பணம் பெருக வேண்டும் என்றால் எதனை எல்லாம் செய்ய கூடாது?

money,chennaivasthu
money,chennaivasthu

பணம் வேண்டுமா?

மல்லிகை, முல்லை, தாமரை போன்ற மலர்களை பணம் வைக்கும் இடத்தில் தினசரி புதிதாக வைக்க வேண்டும். வலம்புரி சங்கை ஓசை வரும்படி பூஜையறையில் வைக்க வேண்டும். வீட்டு வாசலில் கணபதி, மகாலஷ்மி, வெங்கடாஜலபதி போன்ற தெய்வங்களின் உருவங்களை அல்லது சின்னங்களை வைக்க வேண்டும். மாதத்தில் ஒருமுறை சிறந்த பிராமணருக்கும், வாரத்தில் ஒருமுறை இயலாத            பிச்சைக்காரனுக்கும், தினமும் ஒருமுறை எறும்புக்கும் தானம் கொடுக்க வேண்டும். வீட்டில் துளசி, மல்லிகை போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். சாளக்கிரமம், ருத்ராட்சம், பாதரசம், தாமரைப்பூ, பசுஞ்சாணம் இவற்றில் எதாவது ஒன்று வீட்டில் தினசரி இருக்க வேண்டும்.
இது தவிர செல்வம் பெருக ரகசிய வழிகள் ஏதாவது உண்டா?
நாம் வாழுகிற இடத்திலிருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எட்டு திசைகளில் உள்ள ஊர்களில் இருக்கும் ஆறு, ஏரி, குளம், கடல் இவற்றிலிருந்து எட்டு சிறிய செப்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் எட்டு மூலையிலும் புதைத்து வைக்க வேண்டும். அப்படி புதைக்கும் போது கூடவே வில்வ இலை, நெல்லிமரத்து இலையுடன் கொம்பு மஞ்சளையும் சேர்த்து புதைக்க வேண்டும். புதைத்த பிறகு அந்த இடத்தில் எட்டு வாரங்கள் நீங்கள் எந்தகிழமையில் புதைத்தீர்களோ அந்த கிழமையில், அந்த நேரத்தில் கற்பூரம் ஏற்றி குல தேவதையை வணங்க வேண்டும் அப்படி வணங்கினாலும் செல்வம் பெருகும்.
மேலும் வெள்ளிக்கிழமை வரும் பெளர்ணமி தினத்தில் சுக்கிர ஓரையில் வில்வம், துளசி, செந்நாயுருவி போன்ற வேர்களை முறைப்படி காப்புக்கட்டி எடுத்து வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக்கொண்டாலும் சித்தர்கள் கடைபிடிக்கிற ஜோதிப்புல் சூரணத்தை வீட்டில் வைத்துக்கொண்டாலும் மிக கண்டிப்பாக பணத்தட்டுபாடு இருக்காது. பணத்தை நம்மை நோக்கி ஈர்க்க செய்யும் குருபரம்பரை வழியான மந்திரங்களும் உண்டு. அவற்றை இங்கே பகிரங்கமாக சொல்ல இயலாது. ஆனால் அவைகள் மிகவும் வீரியம் உள்ள மந்திரங்கள். நீங்கள் இங்கு சொல்லப்பட்டதை கடைப்பிடித்து பாருங்கள். இது  பெரிய கோடீஸ்வரர்களாக நீங்கள் ஆகவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கடன் இல்லாமல் விரும்பிய பொருளை வாங்கி அனுபவிக்கும் பேறு பெற்றவர்களாக இருப்பார்கள்.