வாஸ்து அமைப்பில் வீட்டின்  போர்ட்டிக்கோ பற்றிய எனது விளக்கங்கள்.

portico of the house in the Vastu
portico of the house in the Vastu

கொங்குநாடும்  வீட்டின் போர்ட்டிகோவும்,

எங்கள்கொங்கு பகுதிகளில் போர்டிக்கோ என்கிற அமைப்பை இப்பொழுது எல்லோருடைய வீடுகளிலும் பார்க்க முடிகிறது. இந்த போர்டிக்கோவால் நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? கட்டாயம் கிடையாது. இதனால் வாஸ்துவில் ஒரு வீதிகள் தவறான அமைப்பாகி தீமைகளை செய்யும் ஒரு ஓரு விசயத்தில் தப்பித்து கொள்ள முடியும்.

 

அந்த வீட்டின் ஆயுள், மற்றும் அந்த வீட்டின் வம்ச, அம்ச, மற்றும் ஆதாய, விரய,ஆயாதி வாஸ்து கணிதங்களின் பலன் சரியாக இருக்கும் போது தப்பித்து கொள்ள முடியும். ஆக  போர்டிக்கோ என்கிற முன்முகப்பு மண்டபங்கள் எப்படி விதிகளுக்கு சரியான அமைப்பில் உள்ளதா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த போர்டிக்கோ அமைப்பு என்பது கிழக்கே கள்ளக்குறிச்சி தொடங்கி மேற்கே வெள்ளியங்கிரி மலைவரையிலும்,தெற்கு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் கன்னிவாடி வரையிலும்,வடக்கே கொள்ளேகால்  மற்றும் தர்மபுரி,ஊத்தங்கரை வரையிலும், கடந்த 30 வருடங்களில் தான் இந்த அமைப்பை உறுவாக்குகின்றனர். சில வீடுகளில் தீமைகளை தரக்கூடிய அமைப்பிலேயே போர்டிக்கோவை உருவாக்கி இருக்கிறார்கள். ஒருசில இடத்தில் வாஸ்து நிபுணர் அறிவுருத்தலின் பேரில்  மட்டுமே நன்மை தரும் விதமாக அமைக்கின்றனர்.
வடக்கு வாசல் வீடுகளுக்கு, வடக்கு முழுவதுமே கிழக்கில் தொடங்கி மேற்கு வரை (போர்ட்டிக்கோ) முன்முகப்பு மண்டபம் அமைப்பது நல்லது அமைப்பு சிறப்பு.கிழக்கு வியில் வீடுகளுக்கு கிழக்கு முழுவதும் வடக்கில் தொடங்கி தெற்கு வரை முழுவதும் போர்டிக்கோ என்கிற முன்முகப்பு மண்டபம் அமைப்பது நல்லது.இப்படி அமைக்கும் போர்டிக்கோ மேல் தளத்திற்கு சமமாக இருக்க வேண்டும். அதனை வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் தாழ்ந்த அமைப்பாக ஏற்படுத்துவது தவறு ஆகும்.
 

வடக்கு பார்த்த வீடுகளுக்கு வடக்கு சார்ந்த பகுதியில் வாயில் அமைத்து போர்டிக்கோ பகுதிகளில் வரும் அமைப்பினை ஏற்படுத்தி வடமேற்கில் காலியாக விட்டுவிடுவது மிகவும் தவறு ஆகும். வடகிழக்கு மட்டுமே போர்டிக்கோ இருந்து. வடமேற்கு இல்லாத அமைப்பாகி விடும்.இது வாஸ்து அமைப்பில் மிகவும் குற்றம் ஆகிவிடும். இதே போல கிழக்கு பார்த்த வீடுகளில் வடகிழக்கில் வாயில் இருக்கும் இடத்தில் மட்டும் போர்டிக்கோ அமைப்பை ஏற்படுத்தி தென்கிழக்கில் காலியாக விடுவது மிகவும் வாஸ்து அமைப்பில் தவறு ஆகும்.

 நிறைய இடங்களில் கேரள மஞ்சி அமைப்பில் நான்கு பக்கமும் தூக்கிய அமைப்பில் முன் முகப்பு மண்டபம் அமைப்பார்கள் அதுவும் வாஸ்துவில் தவறு ஆகும்.
    தெற்கு மற்றும் மேற்கு வீடுகளுக்கு அதன் வீட்டின் திசை அமைப்பில் போர்டிக்கோ அமைப்பை தவிர்ப்பது நல்லது. அப்படியும் அமைகாக வேண்டும் என்றால் ஒரு வாஸ்து நிபுணர் துணை கொண்டு செய்யுங்கள். 
இனி போர்டிக்கோவின் பலன்களை அறிவோம் :
 

portico of the house in the Vastu
portico of the house in the Vastu

தவறான போர்டிக்கோ அமைப்புள்ள வீடுகள் அனைத்துமே ஒருதலைமுறை வீடு என்போம்.

போர்டிக்கோ அமைப்பில் வடமேற்கு தென்கிழக்கு பகுதியில் தவறு நேரும் பட்சத்தில் அந்த வீட்டில் உள்ள வாரிசுகளுக்கு கலப்பு  திருமணம் மற்றும் அது நடந்து பிரிந்து வாழக்கூடிய சூல்நிலைகளையும் அளிக்கும்.
போர்டிக்கோ அமைப்பு தவறாக இருந்து மட்டுமே கடன் சூல்நிலை ஏற்பட்ட வீடுகளும் உண்டு. வாகனங்கள் அங்கு நிறுத்தி அடிக்கடி விபத்து நடக்கக் ஏதுவாக துணைபுரியும் முன்முகப்பு மண்டபங்களையும் எனது வாஸ்து பயணத்தில் பார்திருக்கிறேன்.போர்டிக்கோ அமைப்பை கௌரவ சின்னமாக கருதக்கூடிய இன்றைய சூழ்நிலையில்   வாஸ்து ஞானம் உள்ள நிபுணரின் துணை கொண்டு அமைப்பது நல்லது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)