manaiyadi shastra vastu in tamil

வாஸ்து சாஸ்திரமும் மனையடி ஆயாதி வாஸ்து சாஸ்திரமும்,

manaiyadi shastra vastu in tamil
manaiyadi shastra vastu in tamil

அன்பர்கள் அனைவருக்கும் நேசம் நிறைந்த வணக்கங்கள்.

இன்று தமிழகத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது தமிழர்கள் பின்பற்றிய மிக அற்புதமான மனை பொருத்தங்களை உள்ளடக்கிய வாஸ்து மனையடி சாஸ்திர கலையை யாரும் பின்பற்றுவது கிடையாது. நமது முன்னோர்களான தமிழர்கள் என்றும் முட்டாள்கள் கிடையாது ஏனெனில் அவர்கள் சொல்லிய சாஸ்திரங்கள் அனைத்தும் இன்றைய காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று ஒதுக்கி விட முடியாது.வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு. …. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘ என்பதாகும்.
ஏனெனில் நமது தமிழக பாரம்பரிய உணவு பொருள்களை இன்று பலவித நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்காக அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு, எந்தவித ரசாயனங்களும் இல்லாத எந்தவித பூச்சிக்கொல்லி மருந்துகளும் அடிக்காத ராகி கம்பு சோளம் போன்ற உணவுகளை நோக்கிய பயணத்தில் மக்கள் இருக்கின்றனர்.
அதுபோலத்தான் நமது வடநாட்டில் இருந்து வந்த வாஸ்து சாஸ்திர கலை நமது பழந்தமிழர் முறையில் உள்ள மனையடி சாஸ்திர கலையை சுவிகாரம் செய்து விட்டது. ஆக வடநாட்டில் இருந்து வந்த வாஸ்து கலையிலும் நல்ல விசயங்களும் இருக்கும். அதிலும் காலத்திற்கு ஒவ்வாத விசயங்களும் இருக்கும். நமது பழந்தமிழர் மனையடி சாஸ்திர கலையிலும் காலத்திற்கு ஒவ்வாத விசயங்களும் இருக்கும். நல்ல விசயங்களும் இருக்கும். ஆக அன்னப்பறவை எப்படி தண்ணீரை விலக்கி பாலை மட்டுமே அருந்துகின்றதோ,அதுபோல அது வடநாட்டில் இருந்து வந்த வாஸ்து கலைகள் ஆகட்டும். நமது பாரம்பரிய மனையடி வாஸ்து கலைகள் ஆகட்டும். நமக்கு தேவையான விசயங்களை எடுத்துக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்து அதனால் நான் சொல்லுகின்ற வாஸ்து கலையை கடைபிடிக்கும் மக்கள் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழும் போது அதனால் அவர்கள் மூலமாக நானும் ஒரு நல்ல வாழ்க்கை வாழமுடியும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த விசயத்தை சொல்லுகின்றேன்.நான் சொல்லுகின்ற விசயம்  வாஸ்துவின் வழியில் அதி அற்புதமான வாழ்க்கை வாழகூடிய விசயம் ஆகும்.இந்த அமைப்பின் நான் மனை கட்டிய காரணமாக ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். மற்றும் வீடு கட்டும் மற்றவர்களுக்கு இந்த கலையை  ஆலோசனையாக சொல்லி அவர்களையும், ஒரு நல்ல வாழ்க்கை வாழ வைத்து கொண்டிருக்கின்றேன்.

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்
ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

ஆக வடநாட்டில் இருந்து வந்த வாஸ்துவை மட்டுமே எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் நல்ல வாழ்க்கை வாழ முடியாது. அதுபோல நமது பழந்தமிழர் கலையான மனையடி சாஸ்திரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் நல்ல வாழ்க்கை வாழ முடியாது. இந்த இரண்டு கலைகளும் ஒரு ரயில் தண்டவாளம் போல,  இந்த இரண்டையும் இணைத்து வாஸ்து ஆலோசனை வழங்கும் போது, அதனை கடைபிடித்து ஒரு வீட்டை கட்டும் மக்களும் பழைய வீட்டினை நான் சொல்லக்கூடிய வாஸ்து அமைப்பில் மாற்றம் செய்யும் மக்களும், மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்வார்கள்.ஆக நான் சொல்லக்கூடிய அமைப்பில் வீடுகளை அமைத்து நல்ல வாழ்க்கை ஒருவர் வாழவில்லை எனில் நான் வாஸ்து ஆலோசனைக்கு வாங்கிய பணத்தினை கட்டாயமாக திருப்பி கொடுத்து விடுவேன்.இது இந்த கலையின் மீது சத்தியம்.
 தமிழர் கட்டிடக்கலையின் பிதாமகன் மயனார் வகுத்து கொடுத்த கிரந்தங்களின் சாரத்தை அடைப்படையாக கொண்டு, வாஸ்து தேவர் நூலகராதி,மற்றும் சிற்ப சிந்தாமணி ஆகிய பெயரில் 1894ல் வீராசாமி முதலி அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் நான் சொல்லும் ஆயாதி வாஸ்து கணிதத்தின் அடிப்படையில் ஒரு வீட்டினை அமைக்கும் போது மிகசிறப்பான வாழ்க்கை அதில் வசிப்பவர்கள் வாழ முடியும்.
 வடநாட்டில் இருந்து வந்த வாஸ்து கலையை  தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த காலம்சென்ற ஐயா திரு.திருப்பதிரெட்டி அவர்களை நேரில் பார்த்தவன் என்ற முறையிலும்,அவரே எனக்கு மானசீக குருவாக இருந்த அடிப்படையிலும் இன்று தமிழ்நாட்டின் சென்னையிலும், மும்பையிலும்,

டெல்லியிலும், வடநாட்டு வாஸ்துவை கலையாக சொல்லிக்கொடுக்கும் குருநாதர்களிடம் பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்து எனது வாஸ்து அறிவினை விரிவாக்கம் செய்து கொண்டதன் விளைவாகவும்,
அது போல தமிழ்நாட்டில் ஒரு சின்ன குக்கிராமத்தில் 90 வயது வரை வாழ்ந்து மறைந்த, என்னைப்பொறுத்தவரை மறையாது வாழும் பழம்பெரும் ஜோதிடர் ஐயா திருவாளர். சுப்பிரமணிய சாஸ்திரிகள், எனது வாஸ்து ஈடுபாடு பார்த்து என்மேல் அன்பு கொண்டு 2012 ல் எனக்கு சொல்லிக்கொடுத்த கலையான வாஸ்து மனையடி சாஸ்திரத்தின் அடிப்படையில் அவர் எனக்கு அளித்த பழம்பெறும் நூலான  நமது தமிழக மக்களிடம் மறைந்துவிட்ட பழந்தமிழர் கலையான வாஸ்து ரத்னசிந்தாமணி என்ற 1894ல் வெளியான அரிதான புத்தகத்தின் அடிப்படையில் இன்று வாஸ்துக்கலையை மக்களிடம் அளிப்பதில் பெருமைப்படுகிறேன். ஆக இரண்டு வாஸ்து கலைகளையும் இணைத்து பார்க்கும் தமிழ்நாட்டில் ஒரே வாஸ்து நிபுணர் என்பதில் நான் பெருமை கொள்கின்றேன்.ஆக இரண்டையும் இணைத்து வாஸ்து பார்க்கும் நபர்கள் இன்று தமிழ்நாட்டில் அரிது என்றுதான் சொல்லுவேன்.
நிறைவாக ஒரு விளக்கம் வீட்டில் வாஸ்து பார்க்கிறீகளோ இல்லையோ,ஆயாதி வாஸ்து மனையடி பொருத்தம் பார்காமல் வீடு கட்ட வேண்டாம்.அதுவே உங்களுக்கு  கர்ப்பம் என்கிற பொருத்தத்தின் வழியாக ஆரோக்கியமான வாழ்வையும்,ஆயாதி பொருத்தத்தின் வழியாக ஒரு வீட்டிற்கு விரையத்தை குறைத்து ஆயாதி என்கிற ஆதாயத்தை பெறுக்கி கொடுக்கும். மற்றும் அந்த வீட்டின் வயது பொருத்தம் காரணமாக அந்த வீட்டில் வசிப்பவர்களும் அந்த வீடும் வயது தீர்க்கமாக இருந்தால் மட்டுமே நல்ல ஆழ்ந்து அனுபவிக்கும் வாழ்க்கையை கொடுக்கும். என்னைப்பொறுத்தவரை ஆயாதி இல்லாத வாழ்க்கை அரை வாழ்க்கை என்று மட்டுமே சொல்ல வேண்டும்.ஆக யாருக்கு நல்லநேரம் இருக்கின்றதோ.யார் நல்ல வீடு கட்டுவார்கள் என்ற யோகம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே என்னைச் சந்திக்க முடியும்.மற்றவர்கள் என்னை அவர்கள் வாழ்நாளில் சந்திக்க மாட்டார்கள்.

வரிசையாக பொதுஅளவுகள் உள்அளவுமட்டும் உங்கள் பார்வைக்கு

7 தரித்திரம்.
8 மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 பீடை.
10 ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.
12 செல்வம் அழியும்.
13 பகைமை கூடும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 நஷ்டம்,விரயம் சபலம்.
15 மனக்கிலேசம்.
16 மிகுந்த செல்வம் உண்டு.
17 அரசன் போல் வாழ்வு.
18 அனைத்தையும் இழப்பர்.
19 உயிர் நஷ்டம்.
20 இராஜ யோகம் ,இன்பம்.
21 வளர்ச்சி, பால் பாக்கியம் ,பசுவிருநத்தி.
22 நன்மை இருந்தாலும் குடும்பத்தில் மன வருத்தம்.
23 நோய், கலக்கம்.
24 பரவாயில்லை ,நன்மை, தீமை எதுவும் இல்லை.
25 தெய்வம் உதவாது.
26 செல்வம் உண்டு,அமைதி இருக்காது.
27 மிகுந்த செல்வம் உண்டு.
28 தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
29 பால் பாக்கியம் ,செல்வம்.
30 இலட்சுமி கடாட்சம்.
31 நன்மை நிச்சயம் உண்டு.
32 கடவுள் அருள் உண்டு . வாழ்வில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
33 நன்மையுண்டு.
34 குடி பெருகும்.
35 இலட்சுமி கடாட்சம்.
36 மத்திம பலன்.
37 லாபம் உண்டு, இன்பம் உண்டு.
38 கண்டிப்பாக தவிர்க்கவும் ,கெட்ட சக்திகளின் உறைவிடம்.
39 சுகம், இன்பம்.
40 வெறுப்பு.
41 செல்வம் பெருகும், இன்பம் உண்டு.
42 இலட்சுமி குடியிருப்பாள்.
43 சிறப்பில்லை.
44 கண் போகும்.
45 சகல பாக்கியம் உண்டு.
46 குடி பெயரும்.
47 வறுமை.
48 நெருப்பு பாதிப்பு ஏற்படுத்தும்.
49 மூதேவி வாசம்.
50 பால் பாக்கியம்.
51 வியாஜ்யம்.
52 தான்யம் பெருகும்.
53 விரயம், செலவு.
54 லாபம்.
55 உறவினர் விரோதம்.
56 புத்திரகளால் பலன்.
57 மகப் பேறு இல்லை.
58 விரோதம்.
59 மத்திம பலன்கள்.
60 பொருள் விருத்தி.
61 பகை.
62 வறுமை.
63 குடி பெயரும்.
64 சகல சம்பத்தும் உண்டு.
65 பெண்கள் நாசம்.
66 பத்திர பாக்கியம்.
67 பயம்.
68 பொருள் லாபம்.
69 நெருப்பினால் நாசம்.
70 பிறருக்குப் பலன்.
71 யோகம்.
72 பாக்கியம்.
73 குதிரை கட்டி வாழ்வான்.
74 அபிவிருத்தி.
75 சுகம்.
76 புத்திரர் குறைவு.
77 யானை கட்டி வாழ்வான்.
78 பித்திரர் குறைவு.
79 கன்று காளை விருத்தி.
80 இலட்சுமி வாசம் செய்வாள்.
81 இடி விழும்.
82 தோஷம்.
83 மரண பயம்.
84 செளக்கியம்.
85 சீமானாக வாழ்வர்.
86 இம்சை உண்டு.
87 தண்டிகை உண்டு.
88 செளக்கியம்.
89 பலவீடு கட்டுவான்.
90 யோகம் உண்டு.
91 விஸ்வாசம் உண்டு.
92 ஐஸ்வரியம் சேரும்.
93 பல தேசங்கள் சென்று வாழ்வான்.
94 அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 தனவந்தன்.
96 பரதேசி.
97 கப்பல் வியாபாரம் செய்வான்.
98 பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு.
99 இராஜ்யம் ஆள்வான்.
100 சேமத்துடன் வாழ்வான்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)

 

error: Content is protected !!