பணம் பெருக,செல்வ நிலையில் உயர்வு பெற நமது பழக்கவழக்கங்கள்?

money for life
money for life

வரம் வேண்டும்

செல்வங்கள் நிறைந்த மகாலட்சுமி தாயார்  சண்டைகள் இல்லாத வீட்டில் என்றும் வாசம் செய்வாள்  என்பது  உண்மையாகும். ஏனெனில் ஒரு பெரிய பணக்காரனாக இருந்த வியாபாரியின் வீட்டில் எந்தவித செல்வத்திற்கும் பஞ்சம் என்பது இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் அந்த வியாபாரியின் கனவில் மகாலட்சுமி தோன்றி, பக்தனே நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டில் தங்கியிருந்தேன். இப்போதில் இருந்து நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேள் கட்டாயமாக கொடுத்து விட்டு செல்கின்றேன் என்று தாயார் கேட்கின்றார்கள்.
ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்ற வரத்தை மட்டும் கேட்கக் கூடாது என்கின்ற வார்த்தையையும் சொல்கிறார்.
உடனே அந்த பணக்காரன், மகாலட்சுமி தாயாரிடம் என்ன வரம் கேட்பது என்று அவரின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினார்கள். ஆனால் அந்த ஆலோசனைகள் அனைத்துமே செல்வம் தொடர்பாகவே இருந்தது.

அந்த நேரத்தில் பணக்காரனின் மகள் கூறினாள். அப்பா நாம் கடவுளிடம் பொருளாக வேண்டும் என்று வரம் கேட்டால், அந்த பொருள் நாளை நம்மை விட்டு போய் விடும்.

ஆனால் நம்மை விட்டு போகாமல் இருக்கும் சண்டைகள் இல்லாத நம் அனைவருடைய சந்தோஷம், அன்பு மகிழ்ச்சியை கேளுங்கள் என்று கூறினாள். அதே போல் அவனும் மகாலட்சுமியிடம் கேட்டாள்.
அதற்கு கடவுள் சண்டைகள் இல்லாத அன்பு நிறைந்த வீட்டிலேயே நன் இருப்பேன் என்பது என்னுடைய குறிக்கோள் ஆகையால் அந்த வரத்தை கேட்டு மீண்டும் உன் வீட்டில் என்னை இருக்க வைத்து விட்டாய் என்று கூறினாள்.
இதன் மூலம் சண்டைகள் இல்லாத வீட்டிலேயே லட்சுமி குடிகொள்வாள் என்பது மிகவும் உண்மையானது.ஆக நமது வீட்டிலும் சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கை வாழும் போது நம்ம வீட்டிலும் மகாலட்சுமி தாயார் என்றும் நித்திய வாசம் செய்வார்கள். அந்தவகையில் நிம் வாழ்கின்ற வீட்டின்  10 திசைகளில்  வடமேற்கு மிக உன்னதமான வாஸ்து அமைப்பில் இருக்கும் போது .என்றும் அந்த வீடு மாமியார் மருமகள் சச்சரவோ,அண்ணன் தம்பி சண்டைகளோ,அக்கா தங்கை உறவுகளில் சண்டைகளோ,அல்லது சில வீடுகளில் அப்பா மகன் உறவுகளில் எலியும்,பூனையும் போல கூட வாழ்வார்கள். சில இல்லங்களில் அம்மா மட்டும் தனியாக இருப்பார்கள். அப்பா அண்ணன்தங்கை ஒன்றாக இருப்பார்கள். ஓரிரு இடங்களில் அரிதாக பெற்ற குழந்தையை தாய் பிரிந்து அந்த குழந்தையை மாமியார் வளர்க்கூடிய இடங்களும் உண்டு இதற்கு மாற்றம் வேண்டும் என்றால் வீட்டை வாஸ்துபடி மாற்றம் செய்தால் மட்டுமே சாத்தியம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com