பணம் மட்டுமே வாழ்க்கையாக இருகின்றிர்களா?

vastu for money
vastu for money

உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?

பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளரும். ஓர் எடுத்துக்காட்டாக
உங்களிடம், பர்ஸில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருக்கிறது . யாருக்கு, பணம் கொடுக்க வேண்டும் என்றாலும் 100 ரூபாய் நோட்டுக்களாகத்தான் கொடுப்பீர்கள்.
உங்களிடம், பர்ஸில் 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்தால் உங்கள் குழந்தைகள் கேட்டால் உங்களால் 10 ரூபாய்களாகத்தான் கொடுக்க முடியும். அதுபோல
உங்களிடம் இருப்பதனைத்தான் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். அதுபோல நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எதை கொடுப்பீர்கள்.

உங்களிடம் அதிகம் உள்ளது எது பயமா ? அல்லது எதற்கும் பயப்படாத தன்னம்பிக்கையா? நன்றாக நாம் பார்த்தோம் என்றால்,
குழந்தைகள் முதலில் கேட்கும் பெரும்பாலான வார்த்தைகள் பெற்றோர்களின் பயத்திலிருந்து உதித்த வார்த்தைகள்தான். வேகமாக ஓடாதே கீழே விழுந்திடுவ’. மெதுவாக செல் என்று சொல்லி
நம் குழந்தைகள் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம்.

ஆனால் கழைக்கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப்படுத்தி விடுகிறார்கள். கீழே விழுந்து விடமாட்டார்கள் என்ற
நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். நமக்கு பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை போடுகின்றோம்.
உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த 100 ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ?
பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள். நிச்சயம் அவர்கள் ஜெயிப்பார்கள்.

பெயர்கூட நமது சொத்துதான்.
நண்பர்கள் நான்கு பேர் தங்கள் அப்பா தங்களுக்கென்று விட்டுச்சென்ற சொத்துக்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

வீடுதான் எனக்குன்னு எங்கப்பா விட்டுட்டு போனது என்றார் ஒருவர். இன்னொருவார் ரிட்டையர் மென்ட் பெனிபிட் 5 லட்சம்தான் எனக்குன்னு எங்கப்பா கொடுத்தது என்றார்.

மற்றொருவர் சுகர்தான் எனக்கு என் பெற்றோர்கள் கொடுத்தது என்றார்.

மேலும் ஒரு நண்பர் சிரித்துக்கொண்டே.
பணம் , தோற்றம், நிறம், உடல்நலம் மட்டுமல்ல பழக்க வழக்கங்களும் நம்ம பெற்றோர்கள் தரும் சொத்துக்கள்தான். எனெனில் உங்கள் அப்பா போல் எல்லா செயல்களிலும் நீங்கள் இருக்கின்றிர்கள் என்று எல்லோரும் என்னைப்பார்த்து சொல்கின்றார்கள், என்றார்.

நீங்கள் என்ன வார்த்தை அடிக்கடி பேச்சில் பயன்படுத்துகின்றீர்களோ, அந்த வார்த்தையை உங்கள் பையனும் அப்படியே பேசுவார்கள். நீங்கள் நிதானமாக எதையும் யோசித்து யோசித்துத்தான் பேசுகின்றிர்கள் என்றால் காலப்போக்கில் உங்கள் பையனும் அப்படியே.

எனவே, உங்கள் மேனரிசங்கள்கூட உங்கள் சொத்துத்தான். நீங்கள் பிரித்துக் கொடுக்காமலேயே உங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அப்பாவுக்கு உள்ள நல்மதிப்பு அப்படியே உங்கள் குழந்தைகளுக்கும் கட்டாயமாக மாறிவிடும். ஒருவருடைய அப்பா எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்பவராக இருந்தால்அவர் மகனையும் அந்த கன்னோட்டத்திலேயே உலகம் பார்க்கும்.

ஆக, உங்கள் நற்பெயர்கூட உங்கள் குழந்தைக்கு சொத்துத்தான்.
சொத்து வேண்டாம் ; சொற்கள் போதும்.அந்த சொற்கள் உங்கள் குழந்தைகளை வாழ வைக்கும்.

பணத்தை சேர்த்து வைத்து செலவழிப்பது போல உங்கள் சொற்களும் சிந்தனைகளாக குழந்தைகளால் சேமிக்கப்பட்டு பிறகு செயல்களாக செலவழிக்கப்படுகிறது.
தேர்வு நேரத்தில், ‘எனக்கென்னமோ நீ நல்ல மதிப்பெண் வாங்குகின்ற மாதிரி தெரியலை’ என்று சொன்னால், பதட்டத்தையும் பயத்தையும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

”’உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் கட்டாயம் வாங்குவாய்,”என்ற நம்பிக்கை வார்த்தைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்தால் அதை தன்னைப்பற்றிய உயர்வு அபிப்ராய சிந்தனைகளாக மாற்றி உங்கள் குழந்தைகள் சேமித்துக் கொள்ளும். பிறகு நம்பிக்கை யோடு செயலாற்றும்.

ஆக நீங்கள் தரும் பணம் மட்டுமே சொத்து கிடையாது.நீங்கள் சொல்லும் சொல்கூட சொத்துதான்.
ஆக பணத்திற்கு பதிலாக, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் முதலில் நீங்கள் சம்பாதியுங்கள்.
லட்சக்கணக்கான பணங்கள் அல்ல. லட்சியங்களே என்றும் நமக்கு சொத்து

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையே குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கத்தான் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பொருளீட்டுகிற அவசரத்தில் குழந்தைகளின் நிகழ்காலத்தை மிதித்துக் கொண்டே ஓடிக்கொண்டிருப்பார்கள்.
குழந்தைகளுக்கு சொத்து சேகரிக்க செலவிட்ட நேரத்தில் பத்தில் ஒரு சதவீதத்தை குழந்தைகளுக்கு அதை பராமரிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்க செலவிட்டிருந்தால் எல்லாக்குழந்தைகளும் ஜெயித்திருக்கும்.
புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல, வாழ்வில் வழி காட்டும் லட்சியங்களே நாம் நம் குழந்தைகளுக்கு தர வேண்டிய சொத்து.

உங்கள் குழந்தைகள் கேட்கும் சொத்து
நம் அப்பா நமக்கு எவ்வளவு சொத்து தரப்போகிறார் என்று எந்த குழந்தையும் யோசிப்பதில்லை. ஆனால் நம்மோடு இன்று நேரம் செலவிடுவாரா? நம்மோடு மனம் விட்டு பேசுவாரா ? என்றுதான் எதிர்பார்க்கிறார்கள்.
குழந்தைகளுக்கு பணம் சேர்க்கும் நேரத்தில் கொஞ்சத்தை அவர்கள் எதிர்பார்க்கும் நேரமாகவே கொடுங்கள்.
24 மணி நேரம் என்பது உங்களிடம் இருக்கும் சொத்து. உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் சொத்து உங்கள் குழந்தைகளுக்குத் தானா?

நமக்கும், நம் குழந்தைகளுக்கு பணம் பணம் என்று தேடி ஓட வேண்டாம்.எனெனில் உங்களுடைய தாத்தாவிற்கு தாத்தா என்ன சொத்து உங்களுக்கு வைத்துவிட்டு சென்றார் என்று யாருக்கும் தெரியாது.இருந்ததை விட நம்மால் உறுவாக்கி இருக்கவும் முடியும்.அல்லது அழித்து இருக்கவும் முடியும்.ஆக நல்ல எண்ணங்களையும், நல்ல நம்பிக்கையையும், கொடுத்து பணம் பணம் என்று பணப்பைத்தியமாக இல்லாமல், மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று நம்பிக்கையோடு வாழுங்கள். அனைத்து செல்வங்களும் நம்மை தேடிவரும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment