சிறுநகரங்களிலும், சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெறுநகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. இப்படிப்பட்ட கட்டிடங்களை வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு பொறுந்தாது இருக்கும் போது அவ்வில்லத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதியற்ற வாழ்வு அமையும்.இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கொடுத்து கொண்டே இருக்கும்.

உதாரணமாக பணம் அபரிமிதமாக இருக்கும் இல்லத்தில் மன நிம்மதியை பார்க்க முடியாது.
குடும்பத்தில் நிம்மதி வேண்டும் என்பதற்காக கடன்களை அதிகமாக வாங்கிக்கொண்டே இருப்பார்கள். கடன்கள் அதிகமாகி இறுதியில் தவறான முடிவுக்கு செல்லுதல். போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

குடும்பத்தில் யாராவது ஒருவர் ஒட்டுமொத்த குடும்பத்திற்கு வரும் பாதிப்புகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக அவர் வாங்கிக்கொள்வார். அலசி ஆராய்ந்து பார்த்தீர்கள் எனில் உண்மை உங்களுக்கு புரிய வரும்.இப்படி பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வளவு விஷயங்கள் வாஸ்துகுறையுள்ள இல்லங்களில் நடக்கும்.

நாம் நமது மனம் மற்றும் பணம் சார்ந்த பிரச்சனையிலிருந்து வெளிவர முற்படும்பொழுது அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.அதற்குண்டான தீர்வானது பணத்தினால் வாங்கமுடியும் என்று சிலர் நினைக்கின்றனர்.ஆனால் அது பித்தளையை தங்கமாக மாற்றுவது போலத்தான்.

ஆக பஞ்ச பூதங்கள் என்கிற இயற்கையினால் உண்டாகும் தீர்வில் மட்டுமே மனிதனுடைய வெற்றி மனித வாழ்க்கையில் துணைபுரியும். அதாவது கட்டிடங்களில் உள்ள வாஸ்து என்கிற இயற்கை குறையை சரிசெய்யும் போது பிரச்சனைகளுக்குண்டான தீர்வுகள் நிச்சயமாக கிடைக்கும்.

ஒருசிலர் பரிகாரம் என்கிற பெயரில் பலவிதமான தகிடுதத்த வேலைகளை மக்களின் வாழ்வு சார்ந்த இயலாமையை எளிதாக பயன்படுத்தி கொள்கின்றனர். அதாவது வாஸ்துவில் பரிகாரம் என்ற பெயரில் நூறு ரூபாய் மதிப்புள்ள எந்திரத்தை ஐந்தாயிரம் கொடுத்து எந்திரங்கள் பதித்து வைப்பது, அப்படி பதித்து வைத்த எந்திரங்களுக்கு தினமும் ஐம்பது ரூபாய் மதிப்பில் அரைமணி நேரம் பூஜை புனஸ்காரம் செய்வது.அதேபோல அரைஆடி ஆழமாக குழி பறித்து தகடு அடித்து தனது வாழ்வில் குழிபறித்து கொள்வது,அதேபோல் குடித்தால் மரணத்தை விளைவிக்கும் பாதரசமணி கோர்த்த செப்பு கம்பியை பூமிக்கு அடியில் புதைத்து தனக்கு தானே குழிபறித்து கொள்வது.ஒருசில வாஸ்து நிபுணர்கள் கண்ணாடி வைத்தால் நல்லது அதுவும் நான் கொடுக்கும் கண்ணாடி வைப்பது சிறப்பு என்று சொல்வதை கேட்டு வாசல் இல்லாத இடத்தில் வாசல் போல கண்ணாடி வைத்து தனது வாழ்வின் பாதை தெரியாத அளவிற்கு கண் தெரியாது போவது, வாஸ்து மீன் வளர்கிறேன் என்று வாஸ்து மீன்தொட்டி விற்பனை செய்பவர்களை வளமாக்கி விடுவது, வளர்ப்பது, தெருக்குத்துகளுக்கு பரிகாரமாக பிள்ளையார் சிலை வைத்து தனக்கு பிள்ளைகள் இல்லாத நிலையை உறுவாக்கி கொள்வது,

வாஸ்துவில் பரிகாரங்களை நம்பி பிறவிகளிலேயே அற்புதமான அழகான அரிதான மனித வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் நண்பர்களே.வாஸ்துவில் பரிகாரம் என்பது உயிரோடு இருப்பதை தள்ளி வைப்பதும் பிரித்து வைப்பதும் ஆகும். ஆக பரிகாரம் என்பது கடப்பாரையை முழிங்கிவிட்டு இஞ்சி கசாயம் குடிப்பதைப் போன்றது.இதில் பித்தளையை தங்கமாக மாற்ற நினைத்தால் முடியாது.

error: Content is protected !!