பணம் ஈர்க்கும்       ரகசியங்கள் :12

please name borad
please name borad

பணத்துகாக பயணப்படுங்கள்

பயணங்கள் மட்டுமே ஒரு மனிதனுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கின்றன.ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மரண காலத்திற்குள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை பயணப்பட்டு இருக்க வேண்டும் என்று வரலாறு சொல்லுகின்றது.

நமது பயணம் என்பது மற்றவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் பயணமாக இருக்க வேண்டும். எப்படி போதிதர்மரின் பயணம் சீன தேசத்தை மாற்றி போட்டதை போல,

சோழதேசத்தில் சைவ உணவு உண்டு வாழ்ந்த செட்டிநாட்டு மக்கள் 13ஆம் நூற்றாண்டிற்குபிறகு இளையாற்றங்குடி கோயிலை சுற்றி நான்கு கிராமங்களை அமைத்து குடியேறினார்கள்.அவர்கள் பயணத்தின்   காரணமாகவே  அசைவ உணவுக்கு மாறினார்கள்.  இன்று அசைவ உணவு என்றாலே செட்டிநாடு சமையல் தான். அதற்கு காரணம் அவர்களின்ள்பயணம்.

இமயமலை சென்றால் கூட கேரளத்தின் நாயர் தேனீர்கடை வைத்து இருப்பார் என்று, நகைச்சுவையாக சொல்வார்கள்.  அதுபோல உலகில் தமிழர்கள் என்றால் அவர்கள் செட்டிநாட்டின் மக்களே அவர்கள் இல்லாத இடம் உலகில் இல்லை இலங்கை தமிழர்களுக்கு அடுத்த இடத்தில் உலகின் மூலைமூடுக்கெல்லாம் இருப்பவர்கள் இவர்களே ஆவார்கள். இதற்கு காரணம் இவர்களின் பயணம்.    

வங்காள விரிகுடாவை சோழர்களின் ஏரி என்று சரித்திரம் சொல்கின்றது.அதற்கு காரணம் கங்கைகொண்ட சோழபுரம்

ஏன் என்றால் தான் பயணப்பட வேண்டும்.  தன்பயணத்திற்கு இடம் தடையாக இருக்க கூடாது என்பதற்காக வேறு தலைநகரை உருவாக்கி அங்கு பயணப்பட்டார்.இதன் காரணமாகவே இன்று தமிழர்கள் கிழக்குஆசிய நாடுகளில் இருகின்றனர்.

ஒருவரின் பயணம் தன் வயிறு வளர்பதற்காக மட்டும் இன்றி மற்றவர்களின் வயிறை நிறைக்கும் பயணமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் வயிறு எரியும் பயணமாக இருக்க கூடாது.

ஒரு கதை உங்கள் பார்வைக்கு,

ஒரு ஊருக்கு பயணப்பட்டு கறி வெட்டும் தொழில் செய்பவர் குடி வந்தார். அவர் தினந்தோறும் வீடு விட்டு கிளம்பும் போது தனது மனைவியிடம்,நாம் வளர்த்து வரும் ஆட்டை கவனமாக பார்த்து கொள் எங்காவது வெளியில் விட்டு விடாதே என்று சத்தமாக சொல்லிவிட்டு செல்வார்.இதனை மற்றவர்களும் கேட்பார்கள். இதனால் அவர்களும் அந்த ஆடு எப்படி இருக்குமோ என்று பார்க்கும் எண்ணத்தோடு இருப்பார்கள்.

ஒருநாள் தப்பி தவறி ஆடு வெளியில் வந்து விட்டது.ஊர்மக்களும் பார்த்துவிட்டு இதுமாதிரி பெரிய அளவில் நல்ல சிகப்பு நிறம் உடைய ஆட்டினை நமக்கு தெரிந்து எங்கும் பார்க்க வில்லையே என்று பேசிக்கொண்டனர்.ஆடு வெளியில் வந்த தகவல் ஆடு வெட்டும் நபருக்கு தெரிநாது ஊரே பார்க்க தனது மனைவியை அடித்தும்,திட்டியும், பேசினார்.இந்த விசயம் ஆட்டை நேசிக்கும் ஒருவருக்கு தெரிந்து அவர் அந்த ஆட்டை மிக அதிக விலைக்கு அதாவது பத்து மடங்கு விலைக்கு வாங்க முன் வந்து வாங்கிக்கொண்டார்.

இவரும் ஆட்டை விற்றவுடன் வீடு காலி செய்து வேறு ஊர் போய்விட்டார்.ஒருவாரம் இனது ஆடு இளைத்து கொண்டே வந்தது.அதன் நிறமும் வெண்மை ஆனது.அப்புறம் தான் தெரிந்தது வெள்ளை ஆட்டிற்கு சிகப்பு வண்ணம் பூசியது.

இதுபோல நமது   பயணம்  மற்றவர்களை ஏமாற்றும்  பயணமாக இருக்க கூடாது. என்றும் உண்மையான நேர்மையான யாருக்கும் துரோகம் நினைக்காத பயணமாக இருந்தால் உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.உண்மையான பயணத்தை நோக்கி பயணப்படுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

vastu tour and travels
vastu tour and travels