பணத்தின் அருமையை நாம் உணர்ந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

பணத்தின் அருமையை நாம்  உணர்ந்து கொள்ள என்னசெய்ய வேண்டும்?

உங்கள் குழந்தைகளுக்கு பணத்தின் அருமை பற்றி என்ன புரிந்து வைத்திருக்கின்றனர் என்று நமக்கு தெரியுமா ?

நாம் என்ன சொல்லி தருகிறோம் என்பதை விட அதி அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த இடத்தினில் முக்கியம்.

கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு தேர்வு வையுங்கள்.

பணம் சம்பாதிப்பது சுலபமா ? கஷ்டமா ? இந்த கேள்விக்கு நல்ல விளக்கம் கொடுங்கள்.

உன் பெற்றோர்கள் ஆகிய நாங்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன ?
இதற்கும் நீங்கள் என்ன சிரம படுகின்றீர்கள் என்பதன் விளக்கத்தினை கட்டாயம் சொல்லுங்கள்.

பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் ?

தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?

அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன ?

தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா ?

ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமைஅதனை நமது குழந்தைகளுக்கு உணர்த்திய விஷயத்தில் நாம் பெருமை படலாம்.

உங்கள் குழந்தைகளிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து ஐந்து பொருள்களை வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது உங்கள் கட்டளையாக சொல்லி விடுங்கள்.

விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி ஐந்து பொருள்கள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்… உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.…

தியேட்டரில் 50 ரூபாய் டிக்கெட்டை பிளாக்கில்200 ரூபாய்க்கு வாங்குவது..

புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது……

இப்படி பல விசயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் வாழ்வில் முன்னேறுங்கள். நாம் முழுக்க முழுக்க பணத்தினை சேமிப்பதற்கும் சேமித்த பணத்தினை நல்ல விஷயங்களுக்காக செலவு செய்வதற்கும்,நமது வீட்டில் வடமேற்கு மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

chennaivasthu
chennaivasthu

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

——————————————————-

#vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
#vastu consultant in chennai,
#vastu consultant in coimbatore, erode, tirupur,
#vastu consultant In madurai, trichy, tirunelveli,

Leave a Comment