மனை வாங்கும் போது  கவனிக்க வேண்டிய விசயங்கள்,

சகுனங்கள்

plot,chennaivasthu
plot,chennaivasthu
வாஸ்துவின் ஆதிக்கம் என்பது மனை வாங்க தொடங்கும் போதே தொடங்கி விடுகின்றது.ஆதனால் மனை வாங்க தொடங்கும் போது எது மாதிரி நிமித்தங்களை கவனித்து செல்ல வேண்டும் என்பதனை நமது முன்னோர்கள் சகுன சாஸ்திரங்களாக கூறியுள்ளனர் அதனை உங்களின் பார்வைக்காக தொகுத்து வழங்குகின்றேன்.
 புதிய  வீடு கட்ட, புதிய தொழிற்சாலைகள் கட்ட,காலி இடங்களை வாங்க செல்லும் போது கட்டாயமாக சகுன நிமிர்தங்களை பார்த்து செல்ல வேண்டும். 
போகும் போது பார்க்க வேண்டிய நிமித்தங்கள்.
அந்த வகையில் நல்ல சகுனங்களாக நாதஸ்வர இசை,திருமண கோலங்களில் மணமக்கள்  வருவது,பசு மாடு பசு கூட்டங்கள், பசுவும் கன்றும் வருதல், எதிரில் வருதல்,தம்பதிகள் அல்லது கூட்டமாக மக்கள் வருவது,நாம் போகும் போது நாய்கள் சந்தோசமாக விளையாடுதல்,திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் கூட்டம், பூஜை பொருள்கள் கொண்டு வருதல்,ஆலய மணி சத்தங்கள்,தமிழ்வேத, சமஸ்கிருத,மந்திர ஓசைகள்.குழந்தை பிறந்த செய்தியை கேட்டல்,அழுக்கு நீக்கிய துணியை அந்த தொழில் செய்பவர் கொண்டு வருதல்.இறைவன் இறைவியுடன் வீதி வழியே தரிசனம் கொடுத்தல்.பூமாலைகள் கண்ணில் படுவது,பெண்கள் தண்ணீர் பிடிக்கும் காட்சிகள், பிரசவம் முடிந்த பெண்ணை பார்ப்பது,கிரக பிரவேசம், திருமணத்தை பார்ப்பது,திருமண நிகழ்வு சம்மந்தப்பட்ட கூட்டங்களை,கிரக பிரவேச கூட்டங்களை,பிராமண கூட்டங்களை,பல மகளிர் கூட்டங்களை, பார்ப்பது என்பது சிறப்பு.
இடத்தில் நாம் காலடி எடுத்து வைக்கும் போது பார்க்க வேண்டிய நிமிர்த்தங்கள்
   வீடு அல்லது இடம் வாங்க போகும் போது ,நாம் எந்த திசை பார்த்த இடங்களை பார்க்க போகும் போதும்,நாம் உணவு உண்ணும் கை பக்கம் பல்லி கத்துகிறது என்றால் அது நல்லவிதமான சகுனம் ஆகும்.
காலி இடங்களை பார்க்க போகும் போது பசுக்களோ,குதிரைகளோ,வெள்ளை புறாக்களோ,அதிக கோழிகள் மேய்ந்தாலும் நல்ல நிமிர்த்தங்களே. இடங்களில் நாம் கால் வைக்கும் போது காக்கைகள் கரைந்து கூட்டமாக,கிளிகள் கூட்டமாக,பறவைகள் கூட்டமாக,பறந்து எந்த திசைகளில் சென்றாலும் சிறப்பு. சிலர் சொல்வார்கள் நாம் நிற்பதில் இருந்து, வலது புறத்தில் இருந்து இடது புறமாக செல்லக்கூடாது என்பார்கள் அதனை நீங்கள் பார்க்க வேண்டாம்.
எதிர்மறை நிமிர்த்தங்கள்
சாலைகளில் பலபேர் சத்தமாக பேசிக்கொண்டு இருப்பது,நாய்கள் சண்டை போட்டு கொண்டு இருப்பது,அழுக்கு துணிகளை எடுத்து செல்லுதல்,காவல்துறை குற்றவாளியை கூட்டி செல்லும் காட்சி,மரம் சாய்ந்து கிடப்பது,விபத்து காட்சிகள்,போதையுடன் ஒருவர் எதிரில் வருவது,  பிச்சை கேட்பவர் எதிரில் வருவது ,இடம் பார்க்க செல்லும் போது நாம் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் ஒவ்வொரு அசைவுகளையும் நாம் கவனித்து செல்ல வேண்டும். இதனை ஒவ்வொரு தடவையும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
 இடம் பார்க்க செல்லும் முதன்முதலில் ஒருதடவை பார்த்தால் போதும்.அதில் எதிர்மறை செயல்களாக இருந்தால் அந்த செயலை தள்ளி போடவும்.
எதிர்மறை சகுன நிமிர்தங்களை நமக்கு உதவி செய்யும் இறைசக்தி ஒரு காரியத்தை தள்ளி தொடங்குங்கள் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல சகுனமாக இருக்கும் போது உடனே வேலையை தொடங்கி செய்யவும்.எதிர்மறை சகுன நிமிர்த்தமாக இருந்தால்,இடத்தை பார்வையிடுவதையும்,இடங்கள் வாங்குவதையும்,கட்டிடங்கள் கட்டுவதையும் தள்ளிப்போடுவது சிறப்பு.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

E-mail: jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com